Latest Updates
-
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம்
உங்களுக்கு அடிக்கடி சளி பிடிச்சுகிட்டே இருக்கா? அதுக்கு காரணம் இவைகள் தானாம்..
Reasons For Cold In Tamil: மழை பெய்தாலே சளித் தொல்லையும் கூடவே சேர்ந்து வந்து விடும். சிலருக்கு சளிப் பிடிப்பது அடிக்கடி ஏற்படுவது உண்டு. இப்போது தான் சளிப் பிடித்து சரியாகி இருக்கும் மறுபடியும் சளி பிடிக்க ஆரம்பித்து விடும். இதற்கு முக்கிய காரணம் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவது தான். அடிக்கடி சளிப் பிடிப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.
ரைனோ வைரஸ்கள் மற்றும் எண்டோவைரஸ்கள் பொதுவாக சளியை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்களாகும். சிலருக்கு இந்த சளித் தொல்லை அடிக்கடி ஏற்படுவது உண்டு. பெரும்பாலான பெரியவர்களுக்கு வருடத்தில் 1-3 வருடம் வரை சளி வருவது இயல்பானது. ஆனால் சிலருக்கு 3-க்கும் மேலான தடவை சளித் தொல்லை ஏற்படுகிறது. இப்படி அடிக்கடி சளித் தொல்லை ஏற்படுவதற்கு என்ன காரணங்கள் என அறிந்து கொள்வோம்.

ஒருவருக்கு வருடத்திற்கு எத்தனை முறை சளித் தொல்லை ஏற்படலாம்?
சளித் தொல்லை ஏற்படுவது ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது. உங்களின் வயது, ஆரோக்கியம் இவற்றை சார்ந்து இருந்தாலும் சில சமயங்களில் சுற்றுச்சூழல் மற்றும் தொற்று இவற்றின் காரணமாக கூட சளித் தொல்லை ஏற்படலாம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பள்ளிக்கு போகும் குழந்தைகள் கை சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு வருடத்திற்கு 4-6 முறை வரை சளித் தொல்லை ஏற்படலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு 2-3 முறை சளித் தொல்லை ஏற்படலாம்.
சளித் தொல்லை அடிக்கடி ஏற்படக் காரணங்கள்:
சுற்றுச்சூழல் காரணிகள்
உங்களைச் சுற்றி யாராவது ஒருவருக்கு சளி பிடித்தாலும் அது உங்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. முடிந்த வரை உங்கள் கைகளை சுத்தமாக வைத்து இருத்தல், பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து தள்ளி இருத்தல், இருமும் போது தும்மும் போது கைக்குட்டைகளை பயன்படுத்துதல் போன்ற விஷயங்களை செய்து வரலாம்.
வயது
அடிக்கடி சளி பிடிப்பதற்கு உங்கள் வயதும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது குழந்தைகள் அதிகளவு சளித் தொல்லையை அனுபவிக்கின்றனர். அதே மாதிரி 30-40 வயதில் சளிப் பிரச்சினைகளை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடிப்பதற்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் குழந்தைகளிடம் அதிக சுகாதாரம் இல்லாததும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து அவர்களுக்கு எளிதாக பரவி விடும்.
நோயெதிர்ப்பு அமைப்பு
உங்களுக்கு நோய்க்கிருமிகள் தாக்குதல் ஏற்பட்ட உடன் அதை சரிசெய்ய உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு பல்வேறு விதங்களில் போராடும். எனவே நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும் போது உங்களுக்கு அடிக்கடி சளித் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது. அடிக்கடி சளித் தொல்லை ஏற்படுவதற்கு இந்த நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
அதிக வைரஸ்கள் பரவுதல்
குளிர்காலத்தில் வைரஸ்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இந்த பருவ நிலை மாறுபாட்டில் வைரஸ்கள் பல்கிப் பெருக நிறையவே வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி இந்த குளிர்காலத்தில் நிறைய நோய்களும் நம்மளை தாக்க கூடும். அதிக எண்ணிக்கையிலான காய்ச்சல், கோவிட் 19 போன்ற தொற்றுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடிக்கடி சளி பிடிப்பதை எப்படி தடுக்கலாம்?
* உங்களுக்கு தொற்று நோய்கள் இருந்தாலோ அல்லது தொற்று நோய் பரவும் காலமாக இருந்தாலோ வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்வது அவசியம்.
* நோய்வாய்ப்பட்ட நபர்களிடம் இருந்து தூரமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நோய்த்தொற்று இருந்தால் வீட்டிலேயே தனியாக இருப்பது நல்லது.
* உங்கள் கைகளை தொடர்ச்சியாக எழுவது நல்லது. தும்மல் மற்றும் இருமல் போன்ற விஷயங்களை செய்யும் போது உங்கள் கைகளை தொடர்ச்சியாக கழுவது நல்லது. கோவிட் போன்ற சமயங்களில் சானிட்டைசரை பயன்படுத்துங்கள்.
* உங்களைச் சுற்றி என்னென்ன நோய்கள் வருகின்றன என்பதை கவனியுங்கள். அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் அவசியம்.
* குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போடுவது மிகவும் நல்லது. இன்புளுயன்சா, நிமோனியா போன்றவற்றின் தாக்குதலில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற தடுப்பூசிகள் போட வேண்டும்.
* நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். நல்ல ஆரோக்கியமான உணவுகள், வைட்டமின் சி உணவுகள் மற்றும் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை செய்து வாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











