Latest Updates
-
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
பானி பூரி சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா? அப்ப இந்த சந்தோஷமான செய்தி உங்களுக்குத்தான்...!
இந்தியாவில் அதிகளவு மக்களால் விரும்பி சாப்பிடப்படும் மிகவும் பிரபலமான சாலையோர உணவு என்றால் அது பானி பூரிதான். மொறுமொறுப்பான பூரிக்குள் பிசைந்த உருளைக்கிழங்கு, சுண்டல் மற்றும் இனிப்பு மற்றும் புளிப்பான சுவை கொண்ட தண்ணீரை நிரப்பி சாப்பிடுவது மக்களுக்கு விவரிக்க முடியாத உணர்வாக இருக்கிறது.
கோல் கப்பே என்று அழைக்கப்படும் பானி பூரி நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய சாலையோர உணவுகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்கள் மற்றும் வகைகளில் விற்கப்படுகிறது.

சுகாதாரம் இல்லாத பொருள் என்று இதன்மீது குற்றம் சாட்டப்படுகிறது, ஆனால் தரமான கடைகளிலோ அல்லது வீட்டிலேயே செய்து சாப்பிடும்போது இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.இந்தியா முழுவதும் பல்வேறு பில்லிங்குடன் இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் என பல்வேறு சுவைகளில் பானி பூரி கிடைக்கிறது.
பானி பூரியை சிந்தாமல் ஒரே முயற்சியில் வாயிற்குள் போடுவது என்பது தனிக்கலை. சுவை என்பதையும் தாண்டி பானி பூரி ஒரு உற்சாகத்தின் அடையாளமாகும். தரமான பானி பூரியால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
செரிமானத்திற்கு நல்லது
இந்த பிரபலமான சாலையோட உணவு மசாலா மற்றும் செரிமானத்திற்கு உதவும் பொருட்களின் கலவையுடன் வழங்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் சீரகம், புளி, எலுமிச்சை ஆகியவை செரிமான நொதிகளைத் தூண்ட உதவும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
இது நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கலாம், ஆனால் உண்மையில் பானி பூரி ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. இதில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன் எலும்புகளை பலப்படுத்தவும் உதவுகிறது.
எடைக்குறைப்பு
இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட அளவு பானி பூரி சாப்பிடுவது எடைகுறைப்புக்கு உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். பானி பூரியில் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதோடு கலோரிகளும் குறைவாக உள்ளன.
இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும்
பானி பூரியின் சுவை என்பதில் அதில் சேர்க்கப்படும் பொருட்களை சார்ந்துள்ளது. இதில் சேர்க்கப்படும் சீரகம், மிளகு, இஞ்சி மற்றும் எலுமிச்சை போன்ற பொருட்கள் உங்களின் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும்.
அசிடிட்டியை குணமாக்கலாம்
பானி பூரியில் நிரப்பப்படும் ஜல்ஜீரா நீர் அமிலத்தன்மையையும், அதனால் ஏற்படும் அசௌகரியத்தையும் குணப்படுத்த உதவும். இதில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி மற்றும் புதினா போன்ற பொருட்களில் வலிமையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது.
பானி பூரியை எப்படி ஆரோக்கியமானதாக மாற்றலாம்?
- வேகவைக்கப்பட் பானி பூரியை உபயோகிப்பது எப்போதும் நல்லது
- நார்ச்சத்தை அதிகரிக்க முளைத்த உருளைக்கிழங்கை உபயோகிப்பது நல்லது
- தேவைப்படும் சட்னிகளை வீட்டிலேயே தயாரிக்க முயற்சிக்கவும், இது ஆரோக்கியத்துடன், சுவையையும் அதிகரிக்கும்
- புளிப்பு மற்றும் கசப்பு நிறைந்த புளி தண்ணீருக்குப் பதிலாக குறைந்த கலோரிகளைக் கொண்ட சீரகத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்
- பானி பூரி சாப்பிடும் அளவிற்கு உடற்பயிற்சிகள் செய்வதும் நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

