Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கொரோனா தடுப்பூசி போட்ட இந்த இரத்த பிரிவினருக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகம் இருக்காம்.. உங்களோடது என்ன?
தற்போது உலகளவில் மீண்டும் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளிலும் பலவிதமான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு போன்ற கொரோனா தடுப்பூசிகளை இந்திய அரசு மக்களுக்கு போட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு புதிய ஆய்வு வெளிவந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அது என்னவெனில், கோவிஷீல்டாக வழங்கப்படும் Oxford-AstraZeneca தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு, ஓ இரத்த பிரிவைக் சேர்ந்தவர்களுக்கு பெருமூளை சிரை இரத்த உறைவு அல்லது சிரை பக்கவாதம் (CVT) ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஒரு பெரிய ஆய்வு கூறுகிறது.

Oxford-AstraZeneca தடுப்பூசியை போட்ட 28 நாட்களுக்குள் பெருமூளை சிரை இரத்த உறைவு (CVT) ஏற்பட்டால், அதற்கு இந்த கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என சர்வதேச அளவில் வரையறுக்கப்படுகிறது. ஏற்கனவே முந்தைய ஆய்வில் ஏ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு கோவிட்-19 தீவிரமாவதற்கான வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டது. ஏனெனில் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின் இரத்தப்பிரிவைப் பார்க்கும் போது, அவர்களின் இரத்தப்பிரிவு ஏ ஆக இருந்தது.
ராயல் சொசைட்டி ஆஃப் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், மொத்தம் 523 CVT நோயாளிகள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அதில் 82 பேர் Oxford-AstraZeneca தடுப்பூசி பெற்ற பிறகு CVT-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 441 பேர் தடுப்பூசி போடாமல் CVT-யால் பாதிக்கப்பட்டவர்களாவர். இந்த ஆய்வில் தடுப்பூசி போட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத நோயாளிகளின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் Oxford-AstraZeneca தடுப்பூசி பெற்ற பின் CVT-யால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இரத்தப் பிரிவைப் பார்க்கும் போது, ஓ பிரிவினர் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடப்படாத நோயாளிகளின் இரத்தப்பிரிவைப் பார்த்தால், அதில் ஏ ரத்த பிரிவினர் பொதுவாக காணப்பட்டுள்ளனர்.
இப்படியான ஆய்வு மேற்கெள்ள காரணம், கோவிட்-19 தடுப்பூசியைத் தொடர்ந்து CVT ஏற்படும் அபாயம் உள்ளவர்களை ஒரு எளிய இரத்த பரிசோதனையைப் பயன்படுத்தி கணிக்க முடியும் என்பதை அறியவே மேற்கொள்ளப்பட்டதாக லண்டர் பல்கலைகழகத்தின் ராயல் ஹோலோவேயில் உள்ள உயிரியல் அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் பங்கஜ் சர்மா கூறினார்.
மேலும் லண்டனில் ஓ இரத்தப்பிரிவைக் கொண்டவர்கள், தடுப்பூசிக்குப் பிந்தைய ஆபத்துக் குழுவில் இருப்பதற்கு இரண்டரை மடங்கு அதிகமாக இருப்பது தெரிகிறது. இதன் மூலம் தடுப்பூசிக்குப் பிறகு யார் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிப்பது எளிதாக இருக்கும். இதன் மூலம் பக்கவாதத்தால் ஏற்படும் உயிரிழப்பை முன்கூட்டியே அறிந்து சரிசெய்யலாம். உங்களுக்கு ஓ இரத்த பிரிவு என்றால், அதுவும் கோவிஷீல்டு தடுப்பூசியை நீங்கள் போட்டிருந்தால், கொஞ்சம் உஷாராக இருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications