Latest Updates
-
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க..
மனச்சோர்வா?, ஒரு எட்டு, ஷாப்பிங் போய்ட்டு வாங்க!

ஷாப்பிங் செல்லுங்கள்
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஷாப்பிங் செல்வதன் மூலம் அழுத்தத்தை சற்று குறைக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். மனம் சோர்ந்துபோய் கிடக்கிறதா? ஷாப்பிங்" செல்லுங்கள், சந்தோஷம் மனதை நிறைக்கும்" என்கிறார்கள் அவர்கள். ஷாப்பிங்கில் உங்களுக்கு நீங்களே பரிசளித்துக்கொள்ளுங்கள். அது உங்கள் மன நிலையில் நீடித்த ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இதுதொடர்பான ஆய்வில், ஷாப்பிங் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் கேள்விகள் கேட்டுப் பதில்கள் பெறப்பட்டன.
உற்சாகமான மனநிலை
அத்துடன், குறிப்பிட்ட நபர்கள் தங்களின் ஷாப்பிங் பழக்கம், வாங்கிய பொருட்கள், அப்போது தங்களுக்கு இருக்கும் மனநிலை பற்றியும் டைரி"யில் குறித்து வரும்படி கூறினர்.
ஷாப்பிங் செல்லும்போது தாங்கள் நல்ல மனநிலையில் இல்லாவிட்டால், ஏதாவது ஒரு பொருளை பார்த்தவுடன் ஆசையில்" வாங்குவது வழக்கமாக இருக்கிறது என்று சிலர் தெரிவித்தனர்.
தங்களின் சந்தோஷத்துக்காகவே ஏதாவது" ஒன்றை வாங்கி வருவதாக 62 சதவீதம் பேரும், கொண்டாட்டத்தின் ஒரு வழியாக ஒரு பொருளை வாங்குவதாக 28 சதவிகிதம் பேரும் கூறினர். ஷாப்பிங்கால் மகிழ்ச்சி அடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அது ஒருசில எதிர்மறை தாக்கங்களையும் ஏற்படுத்தக்கூடும். தங்கள் ஆய்வில் பதிலளித்த சிலர் உற்சாகமான மனநிலையில் இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று முன்ஜாக்கிரதையோடு கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
மன அழுத்தம் குறைக்கும் வாசிப்பு
புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு குறைந்த அளவே மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆப் மெடிசின் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் பிரையன் ப்ரைமேக் தலைமையிலான குழு ஒன்று நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.
பதின்பருவத்தை அடைந்த 106 பேரிடம் 6 முறை இருமாதங்களாக சோதனை நடத்தப்பட்டன. புத்தகங்கள் அதிகம் வாசிப்போர், குறைவாக புத்தகம் வாசிப்பவர்களுடன் ஒப்பிடும் போது பத்தில் ஒரு பங்கு அளவே மிக குறைவான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். எனவே வாசித்தல் என்பது மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. எனினும் வாசிப்பதை தவிர்த்து பிற ஊடகங்களிலேயே அதிகமானோர் கவனத்தை செலுத்துவது தற்போது அதிகரித்துள்ளது என்றும் ப்ரைமேக் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
