Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
உலக சுகாதார நிறுவனம் எவ்வளவு மது அருந்துவது பாதுகாப்பானது என்று அறிவித்துள்ளது... நீங்க எவ்வளவு குடிக்கிறீங்க?
மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் என்பது உலகம் முழுக்க அறிந்ததே. மது அருந்துவதால் வெகுசில நன்மைகள் இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளே அதிகம். மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் எப்போதும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆல்கஹால் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த, மனோவியல் மற்றும் அடிமையாக்கும் பொருளாக வரையறுக்கப்படுகிறது.
புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச ஏஜென்சியால் புற்றுநோயை ஏற்படுத்தும் முதன்மையான பொருளாக ஆல்கஹால் வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இது ஏழு வகையான புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது. அதிக அளவு மது அருந்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது.

மிதமான அளவில் மது அருந்துவது ஆரோக்கியமானதா?
மனித ஆரோக்கியத்தில் மதுவினால் ஏற்படுத்தும் ஆபத்து மிகப்பெரியது, உலக சுகாதார அமைப்பு (WHO) முதல் துளி ஆல்கஹால் முதல் ஆபத்து தொடங்குகிறது என்று எச்சரித்துள்ளது.
தைராய்டு பிரச்சனை உங்கள் கண்களை பாதிக்குமா?
"ஆல்கஹால் நுகர்வு என்று வரும்போது, ஆரோக்கியத்தை பாதிக்காத பாதுகாப்பான அளவு எதுவும் இல்லை" என்று WHO கூறுகிறது. "தற்போதுள்ள சான்றுகள், மது புற்றுநோய் விளைவுகளை "சுவிட்ச் ஆன்" செய்து மனித உடலில் வெளிப்படத் தொடங்கும் ஒரு குறிப்பிட்ட அளவைக் குறிக்க முடியாது" என்று ஐ.நா சுகாதார நிறுவனம் கூறுகிறது.
"ஆல்கஹாலின் பாதுகாப்பான நிலை என்று எதையும் கூற முடியாது. நீங்கள் எவ்வளவு குடிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, குடிப்பவரின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து எந்த மதுபானத்தின் முதல் துளியிலிருந்து தொடங்குகிறது. உறுதியாகச் சொல்லக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு அதிகமாகக் குடிக்கிறீர்களோ, அது அதிக தீங்கு விளைவிக்கும், அதாவது நீங்கள் குறைவாகக் குடித்தால், அது பாதுகாப்பானது" என்று WHO அறிக்கைக் கூறுகிறது.
ஆல்கஹாலால் ஏற்படக்கூடிய ஆபத்துகள்
மது அருந்துவது நீண்ட காலமாகவோ அல்லது அதிகப்படியாகவோ இருக்கும் போது, பல்வேறு உடல் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. நீண்ட காலம் குடிப்பதால் கொழுப்பு கல்லீரல், ஆல்கஹால் ஹெபடைடிஸ், ஃபைப்ரோஸிஸ் மற்றும் சிரோசிஸ் உள்ளிட்ட கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். இந்த நிலைமைகள் கல்லீரலை செயலிழக்கச் செய்து கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
ஆல்கஹாலை தொடர்ந்து குடிப்பது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது, குறிப்பாக சுவாச அமைப்பு நோய்த்தொற்றுகளுக்கு உடல் எளிதில் பாதிக்கப்படும். அதிக இரத்த அழுத்தம், கார்டியோமயோபதி (இதய தசையின் நோய்) மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் போன்ற இதய பிரச்சனைகளையும் நாள்பட்ட மது அருந்துதல் ஏற்படுத்தலாம்.
ஆல்கஹால் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது, அறிவாற்றல் செயல்பாடுகளில் குறைபாடுகள், நினைவாற்றல் இழப்பு மற்றும் வெர்னிக்-கோர்சகோஃப் நோய்க்குறி போன்ற நரம்பியல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
இரைப்பை அழற்சி, கணைய அழற்சி மற்றும் இரைப்பை குடல் புற்றுநோய்களின் அதிக ஆபத்து உள்ளிட்ட இரைப்பை குடல் பிரச்சினைகள் பொதுவானவை.
ஆல்கஹால் பயன்பாடு மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது. கூடுதலாக, இது பலவீனம், ஆபத்தான நடத்தைகள் மற்றும் அடிமையாதல் உள்ளிட்ட சமூக மற்றும் நடத்தை சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
எந்த நாடுகள் இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்?
தனிநபர் மது அருந்துவதற்கான உலகளாவிய தரவரிசையில் லிதுவேனியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நுகர்வு பெரும்பாலும் ஓட்கா மற்றும் பீரால் நிறைந்துள்ளது, கலாச்சார மற்றும் சமூக மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
ஆசியாவில், தென் கொரியா அதிக குடிப்பழக்கம் உள்ள நாடாக உள்ளது. அறிக்கைகளின்படி, தென் கொரியர்கள் ஆண்டுக்கு சராசரியாக 10.9 லிட்டர் மது அருந்துகிறார்கள். தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக வியட்நாமும், தாய்லாந்து, மங்கோலியா, சீனா ஆகிய நாடுகளும் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு இந்தியர் ஒரு வருடத்தில் சராசரியாக 4.5 லிட்டர் மது அருந்துகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
