Latest Updates
-
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
வாய் துர்நாற்றம் அதிகமா இருக்கா? அப்ப இந்த மௌத் வாஷை தயாரித்து தினமும் 2 முறை யூஸ் பண்ணுங்க..
Mouth Smell Remedies In Tamil: வாய் சுகாதாரம் என்பது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. வாய் சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் இருந்தால் தான், மற்றவர்களுடன் தைரியமாக பேச முடியும். வாயில் இருந்து துர்நாற்றம் வீசினால், அதுவே ஒருவரது தன்னம்பிக்கையை கெடுத்துவிடும்.
வாய் சுத்தமாக இருக்க பலரும் தினமும் காலை, இரவு என இரண்டு வேளையும் பற்களைத் துலக்குவதோடு, பிளாசிங் செய்து வருவார்கள். ஆனால் அது மட்டும் ஒருவரது வாயில் இருந்து வீசும் துர்நாற்றத்தை நீக்கிவிடாது. வாயில் துர்நாற்றத்திற்கு காரணமான கிருமிகளை அழிக்க வேண்டும். அதற்கு மௌத் வாஷ்கள் உதவி புரிகின்றன.

அதுவும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் மற்றும் ஆல்கஹால் நிறைந்த மௌத் வாஷ்களைப் பயன்படுத்தினால், அது பற்களுக்கு சேதத்தை விளைவிக்கும். எனவே இயற்கை பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஒருசில மௌத் வாஷ்களைத் தயாரித்து பயன்படுத்தி வந்தால், வாய் கிருமிகளின்றி சுத்தமாக இருப்பதோடு, வாயின் ஆரோக்கியமும் மேம்படும். இப்போது வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும் ஒருசில நேச்சுரல் மௌத் வாஷ்களைக் காண்போம்.
1. புதினா மற்றும் டீ ட்ரீ ஆயில் மௌத் வாஷ்
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1 கப்
* பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
* புதினா எண்ணெய் - 1 துளி
* டீ-ட்ரீ ஆயில்- 1 துளி
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் தண்ணீர், பேக்கிங் சோடா, புதினா எண்ணெய், டீ-ட்ரீ ஆயில் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்நீரை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து, காலை, இரவு என இரண்டு வேலை வாயில் ஊற்றி, வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
* இப்படி செய்வதன் மூலம், வாயில் உள்ள கிருமிகள் அழிவதோடு, வாயின் ஆரோக்கியமும் மேம்படுவதோடு, வாயும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
2. கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் மௌத் வாஷ்
தேவையான பொருட்கள்:
* கற்றாழை ஜூஸ் - 1/2 கப்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜூஸ் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் இந்த கலவையைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்துவதற்கு முன்பும் நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.
* இந்த நேச்சுரல் மௌத் வாஷ் கொண்டு வாயை கொப்பளிக்கும் போது, அது ஈறுகளில் உள்ள அழற்சியைப் போக்கி, ஈறுகளை வலுப்படுத்துவதோடு, வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.
3. பட்டை மற்றும் கிராம்பு மௌத் வாஷ்
தேவையான பொருட்கள்:
* வெதுவெதுப்பான நீர் - 1 கப்
* பட்டை தூள் - 1 டீஸ்பூன்
* கிராம்பு எண்ணெய் - 3-4 துளிகள்
செய்முறை:
* முதலில் வெதுவெதுப்பான நீரில் பட்டை தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் கிராம்பு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த கலவையைக் கொண்டு வாயை காலை, இரவு என இரண்டு வேளையும் கொப்பளிக்க வேண்டும்.
* இந்த நேச்சுரல் மௌத் வாஷ் வாயில் துர்நாற்றத்தை வீச செய்யும் கிருமிகளை அழிப்பதோடு, வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
4. ஆப்பிள் சீடர் வினிகர்
தேவையான பொருட்கள்:
* ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு கப் நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை வாயில் ஊற்றி நன்கு 30 நொடிகள் கொப்பளித்து, பின் துப்ப வேண்டும்.
* இந்த மௌத் வாஷ் வாயில் உள்ள pH அளவை சமநிலையில் பராமரிக்க உதவுவதோடு, அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், துர்நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் மற்றும் பல் வலியையும் குறைக்கும்.
5. எலுமிச்சை மற்றும் புதினா மௌத் வாஷ்
தேவையான பொருட்கள்:
* எலுமிச்சை - பாதி
* புதினா இலைகள் - 1 கையளவு
* சுடு தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் புதினா இலைகளை சுடு தண்ணீரில் போட்டு 5-10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கலவையை நன்கு குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் அந்த நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
* இந்த மௌத் வாஷில் உள்ள எலுமிச்சை மற்றும் புதினா வாயில் உள்ள கிருமிகளை அழித்து, வாயை புத்துணர்ச்சியுடனும், நல்ல மணத்துடனும் வைத்துக் கொள்ள உதவி புரியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications