Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
தைராய்டு சுரப்பி நல்லா வேலை செய்யணுமா? அப்ப நைட்ல இந்த சுவையான பொருட்களில் ஒன்றை சாப்பிடுங்க...!
நள்ளிரவில் சிற்றுண்டி சாப்பிடுவது என்பது அனைவருக்கும் பிடித்த ஆனால் ஒரு ஆரோக்கியமற்ற பழக்கமாகும். பலர் வயிறு நிறைய சாப்பிட்ட பிறகும் சிப்ஸ், மிக்ஸர் மற்றும் பிஸ்கட் போன்ற நொறுக்குத்தீனிகளை விரும்புகிறார்கள், ஆனால் அதனை கைவிட வேண்டியது அவசியம்.
தைராய்டு உள்ளவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சீரான உணவு முறைகளை எப்போதும் கடைப்பிடிப்பது நல்லது. ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி, சரியான நேரத்தில் தூங்குவது உங்கள் தூக்கத்தின் தரத்தை மீட்டெடுக்கும் மற்றும் உங்கள் தைராய்டு ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பரிந்துரைத்துள்ளார்கள்.

இரவு நேரத்தில் ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதற்குப் பதிலாக சில ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் தைராய்டு செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவும். உங்கள் தைராய்டு செயல்பாட்டை சீராக்கும் உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
4-5 ஊறவைத்த முந்திரி
முந்திரியில் செலினியம் என்ற முக்கிய ஊட்டச்சத்து உள்ளது, இது தைராய்டு சுரப்பியின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வதிலும், தைராய்டு அளவை ஒழுங்குபடுத்துவதிலும், தைராய்டு திசுக்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேங்காய் துண்டுகள்
தேங்காயில் அதிக அளவு நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது, இது தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஊறவைத்த 1 ஸ்பூன் சியா விதைகள்
சியா விதைகள் ஒமேகா -3 இன் வளமான மூலமாகும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, அவை ஹஷிமோட்டோவின் தைராய்டிடிஸ், டிகுவெர்வின் தைராய்டிடிஸ் அல்லது பிற வகையான தைராய்டிடிஸ் போன்ற தைராய்டு சுரப்பி தொடர்பான ஆபத்தான நிலைமைகளைத் தடுக்க உதவும்.
வறுத்த 1 ஸ்பூன் பூசணி விதைகள்
பூசணி விதைகள் துத்தநாகத்தின் வளமான மூலமாகும், இது தைராய்டு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் தொகுப்புக்கு தேவைப்படுகிறது. மேலும், பூசணி விதைகள் டிரிப்டோபானின் இயற்கையான மூலமாகும், இது தூக்கத்தை ஊக்குவிக்கும் அமினோ அமிலமாகும். பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவை தூக்கத்தின் தரத்தை ஊக்குவிக்கலாம்.
மேலே கூறப்பட்டவைத் தவிர, சிட்ரஸ் நிறைந்த பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் கிரீன் டீ ஆகியவை உடலில் தைராய்டு அளவைக் கட்டுப்படுத்த உதவும் வேறு சில உணவுகளாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


