Latest Updates
-
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
Jackfruit Benefits: பலாப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் டாப் 10 நன்மைகள்!
Jackfruit Benefits In Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பழங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. பழங்களானது ஆரோக்கியமானது மட்டுமின்றி, விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் சுவையானதும் கூட. அந்த பழங்களில் நல்ல வாசனையுடன், இனிப்புச் சுவையுடனும் இருக்கும் ஒரு வகையான பழம் தான் பலாப்பழம்.
என்ன தான் பலாப்பழத்தின் வெளிப்புறம் பார்க்க முட்கள் நிறைந்து கரடுமுரடாக காணப்பட்டாலும், அதன் உட்புறத்தில் உள்ள மஞ்சள் நிற பழம் இனிப்புச் சுவையுடன் இருக்கும். தற்போது பலாப்பழ சீசன் என்பதால், மார்கெட்டுகள் மற்றும் தெருவோரங்களில் பலாப்பழங்கள் விலைக் குறைவில் விற்கப்படுவதைக் காணலாம்.

பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் போன்றவை அதிகமாக உள்ளன. எனவே பலாப்பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இப்போது பலாப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் டாப் 10 நன்மைகள் குறித்து காண்போம்.
1. ஆற்றல் மேம்படும்
பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அல்லது ஃபுருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகள் உள்ளன. இவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன. பலாப்பழத்தின் 92 சதவீதம் கார்போஹைட்ரேட்டுகளால் ஆனது. ஒரு கப் பலாப்பழத்தில் சுமார் 40 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே பலாப்பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, நீண்ட நேரம் சுறுசுறுப்புடன் செயல்படலாம்.
2. தைராய்டு பிரச்சனைகளைத் தடுக்கும்
பலாப்பழத்தில் காப்பர் அதிகமாக உள்ளன. இவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கின்றன.மேலும் இது தைராய்டு ஹார்மோன்களின் சீராக செயல்பாடு மற்றும் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே பலாப்பழத்தை சாப்பிடுவதால், தைராய்டு பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
3. இரத்த அழுத்தம் குறையும்
ஒரு கப் பலாப்பழத்தை சாப்பிடுவதால், ஒரு நாளைக்கு வேண்டிய பொட்டாசியத்தில் 14% கிடைக்கும். பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள பெரிதும் உதவி புரிந்து, இதய நோய் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தைத் தடுக்கும்.
4. செரிமானத்திற்கு நல்லது
பலாப்பழத்தில் டயட்டரி நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உள்ளன. இவை மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிப்பதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆனால் பலாக்காயை செரிமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பலாக்காய் ஜீரணமாக கடினமாக இருக்கும்.
5. கண்களுக்கு நல்லது
பலாப்பழத்தில் ப்ளேவோனாய்டுகள் மற்றும் பீனால்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை ஃப்ரீ ஆக்சிஜன் ரேடிக்கல்களால் டிஎன்ஏ செல்கள் சேதமடைவதைத் தடுக்கின்றன.
ஃப்ரீ ஆக்சிஜன் ரேடிக்கல்கள் விழித்திரை செல்களை சிதைவடையச் செய்து, கண் புரை, மாகுலர் சிதைவு போன்ற நாள்பட்ட கண் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். முக்கியமாக பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ அதிகமாக உள்ளன. எனவே பலாப்பழத்தை உட்கொள்வதால் பார்வை பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
6. புற்றுநோயைத் தடுக்கும்
பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் டிஎன்ஏ செல்கள் சேதமடைவதைத் தடுக்கின்றன மற்றும் சேதமடைந்த செல்கள் பிறழ்வடைவதைத் தடுக்கின்றன. மேலும் பலாப்பழத்தில் ஸ்டார்ச் அதிகமாகவும், பிசுபிசுப்புத்தன்மை அதிகமாக இருப்பதனாலும், இதை உட்கொள்ளும் போது, பெருங்குடல் புற்றுநோயுடன் தொடர்புடைய நச்சுக்களை குடலில் இருந்து முற்றிலும் வெளியேற்ற உதவி புரிந்து, குடல் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கிறது.
7. இரத்த சோகையை சரிசெய்யும்
இரத்த சோகை என்பது உடலில் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் குறைபாட்டினால் ஏற்படக்கூடிய ஒரு நிலை. பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் பி6, நியாசின் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை உள்ளன.
அதோடு, மாங்கனீசு, மக்னீசியம், காப்பர் போன்ற இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. எனவே பலாப்பழத்தை உட்கொள்வதன் மூலம் இரத்த சோகையை சரிசெய்யலாம் மற்றும் தடுக்கலாம்.
8. எலும்புகள் வலுவாகும்
எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் அவசியம் என்பதை அனைவரும் அறிவோம். கால்சியம் வெறும் பாலில் மட்டும் இல்லை. பலாப்பழத்திலும் தான் உள்ளன. அதுவும் ஒரு கையளவு பலாப்பழத்தில் சுமார் 56.1 மிகி கால்சியம் உள்ளன. இது ஒரு நாளைக்கு வேண்டிய கால்சியத்தில் 6% ஆகும். எனவே பலாப்பழத்தை சாப்பிடுவதால் எலும்பு பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, எலும்புகளும் வலுவாகும்.
9. விந்தணுக்கள் அதிகரிக்கும்
ஆயுர்வேதத்தின் படி, நன்கு கனிந்த பலாப்பழம் விந்தணுக்களின் இயக்கம் மற்றும் மலட்டுத்தன்மையுள்ள ஆண்களில் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. பாரம்பரிய சீன மருத்துவத்திலும், பலாப்பழம் பாலுணர்வைத் தூண்டும் சிறப்பான பழங்களில் ஒன்றாக உள்ளது.
பழங்காலத்தில் பாலுணர்ச்சி குறைவாக உள்ள ஆண்களின் பாலுணர்ச்சியை அதிகரிக்கவும், விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துத்தள்ளல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் ஆண்கள் பலாப்பழத்தை சாப்பிடுவது நல்லது.
10. சரும ஆரோக்கியம் மேம்படும்
பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்ளும் போது சரும செல்கள் சேதமடைவது தடுக்கப்படுவதோடு, சருமம் விரைவிலேயே சுருங்குவதைத் தடுத்து, சருமத்தின் ஆரோக்கியத்தையும், இளமைத் தோற்றத்தையும் நீட்டிக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications