Latest Updates
-
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க
சமைக்கும்போது நீங்கள் செய்யும் இந்த சிறிய தவறுகள்தான் உணவில் உள்ள சத்துக்களை அழிக்கிறதாம் தெரியுமா?
இயற்கை உணவுகள் அனைத்துமே எப்பொழுதும் நமக்கு ஆரோக்கியத்தை வழங்குபவைதான். ஆனால் நாம் சமைக்கும் போது செய்யும் சில தவறுகளால் காய்கறிகளில் உள்ள பல முக்கியமான ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம்.
இயற்கை உணவுகள் அனைத்துமே எப்பொழுதும் நமக்கு ஆரோக்கியத்தை வழங்குபவைதான். ஆனால் நாம் சமைக்கும் போது செய்யும் சில தவறுகளால் காய்கறிகளில் உள்ள பல முக்கியமான ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம். உணவை அதிக வெப்பத்தில் சமைப்பது, அதிக நீர் ஊற்றுவது, தவறான பொருட்களை சேர்ப்பது என சமைக்கும் போது நாம் செய்யும் தவறுகள் ஏராளம்.

இதனால்தான் பெரும்பாலான காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும் சில காய்கறிகளை சமைக்காமல் சாப்பிட முடியாது அந்த சூழ்நிலைகளில் ஆரோக்கியமான சமைக்கும் முறையை கையாள வேண்டும். இந்த பதிவில் சமைக்கும்போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வெளியேறாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

கழுவும் முறை
காய்கறிகளை வெட்டி விட்டு அதன்பின் கழுவும் முறையை பலரும் பின்பற்றுகிறார்கள். இது மிகவும் தவறாகும். எப்போதும் உணவை கழுவி விட்டு அதன்பின் நறுக்குவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். ஏனெனில் நறுக்குவிட்டு கழுவும் போது நாம் பல ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம்.

சிறியதாக நறுக்காதீர்கள்
காய்களை எப்போதும் மிகச்சிறிய துண்டாகி நறுக்காதீர்கள். ஏனெனில் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கும்போது காற்றுடன் அவை வினைபுரிவதால் நாம் ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம். எனவே எப்போதும் காய்கறிகளை பெரிய துண்டாக நறுக்கி சமையுங்கள்.

நீரின் அளவு
உணவை எப்பொழுதும் குறைவான தண்ணீரில் சமைக்க பழகுங்கள். ஏனெனில் அதிக தண்ணீரில் சமைப்பது பல ஊட்டச்சத்துக்களை சிதைக்கிறது. எனவே குறைந்த நீரில் குறைவான வெப்பத்தில் சமைப்பது நல்லது.

உணவை சூடு பண்ணுவது
உணவை சமைக்கும் போது அதிக வெப்பத்தில் சமைப்பது எப்படி தவறானதோ அதேபோல அந்த உணவை மீண்டும் சூடுப்படுத்துவது அதிலுள்ள ஊட்டச்சத்துக்களை மேலும் சிதைக்கும்.

உடனடியாக சமைப்பது
காய்கறிகள் வெட்டிய உடனேயே சமைக்க தொடங்கி விடுங்கள், ஏனெனில் நீங்கள் தாமதமாக சமைக்கும் போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் காற்றில் வினைபுரிந்து அதனை இழக்க நேரிடும்.

மீதமான தண்ணீர்
காய்கறிகள் மற்றும் அரிசியை சமைத்த பின்னர் மீதமிருக்கும் தண்ணீரை வீணாக்காதீர்கள். ஏனெனில் இந்த தண்ணீரில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கும். இந்த தண்ணீரை கொண்டு உணவை சமைப்பது உணவின் சுவையையும், ஊட்டச்சத்தையும் அதிகரிக்கும்.

வேர் காய்கறிகள்
பூமிக்குள் இருந்து கிடைக்கும் காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், இஞ்சி போன்ற காய்கறிகளை எப்போதும் தோலுடன்தான் வேகவைக்க வேண்டும். ஏனெனில் காய்கறிகளை தோலுடன் வேகவைக்கும் போது அதிலுள்ள ஊட்டச்சத்துளை நீங்கள் இழக்க நேரிடாது.

பேக்கிங் சோடா
காய்கறிகளை சமைக்கும் போது அதில் பேக்கிங் சோடாவை சேர்க்காதீர்கள். இது காய்கறிகளின் நிறத்தை தக்கவைத்து கொள்ள உதவும், மேலும் சமையலின் செயல்முறை வேகத்தையும் அதிகரிக்கும். ஆனால் இது காய்கறிகளில் உள்ள வைட்டமின் சி-யை சிதைக்கும்.

சமைக்கும் நேரம்
நீண்ட நேரம் சமைக்கும் போதும், அதிக நேரம் சமைக்கும் போதும் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை சிதைக்கிறது. ஏனெனில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் மென்மையானவை, வெப்பம் அவற்றை எளிதில் அழித்துவிடும்.



Click it and Unblock the Notifications
