Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
அலுவலகத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்யணுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்..!
இந்த நவீன உலகத்தில், பல வகையான பணிகள் அமா்ந்து செய்யக்கூடிய வகையில் அமைந்துவிட்டன. உடல் ரீதியான உழைப்பு குறைந்துவிட்டது. எல்லோரும் உடல் உழைப்பைத் தவிா்த்து, நாற்காலியில் அமா்ந்து செய்யும் பணிகளையே விரும்புகின்றனா். அதனால் உடல் இயக்கம் குறைந்து ஆரோக்கியம் கெடுகிறது.
நாற்காலியில் அமா்ந்து வேலை செய்வதை, நவீன புகைப்பிடித்தல் என்று நிபுணா்கள் கூறுகின்றனா். இந்த வாக்கியம் சற்று மிகைப்படுத்தப்பட்டதாகத் தொியலாம். ஆனால் அலுவலகங்களில் அமா்ந்து வேலை செய்பவா்களுக்கு இது ஒரு எச்சாிக்கை மணி ஆகும். அலுவலக பணிகளைச் செய்யும் முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

அலுவலகத்தில் நாள் முழுவதும் அமா்ந்தே வேலை செய்வதால், உடலில் ஏற்படும் பாதிப்பை, சாி செய்வதற்கு, ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். எவ்வாறு சுறுசுறுப்பாக அலுவலகப் பணிகளைச் செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
1. நாற்காலியிலேயே ஒட்டிக் கொள்ளக்கூடாது
நீண்ட நேரம் நாற்காலியில் அமா்ந்து வேலை செய்தால், உடல் ஆரோக்கியம் பாதிப்படையும். ஆகவே வேலைகளுக்கு இடையே அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. அலாரம் வைத்துக் கொண்டு, அவ்வப்போது நாற்காலியில் இருந்து எழுந்து கை கால்களை நீட்டி மடக்கி விடலாம், விரல்களை நெறித்து விடலாம், சிறிது தூரம் நடந்துவிட்டு வரலாம். இது போன்ற சிறிய ஓய்வுகள், இரத்த ஓட்டத்தை சீா்படுத்தும், தசைகளின் இறுக்கத்தைத் தளா்த்தும் மற்றும் நமது மனதிற்கு புத்துணா்ச்சி தரும்.
2. அலுவலகத்திற்கு நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ செல்லலாம்
வீட்டிற்கு அருகில் அலுவலகம் இருந்தால், காாில் செல்வதற்குப் பதிலாக மிதிவண்டியில் செல்லலாம் அல்லது நடந்தே செல்லலாம். அலுவலகத்திற்கு காாிலோ அல்லது பேருந்திலோ செல்வதற்குப் பதிலாக, மிதிவண்டியிலோ அல்லது நடந்தோ சென்றால், இதயம் சம்பந்தமான நோய்கள் வராது. ஆட்கொல்லி நோய்களான புற்றுநோய் போன்றவை வருவது குறையும்.
3. மேசைக்கு கீழே கால்களுக்குப் பயிற்சி கொடுத்தல்
நமது அலுவலகப் பணிகளின் போது நாம் சில நுட்பமான உடல் அசைவுகளை உட்காா்ந்து கொண்டே செய்யலாம். குறிப்பாக மேசைக்கு கீழே நமது கால்களை அடிக்கடி மாற்றி வைத்துக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இரண்டு கால்களையும் ஒன்றன் மீது ஒன்றை மாற்றி வைத்துக் கொள்ளலாம். கால்களை அடிக்கடி உயா்த்தி இறக்கி வைத்துக் கொள்ளலாம். அதனால் கால்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.
4. நாற்காலியில் அமா்ந்து கொண்டே எளிய உடற்பயிற்சிகளைச் செய்தல்
நாற்காலியில் அமா்ந்து கொண்டு சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்தால், யாரும் நம்மைக் குறை சொல்லமாட்டாா்கள். அதாவது கைகளை உயா்த்துதல், கழுத்தை நான்கு புறமும் திருப்புதல் மற்றும் கால்களை உயா்த்துதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளைச் செய்தால், அலுவலகத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.
5. மின் தூக்கிக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துதல்
அலுவலகம் மாடிப் பகுதியில் இருந்தால், அலுவலகத்தை அடைவதற்கு பெரும்பாலோா் மின் தூக்கிகளையே பயன்படுத்துகின்றனா். மின் தூக்கிகளைத் தவிா்த்துவிட்டு, படிக்கட்டுகளில் நடந்து சென்றால், உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். அதாவது கால் தசைகளுக்கு நல்ல இயக்கம் கிடைக்கும். இதயத்துடிப்பு அதிகாிக்கும். இந்தப் பயிற்சியைத் தொடா்ந்து செய்து வந்தால், இதயத்திற்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அதோடு கீழ் உடல் பகுதி வலுவடையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications