Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
செரிமான பிரச்சனை உங்களை பாடாய் படுத்துதா? அப்ப இந்த காய்கறிகளை அதிகமா சாப்பிடுங்க...
High-fibre Winter Vegetables: குளிர்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் மட்டும் தான் தலைத் தூக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் இவற்றிற்கு அடுத்தப்படியாக செரிமான பிரச்சனைகளையும் ஏராளமானோர் சந்திப்பார்கள்.
ஏனெனில் குளிர்காலத்தில் உடலின் மெட்டபாலிசம் குறைவாகவும், நீரிழப்பும், எண்ணெயில் பொரித்த உணவுகளின் மீதான நாட்டம் அதிகமாகவும், மந்தத்தன்மை அதிகமாகவும் இருப்பதால், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இப்படி குளிர்காலத்தில் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒருசில குளிர்கால காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். கீழே குளிர்காலத்தில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய நார்ச்சத்துள்ள காய்கறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கேரட்
குளிர்காலத்தில் விலைக்குறைவில் கிடைக்கக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு காய்கறி தான் கேரட். இந்த கேரட்டில் டயட்டரி நார்ச்சத்துக்களும், கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளதால், இது மலத்தை மென்மையாக்கும் மற்றும் குடலியக்கத்தை சீராக்கும். அதோடு கேரட்டில் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இது கண்களுக்கு மிகவும் நல்லது. எனவே குளிர்காலத்தில் செரிமான பிரச்சனையால் அதிகம் சிரமப்பட்டு வந்தால், கேரட் சாம்பாரிலோ, சூப்பிலோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடுங்கள், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
2. பசலைக்கீரை
குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய கீரை தான் பசைக்கீரை. இந்த கீரையில் நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. இவை மலச்சிக்கலைத் தடுக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளதால், குளிர்காலத்தில் இவற்றை உட்கொள்ளும் போது, அது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதுவும் பசலைக்கீரையை அதிகமாக வேக வைக்காமல், மிதமானதாக வேக வைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைப்பதோடு, எளிதில் செரிமானமும் ஆகும்.
3. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய கிழங்கு தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இந்த கிழங்கில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை குடலியக்கத்தை சீராக்குவதோடு, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இந்த கிழங்கை உட்கொள்ளும் போது, அது மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் குடல் சுவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே இப்படிப்பட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கை குளிர்காலத்தில் அடிக்கடி வேக வைத்து சாப்பிடுங்கள்.
4. முட்டைக்கோஸ்
குளிர்காலத்தில் செரிமான பிரச்சனையால் சிரமப்படுபவர்கள் சாப்பிட வேண்டிய மற்றொரு காய்கறி தான் முட்டைக்கோஸ். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாக்கும். அதுவும் முட்டைக்கோஸில் குடல் சுவரின் ஆரோக்கியத்திற்கு உதவும் மற்றும் அழற்சியைக் கட்டுப்படுத்தும் சேர்மங்களும் காணப்படுகின்றன. எனவே இப்படிப்பட்ட முட்டைக்கோஸை பொரியலாக செய்து அடிக்கடி உட்கொள்ளுங்கள்.
5. பச்சை பட்டாணி
குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒரு காய்கறி தான் பச்சை பட்டாணி. இதில் டயட்டரி நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. இதை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு, நல்ல குடல் பாக்டீரியாக்களின் அளவுகளும் அதிகரிக்கும். அதுவும் பச்சை பட்டாணியில் காணப்படும் தாவர வகை புரோட்டீன், வயிற்றை எளிதில் நிரப்புவதோடு, அதிகமாக உண்பதைத் தடுக்கும். எனவே இப்படிப்பட்ட பச்சை பட்டாணியை குளிர்காலத்தில் விரும்பியவாறு சமைத்து சாப்பிடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications