Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
இந்த ஜப்பானிய பானத்தை தினமும் 1 டம்ளர் குடிச்சா.. தொப்பை மடமடன்னு குறையுமாம்.. இத எப்படி செய்றதுன்னு பாருங்க..
Japanese Water Cuts Belly Fat: ஜப்பானியர்கள் எப்போதும் நன்கு ஃபிட்டாக இருப்பார்கள். அதோடு நீண்ட ஆயுளையும் கொண்டிருப்பார்கள். இதற்கு அவர்களின் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான்.
முக்கியமாக ஜப்பானிய மக்கள் தொப்பை இல்லாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் அருந்தும் ஒரு பாரம்பரிய பானம் தான். இந்த பானத்தை ஜப்பானியர்கள் தினமும் தங்களின் உணவில் சேர்த்து வருவார்களாம். தற்போது அந்த பானம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது.

அது என்ன பானம் என்று உங்களுக்கு தெரியாதா? அது வேறொன்றும் இல்லை இஞ்சி மற்றும் எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்படும் பானம் தான். இந்த பானம் வயிற்றில் உள்ள கொழுப்புக்களை கரைப்பது மட்டுமின்றி, உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தி, நல்ல பொலிவான சருமத்தைப் பெறவும் உதவுகிறது. இப்போது அந்த ஜப்பானிய நீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும், அந்த நீரை எப்படி தயாரிப்பது என்பதையும் காண்போம்.
ஜப்பானிய நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்
தொப்பை குறையும்
வயது அதிகரிக்கும் போது வயிற்றுப் பகுதியில் கொழுப்பு தேங்கி தொப்பை வர ஆரம்பித்து, அது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கும். மேலும் தொப்பை வந்துவிட்டால், அதுவே பல ஆரோக்கிய பிரச்சனைகளை வரத் தூண்டிவிடும். ஆனால் இஞ்சி எலுமிச்சை நீரைக் குடித்து வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் கொழுப்பைக் கரைக்கும் பணியை திறம்பட செய்து, தொப்பையைக் குறைத்து, ஃபிட்டாக வைத்துக் கொள்ளும். எனவே தொப்பை உள்ளவர்கள் இந்த நீரை குடித்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் குறையும்
ஜப்பானிய நீரைக் குடித்து வருவதன் மூலம், அது இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது. அதுவும் இந்த பானத்தில் உள்ள இஞ்சி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம், இரத்த குழாய்களின் அழுத்தத்தைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே இந்த பானத்தை தினசரி குடித்து வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கலாம்.
செரிமானம் மேம்படும்
செரிமான பிரச்சனைகளை கொண்டிருந்தாலே தொப்பை விரைவில் வந்துவிடும். ஆனால் இந்த ஜப்பானிய நீரில் உள்ள இஞ்சி மற்றும் எலுமிச்சையில் இருக்கும் நொதிகள், செரிமானத்தை ஊக்குவித்து, மலச்சிக்கல், அசிடிட்டி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்கிறது.
சருமத்தின் அழகு மேம்படும்
முகப்பருவால் அவதிப்படுபவர்கள் மற்றும் பொலிவிழந்த முகத்துடன் இருப்பவர்கள் இந்த ஜப்பானிய நீரைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
இந்த ஜப்பானிய நீரை தயாரிப்பது எப்படி?
ஜப்பானியர்கள் பருகும் பாரம்பரிய நீரை தயாரிப்பது மிகவும் சுலபம். இதற்கு ஒருசில பொருட்களே போதுமானது. அந்த பானத்தின் செய்முறை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
* முதலில் ஒரு இன்ச் துண்டு இஞ்சியை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு தட்டி, 1 1/2 கப் நீரில் போட்டு, குறைந்தது 5-6 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அதை வடிகட்டி, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும்.
* இந்த நீரை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் அதிகபட்ச பலனைப் பெற வேண்டுமானால், இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் மற்றும் உடலின் மெட்டபாலிசம் மேம்பட்டு, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் திறம்பட எரிக்கப்பட்டு, தொப்பை இல்லாத தட்டையான வயிற்றை விரைவில் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
