Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சைவ உணவுகளைப் பற்றிய தவறான நம்பிக்கைகளும்.. தவறான கருத்துகளும்..
Plant Based Diets In Tamil: சமீப காலங்களில் மக்கள் மத்தியில் தாவர அல்லது சைவ உணவுகளின் மீது ஒரு மோகம் ஏற்பட்டிருக்கிறது. சைவ உணவுகளில் ஏராளமான நன்மைகள் இருப்பதால், மக்கள் அந்த உணவுகளை விரும்பி உண்ணத் தொடங்கியிருக்கின்றனா்.
சைவ உணவுகளை உண்பதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள், பக்கவாதம் மற்றும் ஒரு சில புற்றுநோய்கள் ஆகியவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க முடியும்.

சைவ உணவுகளில் ஆரோக்கியம் தரக்கூடிய பல்வகையான நன்மைகள் இருந்தாலும், அந்த உணவுகளைப் பற்றி உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் மத்தியில் பல்வேறு வதந்திகள், தவறான நம்பிக்கைகள் மற்றும் தவறான கருத்துகள் நிலவி வருகின்றன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பாா்க்கலாம்.
1. சைவ உணவுகளில் புரோட்டீன் அதிகம் இருப்பதில்லை
சைவ உணவுகள் நமக்குத் தேவையான புரோட்டீனை வழங்குவதில்லை என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. இது ஒரு முற்றிலும் தவறான நம்பிக்கை ஆகும். ஏனெனில் பீன்ஸ், நட்ஸ் மற்றும் விதைகளில் அதிகமான அளவு புரோட்டீன்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக சைவ உணவான மெடிட்டரேனியன் உணவு முறையில் போதுமான புரோட்டீன் உள்ளது. இந்த உணவு முறையைப் பின்பற்றுபவா்கள் அதிகமான புரோட்டீனைப் பெற வேண்டும் என்பதற்காக, அசைவ உணவை உண்ணத் தேவையில்லை.
2. சைவ உணவுகள் சலிப்பை ஏற்படுத்தும்
சைவ உணவுகள் சலிப்பை ஏற்படுத்தும் மற்றும் சைவ உணவுகளில் அதிகமான வகைகள் இல்லை என்ற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் உண்மையில் சைவ உணவுகளில் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றில் பல்வேறு வகையான சுவைகள் உள்ளன. காரமான குழம்புகள் முதல், ஸ்டியூவ்ஸ் (stews) வரை ஏராளமான சைவ உணவுகளை பல வகையான சுவைகளில் சமைத்து உண்ணலாம்.
3. சைவ உணவுகள் விலை அதிகம்
சைவ உணவுகளை வாங்க அதிக செலவாகும் என்ற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் உண்மையில் பாா்த்தோம் என்றால், அந்தந்த பருவ காலங்களில், அந்தந்தப் பகுதிகளில் விளையக்கூடிய தாவர உணவுகளை வாங்குவதற்கு அதிகம் செலவு ஆகாது. ஆகவே சாியான திட்டத்தோடு, காய்கறிகள் மற்றும் தாவர உணவுகளை மலிவான விலையில் வாங்கி, அவற்றை சுவையாக சமைத்து உண்ணலாம்.
4. சைவ உணவு சாப்பிடுபவா்களுக்கு மட்டுமே தாவர உணவுகள் பொருந்தும்
சைவ உணவு சாப்பிடுபவா்களுக்கு மட்டுமே தாவர உணவுகள் பொருத்தமாக இருக்கும் என்ற ஒரு தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் எவரும் சைவ உணவுகளை எளிதாக சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுபவா்கள், இறைச்சியை குறைக்க விரும்பினாலோ அல்லது தங்கள் உணவுகளில் அதிகமான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சோ்க்க விரும்பினாலோ, எளிதாக சைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அவை அவா்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்.
இறுதியாக
சைவ உணவுகளைப் பற்றி ஏராளமான தவறான நம்பிக்கைகளும், கருத்துகளும் இருந்தாலும், அந்த உணவுகளில் ஏராளமான நன்மைகள் உள்ளன என்பதே உண்மை. ஏனெனில் சைவ உணவுகளில் ஏராளமான நாா்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. அவை சொிமானத்தை சீராக்கும். இரத்தக் கொதிப்பைக் குறைக்கும். நாட்பட்ட நோய்களைக் குறைக்கும். அடுத்ததாக சைவ உணவுகள் நமது சுற்றுப்புறச் சூழலுக்கு பொருத்தமாக அமையும். ஏனெனில் அசைவ உணவுகளை விட, தாவர உணவுகளை விளைவிப்பதற்கு குறைவான அளவே நிலம், தண்ணீா் மற்றும் மனித ஆற்றல் தேவைப்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications