Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
முன்கூட்டியே விந்து வெளியேறுகிறதா? அப்படின்னா தினமும் இதுல ஒன்ன செய்யுங்க...
முன்கூட்டியே விந்து வெளியேறுவது என்பது கட்டுப்பாடின்றி உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பே அல்லது ஈடுபட்ட சில நொடிகளிலேயே விந்து வெளியேறும் நிலையாகும். இம்மாதிரியான பிரச்சனை மனநிலையை பெரிதும் பாதிப்பதோடு, ஒருவரது தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும். இன்று பெரும்பாலான ஆண்கள் இந்த பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள்.

முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கு சரியான காரணம் எதுவென்று தெரியவில்லை. ஆனால் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், மன இறுக்கம் மற்றும் பதற்றம் போன்றவை முன்கூட்டியே விந்து வெளியேறுவதற்கு காரணிகளாக கூறுகின்றனர். பல சமயங்களில் குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகள் அல்லது ஹார்மோன் பிரச்சனைகளாலும் ஏற்படலாம் என்றும், விறைப்புத்தன்மை பிரச்சனை கூட சில முன்கூட்டியே விந்து வெளியேற காரணமாகவும் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
இப்போது முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையை சரிசெய்வதற்கான சில வழிகள் குறித்துக் காண்போம்.

வழி #1
10 பாதாமை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு, அத்துடன் 1 கப் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதோடு சிறிது குங்குமப்பூ, இஞ்சி மற்றும் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும். இந்த பானத்தை தினமும் காலையில் குடிக்க, முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனை குணமாகும்.

வழி #2
அஸ்வகந்தா-பாலா-விதாரி போன்ற ஆயுர்வேத மூலிகைப் பொடிகளை வாங்கி, சரிசம அளவில் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான ஆட்டுப் பாலில், 1/2 டீஸ்பூன் பொடியை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். ஆட்டுப் பாலுக்கு எங்கு செல்வது என்று நீங்கள் கேட்கலாம். ஆர்கானிக் உணவு ஸ்டோர்களில் ஆட்டுப்பால் நிச்சயம் கிடைக்கும்.

வழி #3
ஒரு டம்ளர் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறு துண்டு இஞ்சி சேர்த்து கலந்து வடிகட்டி பருக வேண்டும். இந்த பாலை தினமும் ஆண்கள் குடித்து வந்தால், முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையில் விடுபடலாம்.

வழி #4
ஒரு டம்ளர் நீரில், 1 டீஸ்பூன் வெங்காய விதைகளை சேர்த்து கலந்து, தினமும் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு வேளை உணவு உண்பதற்கு முன்னும் குடித்தால், விரைவில் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனை குணமாகும்.

வழி #6
முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கான சிறப்பான ஒரு நிவாரணப் பொருள் தான் குங்குமப்பூ. இது பாலுணர்ச்சியைத் தூண்டும் அற்புதமான பொருள். பாலியல் பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் தினமும் குங்குமப்பூவை பாலில் போட்டு கலந்து குடித்து வந்தால், பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, படுக்கையில் சிறப்பாக செயல்படலாம்.

வழி #7
வாழைப்பழம், சோம்பு, கேரட் போன்ற உணவுப் பொருட்களில் பாலுணர்வைத் தூண்டும் பண்புகள் இயற்கையாக நிறைந்துள்ளது. இந்த உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் இயற்கையாகவே முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையை சரிசெய்யலாம்.

வழி #8
நன்கு கொதிக்க வைக்கப்பட்ட ஒரு டம்ளர் பாலில், சிறிது அஸ்பாரகஸ் வேரின் பொடியை சேர்த்து கலந்து, தினமும் குடித்து வந்தால், முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வழி #9
முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையை சரிசெய்ய வேண்டுமானால், ஆயுர்வேதம் ஒருசில உணவுகளை உண்ண பரிந்துரைக்கிறது. அவையாவன: நற்பதமான பழங்கள், நட்ஸ், இஞ்சி, லெட்யூஸ், செரில்கள், மீன், காய்கறிகள் (செலரி, வெங்காயம்), மற்றும் தேன் போன்றவை. இந்த உணவுகளை அடிக்கடி ஆண்கள் சாப்பிட்டால், பாலியல் பிரச்சனைகள் குணமாகும்.

வழி #9
ஆண்களின் பாலியல் பிரச்சனைகளுக்கு, முக்கியமாக முன்கூட்டியே விந்து வெளியேறுவதற்கு ஒருசில உணவுப் பொருட்கள் முக்கிய காரணங்களாகும். அந்த உணவுகளைத் தவிர்த்தால், இயற்கையாகவே பாலியல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அந்த உணவுகளாவன ஆல்கஹால், டீ, காபி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை அல்லது மைதா நிறைந்த உணவுகள் போன்றவை.



Click it and Unblock the Notifications