Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தா உங்கள் செரிமான அமைப்பு சூப்பரா வேலை செய்யுதுனு அர்த்தமாம்...!
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சீரான செரிமானம் என்பது மிகவும் அவசியமானது. உங்கள் செரிமான ஆரோக்கியம் உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் பயனடையலாம். முழு உணவுகளை உண்பது மற்றும் இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது போன்ற சின்ன சின்ன மாற்றங்கள் உங்கள் செரிமான ஆரோக்கியத்தில் பல அதிசயங்களைச் செய்யும்.
உங்கள் செரிமான ஆரோக்கியம் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் மற்றும் எப்படி வாழ்கிறீர்கள் என்பதன் மூலம் நேரடியாக பாதிக்கப்படுகிறது. புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற சில பழக்கவழக்கங்கள் உங்கள் பொது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சில பொதுவான வயிற்றுப் பிரச்சினைகளுக்கு அவர்கள் காரணமாக இருக்கலாம்.

சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணமாகிவிட்டதா என்பதை எப்படி அறிவது? இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டிர்கள். உங்கள் செரிமான ஆரோக்கியம் சீராக இருப்பதை சில அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தெளிவான ஏப்பம்
புளிப்பு ஏப்பம் என்பது உங்கள் வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலத்தின் குறிகாட்டியாகும். மாறாக சாப்பிட்ட பின் நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தெளிவான ஏப்பம் வெளிப்பட்டால் உங்கள் செரிமானம் சீராக உள்ளது என்று அர்த்தம்.
உற்சாகம்
ஆரோக்கியம் சீராக இருக்கும் போது அது நம் செயல்பாடுகளிலும் வெளிப்படும். உங்கள் செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்போது நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எந்த அசௌகரியமும் உங்கள் வேலைகளில் குறுக்கிடாது.
மலம் கழித்தல்
நீங்கள் எவ்வளவு மலம் கழிக்க வேண்டுமென்று என விதிகளும் இல்லை. ஏனெனில் இது நபருக்கு நபர் மாறுபடும். பொதுவாக உங்கள் குடலை ஒரு நாளைக்கு மூன்று முறை மலத்தை வெளியேற்றுவது ஆரோக்கியமானது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வழக்கமான பழக்கவழக்கங்களில் ஏதேனும் பெரிய மாற்றங்களை நீங்கள் கவனித்தால் அல்லது மலம் கழிக்க இரவில் எழுந்திருக்க வேண்டியிருந்தால், செரிமான ஆரோக்கியத்தில் சிக்கல் உள்ளது என்று அர்த்தம்.
அசௌகரியம் இல்லாமல் மலம் வெளியேறுவது
வசதியாக மலம் கழிப்பது ஆரோக்கியமான குடலின் அடையாளமாகும். நீங்கள் மலம் கழிக்க சிரமப்பட வேண்டியிருந்தால் அல்லது மலம் கழிக்கும்போது வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை அணுகவும். இது மலச்சிக்கல் அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) போன்ற அடிப்படை பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
நன்றாக பசி எடுத்தல்
மோசமான வளர்சிதை மாற்றமம், செரிமான ஆரோக்கியமும் இருக்கும்போது உங்களுக்கு பசியே எடுக்காது. உங்களுக்கு சீரான இடைவெளியில் பசி எடுத்தால் உங்கள் செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம்.
தாகம் எடுத்தல்
உங்களுக்கு அடிக்கடி தாகம் எடுப்பது உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் சீரான ஆரோக்கியத்தின் வெளிப்பாடாகும். தாகம் எடுக்கும் போது உடனடியாக தாமதிக்காமல் தண்ணீர் குடியுங்கள்.
நீங்கள் உண்ணும் உணவு உங்கள் செரிமான அமைப்பிலிருந்து உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களாக மாற்றப்படுகிறது. உங்கள் செரிமான அமைப்பை நீங்கள் கவனித்துக் கொள்ளாவிட்டால், அந்த முக்கியமான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் உங்கள் உடல் சிக்கலை சந்திக்க நேரிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

