Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
ஆயுர்வேதத்தின் படி நீங்க காலையில குளிர்ச்சியான உணவுகள சாப்பிடவே கூடாதாம்...அதுக்கு என்ன காரணம் தெரியுமா?
நமது குடலில் உள்ள வளர்சிதை மாற்ற நெருப்பு சூரியனின் சுழற்சிக்கு ஏற்ப செயல்படுமாம். காலையில், சூரியன் உதிக்கும் போது, குடல் நெருப்பு குறைவாக இருக்கும், அதனால்தான் நம் குடலில் உள்ள அக்னியை செயல்படுத்துவதற்கு காலையில் சூடான காலை உணவை சாப்பிட வேண்டும் என்கிறார்கள் ஆயுர்வேத நிபுணர்கள்.
புதிய பழங்கள், குளிர்ந்த பால் அல்லது இரவில் ஊறவைத்த ஓட்ஸை நீங்கள் காலையில் சாப்பிடுகிறீர்களா? இவை அனைத்தும் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை அதிகரிக்கும். ஆனால், அதே வேளையில், அன்றைய முதல் உணவிற்கு அவை சிறந்த உணவுத் தேர்வாக இருக்காது.

தங்கள் நாளுக்கு மிகவும் தேவையான தொடக்கத்தை வழங்குவதற்காக சூடான காலை உணவுகளை விட குளிர்ந்த காலை உணவு விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் சிலர் உள்ளனர். இவை முற்றிலும் தவறானது என்கிறது ஆயுர்வேதம்.
ஆயுர்வேதத்தின்படி, அன்றைய கனமான உணவான மதிய உணவிற்கு செரிமான அமைப்பை சுறுசுறுப்பாகச் செய்ய சூடான காலை உணவு விருப்பங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குவது சிறந்தது என்கிறது. நாம் ஏன் சூடான காலை உணவை சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
குளிர்ந்த காலை உணவு நல்லதா கெட்டதா?
நமது வளர்சிதை மாற்ற நெருப்பு சூரியனின் நிலையுடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது. காலையில் சூரியன் உதிக்கும் போது, குடலில் உள்ள உங்கள் வளர்சிதை மாற்ற நெருப்பும் அப்போதுதான் எழுகிறது. இந்நிலையில், நீங்கள் காலையில் குளிர்ந்த காலை உணவை சாப்பிடும்போது, உங்கள் குடலுக்கு செல்லும் குளிர்ந்த உணவு, வளர்சிதை மாற்ற நெருப்பை அணைந்துவிடும் அல்லது பலவீனமடைய செய்யும். இதனால், காலப்போக்கில், உங்கள் செரிமான ஆரோக்கியம் பலவீனமாகலாம்.
நமது செரிமான ஆரோக்கியத்தில் அன்பையும் அக்கறையையும் காட்டுவதன் மூலம் நாளைத் தொடங்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. காலை 5-7 மணிக்குள் உங்கள் பெருங்குடல் சுறுசுறுப்பாக இருக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேலும், செரிமான நெருப்பு சூரிய உதயத்தில் சுறுசுறுப்பாகவும் சூரிய அஸ்தமனத்தில் மந்தமாகவும் மாறும்.
ஆரோக்கியமான காலைப் பழக்கங்கள்
நம் நாளை தொடங்கும் போது, ஆரோக்கியமான காலை பழக்கங்களோடு தொடங்க முயற்சி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரமாவது தியானம், யோகா அல்லது உடற்பயிற்சியில் செலவிடுங்கள். தியானம், யோகா அல்லது இடுப்பின் கீழ்நோக்கி இயக்கம் அல்லது பெரிஸ்டால்சிஸைச் செயல்படுத்த நீட்டுதல் போன்ற சில அடிப்படை யோகா பயிற்சிகளைப் பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான உங்கள் நாளைத் தொடங்க வேண்டும். இவை வயிறு, குடல் மற்றும் பெருங்குடலில் இருந்து எந்த கழிவுகளையும் வெளியேற்ற அனுமதிக்கிறது.
வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைப் பருகவும்
வயிற்றில் உள்ள செரிமான நெருப்பைத் தூண்டுவதற்கு குறைந்தபட்சம் 200 மில்லி வெதுவெதுப்பான நீரைக் காலையில் குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடிப்பது, உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவும்.
இரவில் ஊறவைத்த பருப்புகளை சாப்பிடுங்கள்
ஒரு இரவு முழுவதும் ஊறவைத்த பருப்புகளை சாப்பிடுங்கள். ஏனெனில் அவை சிறந்த சூப்பர்ஃபுட்கள் மற்றும் வைட்டமின்கள், தாதுக்களின் சக்தியாக இருக்கின்றன. நீங்கள் சுண்டவைத்த பழங்களையும் சாப்பிடலாம், அதில், ஆப்பிள் அல்லது பீச் போன்ற பழங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பழத் தோலை உரித்து, சிறிது தண்ணீர், இலவங்கப்பட்டை அல்லது கிராம்பு சேர்த்து, அனைத்தையும் நன்றாக சுண்டவைக்கலாம். காலை உணவுக்கு சூடான சுண்டவைத்த பழங்களை நீங்கள் சாப்பிடலாம். ஒரு கிண்ணம் கஞ்சியும் சாப்பிடலாம்.
காலை உணவு உதவிக்குறிப்பு
சூரியனின் நிலையைப் பொறுத்து உங்கள் காலை உணவு எளிமையானதாகவும் சிறியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சூரியன் உச்சியில் இருக்கும்போது பெரிய மதிய உணவையும், சூரியன் மறையும் போது சிறியளவு இரவு உணவையும் சாப்பிடலாம். உங்கள் உணவின் பகுதி சூரியனின் நிலைக்கு நேரடியாக தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
மேலும் உணவின் எண்ணிக்கை முடிந்தவரை குறைவாக இருக்க வேண்டும். உங்கள் உடலுக்கு உணவைக் கொடுக்கத் தொடங்குவதற்கு முன், உங்கள் வளர்சிதை மாற்ற நெருப்பு அதன் உச்சத்தை அடைய அனுமதிப்பது ஆரோக்கியமான நடைமுறையாகும்.
நீங்கள் அசிடிட்டி, ஆசிட் ரிஃப்ளக்ஸ், தலைவலி அல்லது எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர் என்றால், நீங்கள் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அது அதிக அமிலத்தன்மை அல்லது அமில ரிஃப்ளக்ஸ் போன்ற பிட்டா அறிகுறிகளை அதிகரிக்கலாம்.
சிறந்த காலை உணவு விருப்பங்கள்
நிபுணர்களின் கூற்றுப்படி சிறந்த காலை உணவு விருப்பங்கள் கஞ்சி, வேகவைத்த இட்லி அல்லது தோசை. இவை சூஜி மற்றும் ஓட்ஸ் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி அல்லது பஜ்ரா, ஜாவர், ராகி அல்லது உடைந்த கோதுமை போன்ற தினைகளில் இருந்து தயாரித்து சாப்பிடலாம். எனவே, குளிர்ந்த உணவுகளை இனிமேல் காலையில் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
