Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Nipah Virus: நிபா வைரஸிற்கு இந்த பெயர் எப்படி வந்தது? இது ஏன் எப்போதும் கேரளாவில் மட்டும் பரவுகிறது தெரியுமா?
Nipah Virus: சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று அச்சிறுவன் சிகிச்சையின் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கேரளாவின் சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிபடுத்தினார்.
இந்த சிறுவன் 10 நாட்களுக்கு முன்னதாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நிபா வைரஸ் தாக்கத்தால் சிறுவன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிபா வைரஸ் முதன்முதலாக ஒன்றும் கேரளாவில் பரவவில்லை. இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டில் இந்த வைரஸ் 17 பேரின் உயிரைப் பறித்துள்ளது. இவ்வளவு கொடிய நிபா வைரஸ் அதன் பெயரை எப்படி பெற்றது மற்றும் இதன் தோற்றம் குறித்து உங்களுள் பலருக்கும் மனதில் கேள்வி எழுந்திருக்கும். இப்போது அதுக்குறித்து விரிவாக காண்போம்.
நிபா வைரஸ்
நிபா வைரஸ் என்பது அதிகம் தொற்றக்கூடிய மற்றும் கொடிய வைரஸ் ஆகும். இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுக்கூடிய ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும். பொதுவாக இந்த வகையான வைரஸ் பழந்திண்ணி வௌவால்கள்களிடம் இருந்து பரவுகிறது. அதுவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட வௌவால்களிடம் இருந்து மனிதர்கள் அல்லது பன்றி, நாய், பூனை போன்ற பிற விலங்களுக்கும் பரவக்கூடியது.
கேரளாவில் ஒரு சிறுவன் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பின், இந்த வைரஸ் குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது. எனவே இந்த வைரஸ் மற்றும் அதன் நடத்தைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு முன் இந்த வைரஸ் எப்படி இந்த பெயரைப் பெற்றது என்பதைக் காண்போம்.
நிபா வைரஸ் என்ற பெயர் எப்படி வந்தது?
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நிபா வைரஸ் முதன்முதலாக மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்னும் கிராமத்தில் 1999-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிராமத்தில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால், இதற்கு நிபா வைரஸ் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. இந்த நிபா வைரஸ் இப்படி இந்த கிராமத்தில் தோன்றியது என்பது முழுமையாக தெரியவில்லை.
இருப்பினும், இந்த வைரஸ் பழங்களைத் திண்ணும் வௌவால்களிடம் இருந்து பரவுவதாக நம்பப்படுகிறது. அதே சமயம் இந்த வைரஸ் 1999-க்கு முன்பிருந்தே உலகின் மற்ற நாடுகளிலும் இருந்திருக்கலாம். ஆயினும், 1999-ல் இந்த கிராமத்தில் நிறைய பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதால் பிரபலமாகியிருக்கக்கூடும்.
நிபா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எப்படி பரவுகிறது?
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட வௌவால்கள் மற்றும் பிற விலங்குகளிடம் இருந்து ஒருவருக்கு பரவுகிறது. அதுவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட வௌவால்கள் கடித்த பழத்தை அல்லது காய்கறியை மனிதர்களோ அல்லது விலங்குகளோ சாப்பிட்டால், அதன் மூலம் அந்த வைரஸ் மற்றொரு உடலுக்குள் நுழைகிறது. முக்கியமாக இந்த வைரஸால் மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு, பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது விலங்குகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அதற்கு மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை மேற்கொள்வது, தனிமனித சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
நிபா வைரஸ் வெடிப்பு ஏன் எப்போதும் கேரளாவில் மட்டும் ஏற்படுகிறது?
கேரளாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிபா வைரஸ் ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் வௌவால்கள் 10 மடங்கு அதிகமாக உள்ளன. நிபா வைரஸ்கள் வௌவால்கள் மூலம் பரவுவதன் காரணமாக கேரளாவில் இந்த வைரஸ் வெடிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கலாம். ஆனால் இது வெறும் யூகம் தான்.
இதுவரை நிபா வைரஸ் தொற்று கேரளாவில் மட்டும் தான் ஏற்பட்டுள்ளதா என்றால், இல்லை. முன்னதாக 2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அப்போது 23 வழக்குகள் உறுதிபடுத்தப்பட்டன. அதற்கு பின் அந்த பகுதியில் இந்த நிபா வைரஸ் வெடிப்பு ஏற்படவில்லை. கேரளாவில் மட்டும் தான் மீண்டும் மீண்டும் பரவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications