Latest Updates
-
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
September 2026 Career Horoscope: செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இந்தியாவில் பின்னோக்கி பாயும் ஒரேயொரு நதி எது தெரியுமா? இது பின்னோக்கி பாய காரணம் என்ன தெரியுமா? -
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்..
அடிக்கடி பன்னீர் சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?
Paneer Benefits In Tamil: பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பன்னீரானது சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள்.
பன்னீரைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். முக்கியமாக இந்த பன்னீரை வீட்டிலேயே நாம் எளிதில் தயாரிக்கலாம். பன்னீரை, காட்டேஜ் சீஸ் என்றும் அழைப்பதுண்டு.

நீங்கள் பன்னீர் பிரியராக இருந்தால் மற்றும் அடிக்கடி பன்னீரை சாப்பிட விரும்புவீர்களா? அப்படியானால் பயப்படாமல் சாப்பிடுங்கள். ஏனெனில் பன்னீரில் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகமாக உள்ளன.
எனவே இவற்றை அடிக்கடி சாப்பிடுவதால், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இப்போது பன்னீரை அடிக்கடி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. புரோட்டீன் அதிகம்
அசைவ உணவாளர்களை விட சைவ உணவாளர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. பன்னீரில் புரோட்டீன் அதிகம். எனவே சைவ உணவாளர்கள் போதுமான புரோட்டீன் உடலுக்கு கிடைக்க பன்னீரை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. மேலும் பன்னீரில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை உடலின் சரியான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதவை.
2. எடை இழப்பிற்கு நல்லது
பன்னீரில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது எடை இழப்பிற்கு பெரிதும் உதவி புரியும். பன்னீரை உட்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பியிருக்கும் மற்றும் கண்ட உணவுகளின் மீதான ஆர்வம் குறையும். இருப்பினும், பன்னீர் கலோரி குறைவானது அல்ல என்பதால், அளவாக உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
3. தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்
தசைகளின் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாத சத்தாகும். நீங்கள் மிகவும் ஒல்லியாக இருந்தால், குண்டாக விரும்பினால் பன்னீரை அடிக்கடி சாப்பிடலாம். இதனால் அதில் உள்ள புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கு உதவி புரியும். மேலும் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பன்னீரை உட்கொள்ளும் போது, உடற்பயிற்சியால் தசைகளில் ஏற்பட்டுள்ள காயங்கள் சரியாகும்.
4. இரத்த சர்க்கரை கட்டுப்படும்
பன்னீரில் ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. அதோடு இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிப்பதைத் தடுக்கிறது. இருப்பினும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், பன்னீரை தங்களின் தினசரி உணவில் சேர்ப்பதாக இருந்தால், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
5. எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்லது
தற்போது நிறைய பேர் எலும்பு தொடர்பான பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இப்படி எலும்புகளில் பிரச்சனை வருவதற்கு கால்சியம் குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம். பன்னீரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளன. இவை எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையான சத்துக்களாகும். எனவே பன்னீரை அடிக்கடி உட்கொள்ளும் போது எலும்பு மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
6. நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படும்
பன்னீரில் ஜிக் அதிகமாக உள்ளன. இந்த ஜிங்க் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இது சளி, காய்ச்சல் மற்றும் தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த விரும்பினால், பன்னீரை அடிக்கடி சாப்பிடலாம்.
7. மூளைக்கு நல்லது
பன்னீரில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளன. வைட்டமின் பி12 மூளையின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான சத்தாகும். இது நரம்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டைப் பராமரிக்க உதவுகிறது மற்றும் அறிவாற்றல் பிரச்சனைகளைத் தடுக்கிறது. பொதுவாக சைவ உணவாளர்களுக்கு இந்த வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதால், இவர்கள் பன்னீரை அடிக்கடி உட்கொள்வது நல்லது.
8. மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும்
பன்னீரில் ட்ரிப்டோஃபேன் அதிகம் உள்ளது. இது செரடோனின் என்னும் ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவுகிறது. செரடோனின் உடலில் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்பட்டால், மன அழுத்தம், பதட்டம் போன்றவை குறைந்து, மன நிலை சிறப்பாக இருக்கும். ஆகவே மன ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க பன்னீரை சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications