Latest Updates
-
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
தினமும் ஒரு சிட்டிகை கருஞ்சீரகத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Black Cumin Seeds Benefits In Tamil: இந்தியாவில் சமைக்கப்படும் ஒவ்வொரு சமையலிலும் நிச்சயம் மசாலா பொருட்கள் இடம் பெறும். அந்த மசாலாப் பொருட்களுள் ஒன்று தான் கருஞ்சீரகம். கருஞ்சீரகமானது நல்ல மணத்தைக் கொண்டது மட்டுமின்றி, ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை மருத்துவத்தில் கருஞ்சீரகம் ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கருப்பு நிறத்தில் உள்ள சிறிய அளவிலான கருஞ்சீரகத்தில் நார்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.

இது தவிர இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, நியாசின் மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் உள்ளன. அதோடு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவையும் உள்ளன.
இவ்வளவு சத்துக்களை கொண்ட கருஞ்சீரகத்தை ஒரு நாளில் மிகச்சிறிய அளவில் எடுத்தால் மட்டுமே நன்மைகளைப் பெற முடியும். அதுவும் ஒரு நாளைக்கு 1-2 கிராம் மட்டு எடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். சரி, தினமும் காலையில் ஒரு சிட்டிகை கருஞ்சீரகத்தை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது காண்போம்.
1. நினைவாற்றல் அதிகரிக்கும்
கருஞ்சீரக விதைகள் நினைவாற்றலை மேம்படுத்த பெரிதும் உதவி புரியும். அதுவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை கருஞ்சீரகத்துடன் தேன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இதனால் மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். முக்கியமாக வயதானவர்கள் இப்படி உட்கொண்டு வந்தால், ஞாபக சக்தி வலுபெறும்.
2. சர்க்கரை நோய் கட்டுப்படும்
கருஞ்சீரகம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவி புரியும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு சிட்டிகை கருஞ்சீரகத்தை ப்ளாக் டீயைத் தயாரிக்கும் போது சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உயர் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வரும்.
3. இதய ஆரோக்கியம் மேம்படும்
கருஞ்சீரகம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுவும் கருஞ்சீரகத்தை தினமும் ஒரு சிட்டிகை எடுக்கும் போது, அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்த உதவி புரிந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
4. அழற்சியைக் குறைக்கும்
கருஞ்சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இதை உட்கொள்ளும் போது, உடலில் உள்ள நாள்பட்ட அழற்சிகள்/வீக்கங்கள் சரியாகும். முக்கியமாக மூட்டு வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், தினமும் கருஞ்சீரகத்தை உட்கொண்டு வந்தால், அது மூட்டுகளில் உள்ள வீக்கத்தைக் குறைத்து, மூட்டு பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.
5. இரத்த அழுத்தம் கட்டுப்படும்
உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளதா? உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமானால், தினமும் காலையில் ஒரு சிட்டிகை கருஞ்சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதைக் குடித்து வாருங்கள்.
6. பற்கள் வலுபெறும்
கருஞ்சீரகம் ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உங்கள் ஈறுகளில் இரத்தம் கசிவு உள்ளதா, பற்கள் பலவீனமாக உள்ளதா? அப்படியானால் கருஞ்சீரகம் அதை சரிசெய்ய உதவும். அதற்கு கருஞ்சீரக எண்ணெயை 1/2 டீஸ்பூன் எடுத்து, 1 கப் தயிருடன் சேர்த்து கலந்து, ஈறுகளில் தடவி ஊற வைத்து, பின் வாயைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
7. ஆஸ்துமாவை தடுக்கும்
காற்று மாசுபாட்டினால், ஆஸ்துமா பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுகிறார்கள். ஆனால் இந்த ஆஸ்துமாவை கருஞ்சீரகம் கட்டுப்படுத்தும். அதற்கு கருஞ்சீரகப் பொடியை 1/4 டீஸ்பூன் எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் உட்கொள்ள வேண்டும்.
8. எடை இழப்புக்கு உதவும்
கருஞ்சீரகம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், கருஞ்சீரகத்தை தினமும் உட்கொள்ளுங்கள். அதுவும் கருஞ்சீரக விதைகளை வாயில் போட்டு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடித்து வரும் போது, அது உடல் எடையைக் குறைப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
9. சிறுநீரகங்களைப் பாதுகாக்கும்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. எனவே சர்க்கரை நோயாளிகள் கருஞ்சீரகத்தை தினமும் எடுக்கும் போது, அது இரத்த சர்க்கரை, கிரியேட்டினைன் அளவு, யூரியா போன்றவற்றின் அளவுகளைக் குறைக்கும். இதன் விளைவாக சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்றுகள் ஏற்படும் அபாயமும் குறையும்.
10. புற்றுநோயைத் தடுக்கும்
கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளன. இவை புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. முக்கியமாக இது மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கணையப் புற்றுநோய்களுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications