Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுமா? அப்ப இந்த 6 பழங்களை சாப்பிடுங்க.. கூறும் அமெரிக்க டாக்டர்...
Fruits For Constipation: கோடைக்காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் மிகவும் பொதுவான ஒரு பிரச்சனை என்றால் அது மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் முக்கியமாக கோடையில் மலச்சிக்கல் ஏற்பட முதன்மையான காரணம் போதுமான அளவு நீர் அருந்தாமல் இருப்பது தான். அதற்கு அடுத்தப்படியாக நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளாமல் இருப்பது.
ஒருவர் இவ்விரண்டையும் சரியான அளவில் எடுத்து வந்தாலே மலச்சிக்கலைத் தடுக்கலாம். மலச்சிக்கலில் இருந்து விடுபட நிறைய பேர் மருந்து மாத்திரைகளை விட, இயற்கை வழிகளை பின்பற்ற விரும்புவர். உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுமா? இப்படி ஏற்படும் மலச்சிக்கலை எளிய வழியில் சரிசெய்ய வேண்டுமா?

அப்படியானால் அமெரிக்க இரைப்பை குடல் நிபுணரான டாக்டர். சேத்தி அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்க உதவும் டாப் 6 பழங்கள் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார். இப்போது அந்த பழங்கள் எவையென்பதைக் காண்போம்.
1. கிவி
கிவி பழத்தில் ஆக்டினிடின் என்னும் பொருள் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தும். அதுவும் கிவி பழத்தில் தோலில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. இலை மலத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. அதோடு கிவி பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இது மலத்தை மென்மையாக்கி, மலச்சிக்கலைத் தடுக்கும்.
2. பேரிக்காய்
பேரிக்காயில் சார்பிட்டால் என்னும் இயற்கை சர்க்கரை உள்ளது. இது மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக சார்பிட்டாலை உட்கொண்டால், அதன் விளைவாக வயிற்று உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவற்றை உண்டாக்கும். முக்கியமாக பேரிக்காயில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது மலத்தை அதிகரித்து எளிதில் வெளியேற்ற உதவி புரிகிறது.
3. ஆப்பிள்
ஆப்பிளில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது குடலியக்கத்தை சீராக்க உதவி புரிந்து, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். அதுவும் ஆப்பிளை எப்போதும் தோலுடன் சாப்பிட்டால் தான் அதன் முழு பலனைப் பெற முடியும். எனவே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஆப்பிளை உட்கொண்டு வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
4. பப்பாளி
பப்பாளியில் செரிமான நொதிகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக நிரம்பியுள்ளன. இவை இரண்டும் குடலியக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்த உதவி புரிகின்றன. அதோடு பப்பாளியில் நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளன. இது மலத்தை மென்மையாக்கி, எளிதில் வெளியேற்ற உதவுகின்றன.
5. ப்ரூன்ஸ்/கொடிமுந்திரி
ப்ரூன்ஸ் பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், சார்பிட்டால் என்னும் இயற்கை சர்க்கரையும் உள்ளது. இவை இரண்டும் நிறைந்த ப்ரூன்ஸ் பழத்தை மலச்சிக்கல் உள்ள ஒருவர் உட்கொண்டு வந்தால், விரைவில் நல்ல நிவாரணத்தைப் பெறலாம்.
6. பெர்ரி பழங்கள்
பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது தவிர இந்த பழங்களில் நீர்ச்சத்தும் உள்ளன. எனவே இந்த பழங்களை உணவில் அதிகம் சேர்த்து வரும் போது, மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, குடலியக்கமும் சீராக இருக்கும்.
எனவே நண்பர்களே! உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுமானால், டாக்டர் சேத்தி பட்டியலிட்டுள்ள பழங்களை தினசரி உணவில் சிறிது சேர்த்து வந்து நன்மைப் பெறுங்கள். மேலும் இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications