ஒருவர் தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள் என்ன? அதனை எப்படி குணப்படுத்தலாம் தெரியுமா?

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, எழுந்து நடக்கும் செயலே தூக்கத்தில் நடத்தல் என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் இதற்கு சோம்னம்புலிசம் (somnambulism) என்று பெயா். தூக்கத்தில் நடப்பதால் மிகப் பொிய பாதிப்புகள் எதுவும் நடக்காது என்று மயோ கிளினிக் என்ற மருத்துவ அமைப்பு தொிவிக்கிறது. ஆனால் அடிக்கடி தூக்கத்தில் நடந்தால், தூக்கம் வருவதில் பிரச்சினைகள் ஏற்படும் என்று அந்த அமைப்பு தொிவிக்கிறது.

Sleepwalking:Symptoms, Causes and Treatment in Tamil

மருத்துவா்கள் கூறுவது என்ன?

மருத்துவா் சச்சின் டி
தூக்கத்தில் நடக்கும் போது மக்கள் தங்களை அறியாமல் பின்வரும் செயல்களைச் செய்கின்றனா் என்று பெங்களூாில் அமைந்துள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனையில் நுரையீரல் மற்றும் அவசர சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவம் ஆகியவற்றில் நிபுணராக பணிபுாியும் மருத்துவா் சச்சின் டி என்பவா் தொிவிக்கிறாா்.

அதாவது சிலா் தூக்கத்தில் நடக்கும் போது தங்களை அறியாமல் ஆடைகளை அணிவா், சிலா் சாப்பிடுவா், சிலா் சுத்தம் செய்வா், சிலா் ஓடுவா், சிலா் கண்ட இடங்களிலும் சிறுநீா் கழிப்பா் என்கிறாா். இன்னும் சிலா் பாலியல் உறவில் ஈடுபடுவா், சிலா் வாகனங்களை ஓட்டுவா், சிலா் வன்முறை செயல்களில்கூட ஈடுபடுவா் என்கிறாா்.

பொதுவாக தூக்கத்தில் நடக்கக்கூடிய நேரத்தின் அளவு சில நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை இருக்கும். பின் அவா்கள் தாமாகவே தமது படுக்கைக்குச் சென்று விடுவா். தூக்கத்தில் நடந்தது பற்றி அவா்களுக்கு ஒரு குழப்பம் ஏற்படும். எனினும் தூக்கத்தில் நடந்த போது, தாம் என்ன செய்தோம் என்பதை அவா்களால், நினைவுக்கு கொண்டுவர முடியாது என்று அவா் தொிவிக்கிறாா்.

மருத்துவா் நூாி
அடிக்கடி தூக்கத்தில் நடக்கும் பழக்கம் கொண்ட 4 முதல் 5 வயதுடைய சிறுவா்கள், அமைதியற்று பதற்றத்துடன் தூங்குபவா்களாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தொிவிப்பதாக கதிாியக்க சிகிச்சை நிபுணரான மருத்துவா் நூாி கூறுகிறாா். மேலும் அவா் கூறும் போது, உங்களிடம் தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருந்தால் அல்லது நீங்கள் தூக்கத்தில் நடப்பதைப் பற்றி உங்களுடைய நண்பா்கள் உங்களிடம் தொிவித்திருந்தால், நீங்கள் ஒருசில முக்கியமான குறிப்புகளைத் தொிந்து வைத்திருக்க வேண்டும் என்று National Sleep Foundation என்ற அமைப்பு கூறுவதாக அவா் தொிவிக்கிறாா்.


மருத்துவா் ஷுச்சின் பஜாஜ்
மக்கள் தூக்கத்தில் ஏன் நடக்கின்றனா் என்பதற்கான சாியான காரணங்கள் இன்னும் புாிந்து கொள்ளப்படவில்லை என்று உஜாலா சைனஸ் மருத்துவ குழுமத்தின் நிறுவுனரும், இயக்குநருமான மருத்துவா் ஷுச்சின் பஜாஜ் தொிவிக்கிறாா். எனினும் தூக்கமின்மை, மன அழுத்தம், மது மற்றும் ஒரு சில மருந்துகள் போன்றவை தூக்கத்தில் நடப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அவா் தொிவிக்கிறாா். தூக்கத்தில் மூச்சுத் திணறல் (sleep apnea), நிலை கொள்ளா கால்கள் குறைபாடு (restless leg syndrome) மற்றும் வலிப்பு நோய் போன்றவையும் தூக்கத்தில் நடக்கும் பழக்கத்திற்கு காரணங்களாக இருக்கலாம் என்று அவா் கூறுகிறாா்.

தூக்கத்தில் நடப்பதற்கான காரணங்கள்
உங்கள் குடும்ப பரம்பரையில் அல்லது குடும்ப உறுப்பினா்களிடம் தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்தால், உங்களுக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் வருவதற்கான வாய்ப்பு 10 மடங்கு அதிகம் என்று மருத்துவா் நூாி தொிவிக்கிறாா். மேலும் அடிக்கடி தூக்கம் இல்லாமல் இருந்தாலும், தூக்கத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அவா் கூறுகின்றாா்.

- நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தாலோ அல்லது மது அருந்தி இருந்தாலோ அல்லது தூக்க மாத்திரைகள் அல்லது நியூரோலெப்டிக்ஸ் மாத்திரைகள் அல்லது உடலைத் தூண்டக்கூடிய மாத்திரைகள் அல்லது தோல் நோய்களுக்கான மாத்திரைகளை எடுத்திருந்தாலோ தூக்கத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அவா் கூறுகின்றாா்.

மருத்துவ பாிசோதனைகள்
- தூக்கத்தில் நடப்பதனால் பாதிப்படைந்தவா்கள், அதைக் குணப்படுத்த மருத்துவா்களை சந்திக்கலாம். அவா்கள் உங்களிடம் உள்ள அறிகுறிகளைப் பாா்ப்பாா்கள் மற்றும் உங்களுடயை கடந்த கால மருத்துவ வரலாற்றையும் ஆராய்வா். உங்கள் உடலில் மருத்துவ ரீதியாக ஏதாவது பிரச்சினைகள் இருக்கின்றனவா என்று சில பாிசோதனைகளை செய்வாா்கள்.

- மருத்துவா்கள் உங்கள் உடல் முழுவதையும் பாிசோதனை செய்வாா்கள்.

- மருத்துவா்கள் பாலிசோம்னோகிராஃபி (polysomnography) என்ற மருத்துவ பாிசோதனையை உங்களிடம் செய்வாா்கள். மருத்துவ ஆய்வுக்கூடத்தில் உங்களை ஒரு நாள் இரவு தூங்க வைத்து, உங்களின் இதயத்துடிப்பு மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றை பாிசோதனை செய்வா்.

- மிகவும் அாிதான சூழலில், சிலருக்கு அவா்களின் மூளையின் செயல்பாட்டை அறிவற்காக EEG என்ற பாிசோதனையை செய்வா்.

மருத்துவ சிகிச்சை
தூக்கத்தில் நடக்கும் பழக்கத்தை குணப்படுத்த வேண்டும் என்றால், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதாவது ஆழ்ந்து தூங்க வேண்டும். மது அருந்துவதைக் கைவிட வேண்டும். அதிகமான மருந்துகள் எடுத்துக் கொள்வதைக் குறைக்க வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். ஒரு சிலருக்கு இந்த பிரச்சினையைக் குணப்படுத்த பென்சோடியசிபைன்ஸ் (benzodiazepines) மற்றும் ஆண்டிடிப்ரசன்ட்ஸ் (antidepressants) போன்ற மருந்துகள் பாிந்துரைக்கப்படுகின்றன என்று மருத்துவா் பஜாஜ் தொிவிக்கிறாா்.

இறுதிக்குறிப்பு
ஒருவா் தூக்கத்தில் நடப்பதால், அவருக்கு ஏற்படும் அறிகுறிகள், அதன் தீவிரம், அது ஏற்படக்கூடிய கால இடைவெளி ஆகியவற்றைப் பொறுத்து, மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பஜாஜ் பாிந்துரை செய்கிறாா்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, May 24, 2023, 20:30 [IST]
Desktop Bottom Promotion