Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
72 வயதிலும் பிரதமர் மோடி ஃபிட்டா இருக்க, இந்த தினசரி பழக்கங்கள் தான் காரணம்... அது என்னென்ன தெரியுமா?
Narendra Modi Fitness: நரேந்திர மோடி அவர்கள் உலகிலேயே மிகவும் கடினமான வேலைகளில் ஒன்றான உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்கிறார். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக இருப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.
சொல்லப்போனால் பிரதமராக இருப்பவர்களுக்கு தான் தினசரி சவால்கள் காரணமாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும். வீட்டை ஆளும் போதே கண்கள் பிதுங்கும் போது, நாட்டை ஆளும் பிரதமருக்கு எப்படி இருக்கும்?

8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்றால் அதற்கு அவரது தினசரி பழக்கவழக்கங்கள் தான் முக்கிய காரணம்.
உங்களுக்கு பாரத பிரதமர் மோடி அவர்களின் ஃபிட்னஸ் ரகசியம் மற்றும் ஆரோக்கியத்திற்காக அவர் தினசரி மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
யோகா
பிரதமர் நரேந்திர மோடிக்கு யோகாவின் மீது ஆர்வமும் நம்பிக்கையும் அதிகம். மக்கள் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்க ஒவ்வொரு விதமான வழிகளை மேற்கொண்டு பயனடைகிறார்கள். நமது பிரதமர் மோடி அவர்கள் யோகாவின் மூலம் பெரிதும் பயனடைவதாக எப்போதுமே கூறுவார்.
2020 ஆம் ஆண்டு கோவிட்டால் மக்கள் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கொண்டிருந்த போது, "யோகா பயிற்சி பல ஆண்டுகளாக இவரது வாழ்வின் மிகவும் முக்கியமான ஒரு அங்கமாக இருப்பதாவும், அதனால் நன்மை பெறுவதாகவும்" தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இவர் எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது யோக நித்திரை பயிற்சியை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்வாராம்.
ஆயுர்வேதம்
பிரதமர் நரேந்திர மோடி ஆயுர்வேதத்தை ஆதரிப்பவர். யோகாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் மிகவும் பழமையான மருத்துவ முறை தான் ஆயுர்வேதம். இந்த ஆயுர்வேதம் கூறும் கொள்கைகளை நம்புவதோடு, ஆயுர்வேத முறையில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பாராம்.
வீட்டு வைத்தியம்
பிரதமர் மோடி, தனக்கு சளி பிடித்தால், சுடுநீரைக் குடிப்பதோடு, விரதத்தையும் மேற்கொண்டு தீர்வு காண்பதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், மோடி எப்போதும் தனக்கு ஏற்படும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியத்தை மேற்கொள்வதாகவும், நாட்டு மக்களையும் நாட்டு வைத்தியங்களை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கிறார்.
காலை உடற்பயிற்சி
பிரதமர் மோடி அவர்கள் தினமும் காலை மூச்சுப் பயிற்சியை செய்வதோடு, நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய இயற்கை கூறுகளால் ஈர்க்கப்பட்ட பாதையில் நடைப்பயிற்சியை மேற்கொள்வாராம். இவர் தினமும் யோகா செய்வதைத் தவிர, இப்படி பஞ்ச பூதங்களால் ஈர்க்கப்பட்ட நடைபாதையில் நடக்கும் போது, மிகவும் புத்துணர்ச்சி மற்றும் புத்துயிர் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான காலை உணவு
பிரதமர் மோடி தினமும் காலையில் ஆரோக்கியமான காலை உணவுடன் நாளைத் தொடங்குவாராம். அந்த காலை உணவின் போது பெரும்பாலும் அவல் மற்றும் இஞ்சி டீ இருக்குமாம். மேலும் மோடி ஒரு சைவ உணவாளர். எனவே இவரது உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் இடம்பெறுமாம். முக்கியமாக இவருக்கு தென்னிந்திய பாரம்பரிய உணவுகள் மற்றும் குஜராத்தி உணவுகள் மிகவும் பிடிக்குமாம். அந்த உணவுகளை உண்ண வாய்ப்பு கிடைத்தால், அதை மிஸ் பண்ணாமல் சாப்பிடுவாராம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

