Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Pears Benefits In Tamil: சீசன் பழங்களை அந்தந்த சீசனில் தவறாமல் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடுவதால் அந்த சீசனில் உடலை தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராட தேவையான சத்துக்கள் கிடைக்கும். அந்த வகையில் தற்போது பேரிக்காய் சீசன் தொடங்கிவிட்டது. மார்கெட்டுகளில் பேரிக்காயை விலைக் குறைவில் காணலாம்.
பேரிக்காய் இனிப்புச் சுவையைக் கொண்டதோடு, வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழமும் கூட. சொல்லப்போனால் ஆப்பிளை விட மிதமான அளவிலான பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதோடு வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், காப்பர் போன்ற சத்துக்களும் உள்ளன.

பேரிக்காய் சீசன் காலத்தில் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம். இப்போது தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்
பேரிக்காய் சாப்பிடுவதால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் பேரிக்காயில் சோடியம் குறைவு. எனவே இந்த பழத்தை உட்கொள்ளும் போது, அது சிறுநீரக நோய்களைத் தடுக்கும். அதுவும் ஏற்கனவே சிறநீரக நோய் இருப்பவர்கள் பேரிக்காயை உட்கொள்ளும் போது, அது டயாலிசிஸ் செய்ய வேண்டியதைத் தடுப்பதோடு, விரைவில் சிறுநீரக நோயில் இருந்து மீள உதவி புரியும். எனவே சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், பேரிக்காயை தினமும் சாப்பிடுங்கள்.
2. குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
பேரிக்காயில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான சத்துக்களாகும். ஒவ்வொரு பேரிக்காயிலும் சுமார் 6 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ஒருநாளைக்கு வேண்டிய நார்ச்சத்தில் 22% ஆகும்.
நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் போது, குடலில் உள்ள கழிவுகளை எளிதில் மலக்குடலில் நகர்ந்து, சிரமமின்றி கழிவுகளை வெளியேற்ற உதவி புரியும். இதன் விளைவாக குடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக பேரிக்காயை தோலோடு சாப்பிட வேண்டும். ஏனெனில் அதன் தோலில் தான் அந்த நார்ச்சத்து உள்ளது.
3. அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம்
பேரிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. எனவே பேரிக்காயை தினமும் உட்கொள்ளும் போது, அது நாள்பட்ட அழற்சியால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது. பேரிக்காயில் ஃப்ளேவோனாய்டுகள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை உடலினுள் உள்ள அழற்சியை எதிர்ப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய் தாக்குதல்களைத் தடுக்கிறது. எனவே உடலினுள் ஏற்படும் அழற்சி அல்லது காயங்கள் சரியாக வேண்டுமானால், பேரிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள்.
4. புற்றுநோயை எதிர்க்கும்
பேரிக்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுவும் இதில் உள்ள அந்தோசையனின்கள் மற்றும் சினாமிக் அமிலம் போன்றவை புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.
ஒருவர் தங்களின் உணவுகளில் பேரிக்காய் போன்ற பழங்களை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அது வயிறு, நுரையீரல், சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவற்றை எதிர்த்து பாதுகாக்கும். கூடுதலாக, இதில் உள்ள ப்ளேவோனாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை எதிர்த்து பாதுகாப்பளிக்கிறது.
5. சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும்
பேரிக்காயை தினமும் உட்கொண்டு வரும் போது, அது சர்க்கரை நோய், குறிப்பாக டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும். ஏனெனில் பேரிக்காயில் அந்தோசையனின் மற்றும் நார்ச்சத்து போன்றவை உள்ளன. இவை சர்க்கரை நோயைத் தடுக்க உதவுகிறது மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை விளைவிக்கிறது.
வாரத்திற்கு 5 அல்லது அதற்கு மேல் பேரிக்காய் சாப்பிடுவது, சர்க்கரை நோய் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன. பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. ஆனால் அதற்கு பேரிக்காயை தோலுடன் உட்கொள்ள வேண்டும்.
6. இதய ஆரோக்கியம் மேம்படும்
பேரிக்காய் இதயத்திற்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. அதுவும் பேரிக்காயில் உள்ள புரோசயனிடின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய திசுக்களை வலுவாக்குகிறது. கூடுதலாக பேரிக்காய் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது.
மேலும் பேரிக்காயின் தோலில் க்யூயசிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி, இதய நோயைத் தடுக்கிறது. முக்கியமாக பேரிக்காயை தினமும் உட்கொண்டு வரும் போது, அது பக்கவாதத்தின் அபாயத்தை குறைப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
7. எடை இழப்புக்கு உதவும்
பேரிக்காயில் கலோரிகள் குறைவு மற்றும் நீர்ச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் பேரிக்காயை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வந்தால், அதை நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி, பசியைக் கட்டுப்படுத்தி, எடை இழப்பிற்கு உதவுகிறது.
8. சரும ஆரோக்கியம் மேம்படும்
பேரிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால், சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும். இதற்கு பேரிக்காயில் உள்ள வைட்டமின் ஏ தான் காரணம். இது கொலாஜன் சேர்க்கையை மேம்படுத்துவதாடு, சருமத்தின் பொலிவை அதிகரிக்கிறது மற்றும் சருமத்தின் இளமையை நீட்டிக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி உள்ளதால், இது ப்ரீ ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











