உங்க உடலில் இந்த சத்து குறைவாக இருந்தால்... எலும்பு பிரச்சனை உட்பட என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

Vitamin D deficiency In Tamil: நம் உடல் ஆரோக்கியமாக செயல்பட ஆரோக்கியமாக இருக்க சில ஊட்டச்சத்துக்கள் மிக அவசியம். அவற்றில் ஒன்று வைட்டமின் டி. பொதுவாக வைட்டமின் டியை உணவுகளில் இருந்தும், சூரிய ஒளியிலிருந்து நாம் பெறலாம்.

பல உடல் செயல்பாடுகளைச் செய்வதில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்குத் தேவையான இரண்டு முக்கியமான தாதுக்களான கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உடல் உறிஞ்சி தக்கவைக்க வைட்டமின் டி உதவுகிறது. இது புற்றுநோயின் வளர்ச்சியைக் குறைக்கும், தொற்றுநோயைத் தடுக்கும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Signs Your Body Has Extremely Low Vitamin D In Tamil

மேலும், எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க வைட்டமின் டி உதவுகிறது. நம் உடலில் வைட்டமின் டி வகிக்கும் பல்வேறு செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அது நம் உடலில் இல்லாதபோது, என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். வைட்டமின் டி குறைபாடு உங்கள் உடலில் என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

தூக்கமின்மை

தூக்கமின்மை உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, குறைந்த அளவு கால்சிஃபெரால் உங்கள் தூக்க முறையை பாதிக்கலாம். ஏனெனில் இந்த வைட்டமின் குறைபாடு மன அழுத்த ஹார்மோன் அல்லது கார்டிசோலின் அளவை உயர்த்துகிறது.

இதன் காரணமாக, நீங்கள் அடிக்கடி சோர்வடைவீர்கள். வைட்டமின் டி குறைபாடு குறுகிய தூக்க சுழற்சிகள், இரவுநேரத்தில் தூங்காமல் விழித்திருப்பது மற்றும் பிற தூக்கக் கோளாறுகளுடன் தொடர்புடையது.

எலும்புகளில் வலி

வைட்டமின் டி உங்கள் எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைவான வைட்டமின் டி காரணமாக, ஒருவர் எலும்பில் வலி, பலவீனமான தசை, குறைந்த எலும்பு நிறை மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கலாம். குறைந்த வைட்டமின் டி அடிக்கடி வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது மற்றும் அவற்றுடன் தொடர்புடைய காயங்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

அடிக்கடி நோய்வாய்ப்படும்

வைட்டமின் டி அடிக்கடி ஏற்படும் நோய்களுடன் தொடர்புடையது. நோயெதிர்ப்பு மண்டலத்தில் அதன் குறிப்பிடத்தக்க பங்கு காரணமாக, வைட்டமின் டி இன் குறைபாடு பல்வேறு வகையான நோய்க்கிருமிகளுக்கு உடலை வெளிப்படுத்துகிறது. குறைந்த அளவு வைட்டமின் டி உள்ளவர்களுக்கு சளி, ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

மனச்சோர்வு

மனச்சோர்வின் ஆரம்பம் பல காரணங்களால் ஏற்படலாம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு அவற்றில் முக்கியமானது. வைட்டமின் டி மற்றும் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே மிகவும் குறைவாக உள்ளது. அதனால்தான் பலர் இந்த இணைப்பைப் பார்ப்பதில்லை.

மனச்சோர்வின் அறிகுறிகளுக்கும் குறைந்த அளவு வைட்டமின் டி-க்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எதிர்மறை உணர்ச்சிகளைக் கொண்டவர்களுக்கு பெரிதும் உதவியதாக ஆய்வு தெரிவிக்கிறது.

முடி உதிர்தல்

முடியின் வேர்களைத் தூண்டுவதிலும், முடி வளர்ச்சியை துரிதப்படுத்துவதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்போது, அது உங்கள் தலைமுடி வளர்ச்சியை பாதிக்கும் மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். உங்களுக்கு அதிக முடி உதிர்தல் ஏற்பட்டால், வைட்டமின் டி குறைபாட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே, வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்ள மறக்காதீர்கள்.

மற்ற பிரச்சனைகள்

உடலில் வைட்டமின் டி இன் குறைபாடு இருந்தால், அது இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும், இது அறிவாற்றல் குறைபாட்டின் அபாயத்தை அதிகரிப்பதோடு, கடுமையான ஆஸ்துமா பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது. மேலும், இந்த குறைபாடு புற்றுநோய் வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது. குறைந்த அளவு வைட்டமின் டி எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது மற்றும் உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை குறைக்கிறது.

பின்வரும் பிரச்சினைகள் உள்ளவர்கள் வைட்டமின் டி குறைபாட்டின் அதிக ஆபத்தில் உள்ளனர். அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி அல்லது கிரோன் நோய் போன்ற அழற்சி குடல் நோய்கள் உள்ளவர்கள் இந்த அத்தியாவசிய வைட்டமின் சத்தை குறைந்த அளவு கொண்டிருக்கலாம். ஏனெனில் இவர்களில் உள்ள குடல் அமைப்பு வைட்டமின்களை உறிஞ்சாது.

பருமனானவர்களுக்கும் இரத்தத்தில் வைட்டமின் டி அளவு குறைவாக இருக்கும். ஏனெனில் இந்த நபர்களின் கொழுப்பு திசுக்களில் வைட்டமின் டி குவிகிறது. இவை தவிர, சமீபத்தில் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் குறைந்த அளவு வைட்டமின் டி இருக்க வாய்ப்புள்ளது. வைட்டமின் டி சத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் இப்போது தெரிந்திருப்பீர்கள். எனவே, வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, June 22, 2023, 12:08 [IST]
Desktop Bottom Promotion