Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த 4 ஆபத்தான உடல்நல பிரச்சனைகள் வயதானவர்களை விட இளைஞர்களுக்கு வர அதிக வாய்ப்பிருக்காம்...ஜாக்கிரதை!
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நமக்கு வயதாகும்போது, பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால், நீங்கள் இளைஞர்களாக இருக்கும்போது, உடல்நல பிரச்சனைகளை பற்றி கவலைப்பட வேண்டுமா? ஆம், நீங்கள் இளைஞர்களாக இருந்தாலும், உங்களுக்கு சில ஆபத்தான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இளமைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு நாள்பட்ட நிலைமைகள் ஏற்படாது என்று அர்த்தமல்ல. அவர்களும் உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்படலாம். குறிப்பாக இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகளால் நிகழலாம். இளமை பருவத்தில் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், உங்களைப் பாதிக்கும் தீவிர உடல்நலக் குறைபாடுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பெரும்பாலும் 30 வயதை தாண்டியவுடன் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனையால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். அவை மட்டுமில்லாமல், பலர் மாரடைப்பால் இறக்க நேரிடுகிறது. ஆதலால், இளைஞர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். இளைஞர்களை பாதிக்கும் ஆபத்தான பிரச்சனைகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உயர் இரத்த அழுத்தம்
இதயம் மற்றும் சில ஆபத்தான நோய்கள் எல்லா வயதினரையும் பாதிக்கலாம். அவர்கள் எந்த குடும்ப மருத்துவ வரலாற்றைக் கொண்டிருக்காவிட்டாலும் கூட, ஆபத்தான நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உண்மையில், மயில்சாமி, கேகே, புனித் ராஜ்குமார் போன்ற பல பிரபலங்கள் மாரடைப்பால் சமீபத்தில் இறந்தது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. இதயம் தொடர்பான பிரச்சனைகளை தூண்டக்கூடிய ஒரு முக்கியமான நிலை உயர் இரத்த அழுத்தம். உங்கள் இரத்த அழுத்தத்தை தவறாமல் பரிசோதித்துக்கொள்வது முக்கியம். மேலும், உங்கள் உடலில் தோன்றும் எச்சரிக்கை அறிகுறிகள் மீது கவனம் செலுத்துங்கள்.
குடல் புற்றுநோய்
பெருங்குடல் மற்றும் மலக்குடல் உட்பட பெரிய குடலில் எங்கு வேண்டுமானாலும் குடல் புற்றுநோய் உருவாகலாம். குடல் புற்றுநோய்க்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கணிசமான ஆல்கஹால் உட்கொள்ளல் மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு போன்ற காரணிகள் ஒருவரை அதிக ஆபத்தில் ஆழ்த்தலாம்.
பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்களால் மில்லினியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. தி ஜர்னல் ஆஃப் தி நேஷனல் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, 1950களில் பிறந்தவரை விட 1990களில் பிறந்தவர் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை இரண்டு மடங்கு அதிகம் பெற்றிருக்கின்றன. அதேபோல மலக்குடல் புற்றுநோய் உருவாக்கும் அபாயம் நான்கு மடங்கு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
வகை 2 நீரிழிவு
வகை 2 நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நிலையாகும். இது உங்கள் உடல் இரத்த சர்க்கரையை செயலாக்கும் முறையை பாதிக்கிறது. அறிக்கைகளின்படி, கடந்த சில ஆண்டுகளில், நாட்டில் 14 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களில் இதன் பாதிப்பு 20% அதிகரித்துள்ளது. நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
ஆஸ்டியோபோரோசிஸ்
பொதுவாக, உங்கள் ஆரம்ப வயது வாழ்க்கையில் எலும்புகள் தடிமனாக இருக்கும். நீங்கள் 35 வயதை அடையும் போது, எலும்புகள் அவற்றின் அடர்த்தியை இழக்கத் தொடங்குகின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செயல்முறை வேகமாக நடக்கும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆஸ்டியோபோரோசிஸ் உங்கள் எலும்புகள்
பலவீனமடைவதை துரிதப்படுத்துகிறது. மேலும் அவை எலும்பு முறிவுகளுக்கு ஆளாகின்றன. இந்த நிலை பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் என்றாலும், இது அவர்களின் 20, 30 மற்றும் 40 வயதுடைய இளைஞர்களையும் பாதிக்கலாம்.
வாழ்க்கை முறை குறிப்புகள்
நீங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள், உங்கள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் மற்றும் அதிகப்படியான உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கவும்.
ஆரோக்கியமற்ற பழக்கங்களான மது அருந்துதல் மற்றும் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். தாவர அடிப்படையிலான உணவை அதிகமாக உண்ணுங்கள், போதுமான வைட்டமின் டி மற்றும் பால் பொருட்கள், மீன் மற்றும் முட்டைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












