Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
தினமும் நீரில் ஊற வைத்த 4 உலர் பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
Dry Dates Benefits In Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு உணவுப் பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் உலர் பேரிச்சம் பழம். இதை கஜூர் காய் என்றும் அழைப்பார்கள். உலர் பேரிச்சம் பழமானது நற்பதமான பேரிச்சம் பழத்தின் உலர்ந்த வடிவம்.
உலர் பேரிச்சம் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன மற்றும் இது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும் என்பது தெரியுமா? கடினமான இந்த உலர் பேரிச்சம் பழத்தை தினமும் ஒருவர் உட்கொண்டு வந்தால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.

குறிப்பாக உலர் பேரிச்சம் பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் உட்கொள்ள வேண்டும். இப்படி உலர் பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. மலச்சிக்கல் நீங்கும்
மற்ற உணவுகளை விட உலர் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகமான அளவில் நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது. நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவரானால், உலர் பேரிச்சம் பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள், உடனடி நிவாரணம் கிடைக்கும். அத்துடன் வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளும் தடுக்கப்படும்.
2. நினைவாற்றல் அதிகரிக்கும்
தினமும் இரவு உலர் பேரிச்சம் பழத்தை ஊற வைத்து மறுநாள் காலையில் உட்கொண்டு வந்தால், அதன் விளைவாக நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் புத்திக்கூர்மையாகும். மேலும் வயதான காலத்தில் சந்திக்கும் அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோயின் அபாயம் குறையும்.
3. இரத்த சர்க்கரை கட்டுப்படும்
சர்க்கரை நோய் உள்ளதா? இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியானால் உலர் பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து தினமும் உட்கொண்டு வாருங்கள். இதனால் உலர் பேரிச்சம் பழத்தில் உள்ள பலவிதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பலவிதமான நன்மைகளை அளிக்கும். இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு உலர் பேரிச்சம் பழத்தையே சாப்பிட வேண்டும். அதுவும் மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசித்துக் கொள்ள வேண்டும்.
4. எலும்புகள் வலுவாகும்
தற்போது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் மக்களிடையே அதிகரித்து வருகின்றன. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் இன்றியமையாத சத்தாகும். இந்த கால்சியம் உலர் பேரிச்சம் பழத்தில் அதிகம் உள்ளன. அதுவும் அதை ஊற வைத்து உட்கொள்ளும் போது, கால்சியமானது உடலால் எளிதில் உறிஞ்சப்படும். எனவே எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில், தினமும் 3 ஊற வைத்த உலர் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.
5. இரத்த சோகை சரியாகும்
இரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உலர் பேச்சரிம் பழத்தை தினமும் உட்கொண்டு வருவது நல்லது. ஏனெனில் உலர் பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளன. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் அதிலிருந்து விரைவில் குணமாக உலர் பேரிச்சம் பழத்தை நீரில் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், அவர்கள் உலர் பேரிச்சம் பழத்தை உண்பது மிகவும் நல்லது.
6. இதய ஆரோக்கியம் மேம்படும்
தற்போது இதய பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுகிறார்கள். ஆனால் உலர் பேரிச்சம் பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகிறது. ஏனெனில் உலர் பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் குறைவு, சோடியம் குறைவு, பொட்டாசியம் அதிகம் மற்றும் கொலஸ்ட்ரால் எதுவும் இல்லை. இவை அனைத்தும் இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவி புரிந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
7. ஆற்றல் மேம்படும்
உலர் பேரிச்சம் பழத்தில் க்ளுக்கோஸ் மற்றும் புருக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் அதிகம் உள்ளன. இந்த சர்க்கரைகள் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றன. எனவே நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட வேண்டுமானால், காலையில் எழுந்ததும் நீரில் ஊற வைத்த உலர் பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











