Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க
பெண்களே! இந்த அறிகுறிலாம் தெரியுதா? அப்ப உங்க கருப்பையில் கட்டி இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
Uterus Lump Symptoms In Tamil: இன்று நிறைய பெண்கள் கருப்பையுடன் தொடர்புடைய பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதில் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படும் ஒரு பிரச்சனை தான் கருப்பையில் கட்டிகள் இருப்பது. கருப்பையில் கட்டிகள் இருந்தால், உடனே பீதி அடைந்து கவலைப்படாமல், அதைப் புரிந்து கொண்டு உடனே மருத்துவரை அணுகி, அதை எப்படி சரிசெய்வது என்று யோசிக்க வேண்டும்.
கருப்பையில் உள்ள கட்டிகளை கவனிக்காமல் விட்டுவிட்டால், அதனால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். பொதுவாக பெண்களின் கருப்பையில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். ஆனால் நிறைய பெண்கள் அதைப் பொருட்படுத்தாமல், சாதாரணமாக நினைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் கருப்பையில் கட்டிகள் இருந்து அது ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தினால், நிலைமை மோசமாக உள்ளது, உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்பது அர்த்தம். இப்போது கருப்பையில் கட்டிகள் இருந்தால் வெளிப்படும் சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
அசாதாரண யோனி இரத்தப்போக்கு
நீங்கள் சீரான இடைவெளியில் மாதவிடாய் சுழற்சியை சந்தித்து, திடீரென்று அந்த சுழற்சியில் மாற்றத்தைக் கண்டால், கருப்பையில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அதுவும் மாதவிடாய் காலத்தில் அதிகமான இரத்தப் போக்கு, நீட்டிக்கப்பட்ட மாதவிடாய் சுழற்சிகள், மாதவிடாய் சுழற்சிக்கு இடையே இரத்தப்போக்கு போன்றவற்றை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
இடுப்பு பகுதியில் அசௌகரியம்
கருப்பையில் கட்டிகள் இருந்தால், அதன் விளைவாக அடிக்கடி இடுப்பு பகுதியில் மிகுந்த அசௌகரியத்தையும், குத்துவது போன்ற வலி மற்றும் அவ்வப்போது பிடிப்புக்களையும் சந்திக்க நேரிடும். அதுவும் ஒருவர் இடுப்பு பகுதியில் மிகுந்த அசௌகரியத்தை உணர்ந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
அடிக்கடி சிறுநீர் கழிப்பது பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக உள்ளது. அதுவும் ஒரு பெண் அடிக்கடி சிறுநீர் வருவதையும், சிறுநீரை கட்டுப்படுத்த முடியாததையும் சந்தித்தால் கருப்பையில் கட்டிகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே சிறுநீர் கழிக்கும் முறையில் ஏதேனும் தவறாக இருப்பதை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
இடுப்பு பகுதி கனமாக இருப்பது
கருப்பையில் கட்டிகள் இருந்தால், அது இடுப்பு பகுதி வழக்கத்திற்கு மாறாக சற்று கனமாக இருப்பதை உணரக்கூடும். நீங்கள் எதுவும் அதிகமாக சாப்பிடாமல் அல்லது ஏதேனும் கனமான பொருட்களை தூக்காமல், உங்களின் இடுப்பைச் சுற்றிய பகுதி கடினமாகவோ, அசௌகரியமாகவோ இருப்பதை உணர்ந்தால், மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும் என்று அர்த்தம்.
மாதவிடாய் சுழற்சி மாற்றம்
வழக்கமான மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் இடையூறுகள், ஒழுங்கற்ற மாதவிடாய்கள், கால அளவு மாற்றங்கள் அல்லது மாதவிடாய் இல்லாதது போன்றவை கருப்பையில் ஒரு கட்டி இருப்பதை உணர்த்தலாம். எனவே உங்களின் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்களை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
நினைவில் கொள்ள வேண்டியவை
பெண்கள் தங்கள் உடலில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதை கவனித்து உடனே மருத்துவரை அணுகி அவரிடம் தெரிவித்தால், பெரிய பிரச்சனையாக இருந்தாலும், ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சை அளித்து எளிதில் சரிசெய்துவிடலாம். எனவே ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதை விட, ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தானே, குடும்பத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும். எனவே கவனமாக இருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
