Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
வாரம் 2 முறை ஆட்டு கால் சூப் குடித்தால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்-ன்னு தெரியுமா?
Mutton Leg Soup Benefits In Tamil: டயட்டில் இருக்கும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஓன்று தான் சூப். இந்த சூப்புகளில் பல வெரைட்டிகள் உள்ளன. சூப் என்பது வேறொன்றும் இல்லை, காய்கறிகள், கீரைகள், இறைச்சிகள் போன்றவற்றை வேக வைத்த நீர் தான்.
இந்த நீருடன் சுவைக்காக ஒருசில மசாலாக்களை சேர்க்கும் போது, அது சுவையான மற்றும் சத்தான சூப் ஆகிறது. சூப்புகளில் ஆட்டு கால் சூப் மிகவும் பிரபலமானவை மற்றும் இது நிறைய பேரின் விருப்பமான சூப்பும் கூட.

பழங்காலம் முதலாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆட்டு கால் சூப் நம் முன்னோர்களால் குடிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, நல்ல காரசாரமான ஆட்டு கால் சூப்பை குடித்தால், சளி உடனே சரியாகும், கால் வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம் மற்றும் இதுப்போன்ற பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.
உங்களுக்கு அடிக்கடி ஆட்டு கால் சூப்பை குடித்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? கீழே ஆட்டு கால் சூப் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்
உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடம் இருந்து உடலைப் பாதுகாக்கும் பணியை நோயெதிர்ப்பு மண்டலம் செய்கிறது. இந்த நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால், உடலில் எவ்வித பிரச்சனைகளும் வராது. ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது.
இப்படி பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க ஆட்டு கால் சூப் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் ஆட்டு கால் சூப்பில் அர்ஜினைன் என்னும் பொருள் உள்ளது. இது கிருமிகளை எதிர்த்துப் போராட தேவையான சத்தாகும். எனவே உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்க விரும்பினால் ஆட்டு கால் சூப்பை அடிக்கடி குடியுங்கள்.
2. எலும்புகள் வலுபெறும்
ஆட்டு கால் சூப்பில் அனைத்துவிதமான சத்துக்களும் உள்ளன. முக்கியமாக ஆட்டு காலில் கால்சியம், காப்பர், போரான், மாங்கனீசு மற்றும் புற கனிமச்சத்துக்கள் உள்ளன. அடிக்கடி ஆட்டு கால் சூப்பை குடித்து வந்தால், அது எலும்புகளை வலுவாக்கும்.
கூடுதலாக, ஆட்டு கால் சூப்பில் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற அத்தியாவசியமான வைட்டமின்கள் உள்ளன. இவை எலும்புகளின் வளர்ச்சியையும், வலிமையையும் அதிகரிக்கும்.
3. உடல் சுத்தமாகும்
நமது உடலில் தினமும் பலவிதமான நச்சுக்கள் உணவு வழியாக மட்டுமின்றி, சுவாசிப்பதன் மூலமும் சேரும். இப்படி நச்சுக்கள் அதிகம் சேர்ந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்துவிடும். என்ன தான் உடலில் உள்ள நச்சுக்களை நிணநீர் அமைப்பு சிறப்பாக வெளியேற்றினாலும், அது மட்டும் போதாது.
உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற நாமும் முயற்சிகளை எடுக்க வேண்டும். அதற்கு ஆட்டு கால் சூப் பெரிதும் உதவி புரியும். ஆட்டு கால் சூப்பை குடிப்பதன் மூலம், உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ளும்.
4. அமினோ அமிலம் அதிகம்
ஆட்டு கால் சூப்பில் சிஸ்டைன், அர்ஜினைன், குளுட்டமைன், புரோலைன், அலானைன், லைசின் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்த அமினோ அமிலங்கள் ஒவ்வொன்றும் உடலின் சீரான செயல்பாட்டிற்கு தேவையான மிகவும் முக்கியமான அமினோ அமிலங்கள் ஆகும்.
5. எடை இழப்பை ஊக்குவிக்கும்
ஆட்டு கால் சூப்பில் செரிமான மண்டலத்தின் செயல்பாடு மற்றும் பிரச்சனைகளை சரிசெய்யும் எல்-குளுட்டமைன் என்னும் அமினோ அமிலம் அதிகளவில் உள்ளன. ஒருவரது செரிமான செயல்பாடு சிறப்பாக இருந்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, எடை இழப்பை ஊக்குவிக்கும். எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், அடிக்கடி ஆட்டு கால் சூப்பை வாங்கி குடியுங்கள். ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
6. குடல் ஆரோக்கியம் மேம்படும்
ஆட்டு கால் சூப் எளிதில் செரிமானமாகக்கூடியது. எனவே இரவு நேரத்தில் லைட் ஃபுட் சாப்பிட நினைப்பவர்கள், மற்ற உணவுகளுக்கு பதிலாக ஆட்டு கால் சூப்பை குடிப்பது நல்லது. இதனால் செரிமான மண்டலம் சிறப்பாக இருப்பதோடு, குடல் அழற்சி நோய்கள் இருந்தால், அது விரைவில் சரியாகும்.
இதற்கு காரணம், ஆட்டு காலில் உள்ள குளுட்டமைன் என்னும் முக்கியமான அமினோ அமிலம் தான். இது குடல் சுவற்றில் உள்ள காயங்கள் மற்றும் புண்களை சரிசெய்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
7. மூட்டு வீக்கம்/அழற்சி குறையும்
தற்போது நிறைய பேர் மூட்டு வீக்கம் அல்லது அழற்சி பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். குளுக்கோசமைன் மற்றும் காண்ட்ராய்டின் ஆகியவை குருத்தெலும்பு வளர்ச்சி மற்றும் மூட்டுக்களின் நிலையை மேம்படுத்துவதற்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்தாகும்.
வயது அதிகரிக்கும் போது மூட்டுக்களில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆனால் ஆட்டு கால் சூப்பை அடிக்கடி குடித்து வந்தால், ஆஸ்டியோஆர்த்ரிடிஸ் மற்றும் பிற மூட்டு தொட்ர்பான பிரச்சனைகளைத் தடுக்கும்.
8. கொலாஜன் உற்பத்தி மேம்படும்
உங்கள் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால், உடலில் இணைப்புத்திசு அமைப்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த இணைப்புத்திசுக்களின் ஆரோக்கியத்திற்கு டைப்-1 மற்றும் டைப்-2 கொலாஜன் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆட்டு கால் சூப்பில் இவ்விரண்டு கொலாஜனும் உள்ளன.
9. கனிமச்சத்துக்கள் அதிகம்
ஆட்டு கால் சூப்பில் உடலின் மென்மையான செயல்பாட்டிற்கு தேவையான கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. அதாவது, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பல்வேறு அத்தியாவசியமான கனிமச்சத்துக்கள் ஆட்டு காலில் காணப்படுகின்றன. கூடுதலாக ஆட்டு காலின் எலும்பு மஜ்ஜையில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன.
10. தூக்கமின்மை சரியாகும்
நீங்கள் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல், தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் ஆடு கால் சூப்பைக் குடியுங்கள். இதனால் அதில் உள்ள கிளைசின் என்னும் அமினோ அமிலம், உடலில் உள்ள உணர்வு நரம்புகளை தளர்வடையச் செய்கிறது.
எனவே உடல் களைப்பு, மன அழுத்தம் போன்றவற்றால் அவதிப்படுகிறீர்களானால், ஆட்டு கால் சூப் குடியுங்கள். இதனால் மனம் மற்றும் உடல் ரிலாக்ஸாகி இரவு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











