Latest Updates
-
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க..
ஆண்களே! உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஆண் ஹார்மோன் குறைவின் அறிகுறி!
Symptoms Of Low Testosterone in Men: டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண், பெண் என இருபாலரது உடலிலும் சுரக்கப்படும் ஒரு ஆண் செக்ஸ் ஹார்மோன் ஆகும். ஆனால் இந்த ஹார்மோன் இயற்கையாகவே ஆண்களின் உடலில் அதிகமாகவும், பெண்களின் உடலில் குறைவாகவும் சுரக்கப்படும்.
இப்படிப்பட்ட ஹார்மோன் ஆண்களுக்கு விரைகளிலும், பெண்களுக்கு கருப்பையிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த டெஸ்டோஸ்டிரோன் ஒரு முக்கிய ஆண்ட்ரோஜன் ஆகும். அதாவது இது ஆண் குணாதிசயங்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

இப்படிப்பட்ட டெஸ்டோஸ்டிரோன் உடல் அல்லது முகத்தில் முடி வளர்ச்சி, தசைகளின் வலிமையை ஊக்குவிக்கிறது. இது தவிர இது ஆண்களின் உடலில் விந்தணு உற்பத்தி மற்றும் பாலுணர்வுக்கு மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமின்றி, இந்த ஹார்மோன் எலும்பு அடர்த்தி, இரத்த சிவப்பணு உற்பத்தி மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
இப்படியான டெஸ்டோஸ்டிரோன் வயது அதிகரிக்கும் போது குறையத் தொடங்கும். இதன் விளைவாக வாழ்க்கை தரத்தையும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இந்த டெஸ்டோஸ்டிரோன் உடலில் மிகவும் குறைவாக இருப்பதை ஹைபோகோனாடிசம் என்று அழைப்பர். இது பல ஆண்கள் நினைப்பதை விட பொதுவானது.
இப்படிப்பட்ட டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைவாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஆனால் இந்த அறிகுறிகள் பெரும்பாலானோரால் புறக்கணிக்கப்படுகிறது. ஏனெனில் இதன் அறிகுறிகள் பொதுவாக சந்திக்கும் ஆரோக்கி பிரச்சனைகள் போன்றே இருக்கும். கீழே ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால் வெளிப்படும் 5 முக்கிய அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தொடர்ச்சியான உடல் சோர்வு
நீங்கள் வழக்கத்தை விட மிகுந்த உடல் சோர்வையும், பலவீனத்தையும் உணர்கிறீர்களா? அதுவும் எவ்வளவு தூக்கத்தை மேற்கொண்டாலும், உடல் மிகவும் சோர்வாக உள்ளதா? அப்படியானால் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது. குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவை எதிர்கொள்ளும் ஆண்கள் பெரும்பாலும் சோம்பல், ஊக்கமின்மை அல்லது வழக்கத்தை விட உடல் ரீதியாக பலவீனமான உணர்வை எதிர்கொள்ளக்கூடும். சிறு சிறு வேலைகளை செய்தால் கூட அதிக சோர்வை உணரக்கூடும். எனவே தொடர்ந்து இப்படியான உடல் சோர்வை சந்தித்தால், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
2. குறைவான பாலுணர்ச்சி
உங்களுக்கு பாலுணர்ச்சி குறைவாக உள்ளதா? அப்படியானால் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளதென்று அர்த்தம். அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக ஒருவரது பாலுணர்ச்சியில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், தொடர்ந்து உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போனால் அது டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டினால் இருக்கலாம். எனவே இப்படியான சூழ்நிலையை நீங்கள் எதிர்கொண்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
3. தசை இழப்பு மற்றும் உடல் கொழுப்பு அதிகரிப்பது
டெஸ்டோஸ்டிரோன் தான் தசைகளை வலிமையாக வைத்துக் கொள்ளவும், உடலில் கொழுப்புக்களை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. ஆனால் எப்போது அந்த டெஸ்டோஸ்டிரோன் குறைகிறதோ, அப்போது தசைகளின் அடர்த்தி குறைந்து மெலிந்து போகக்கூடும். அதே சமயம் அடிவயிற்றைச் சுற்றி கொழுப்புக்கள் தேங்கியிருக்கும். சில ஆண்களுக்கு மார்பக திசுக்கள் வளரத் தொடங்கவும் செய்யும். எனவே இப்படியான அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. மன நிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சலுணர்வு
டெஸ்டோஸ்டிரோன் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். அதுவும் இந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால், அடிக்கடி எரிச்சலுணர்வு, பதற்றம் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். சில சமயங்கள் சில ஆண்களின் தன்னம்பிக்கை குறையலாம் அல்லது அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட நேரிடும். மேலும் எதிலும் மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் சிரமப்படக்கூடும். எனவே இப்படியான அறிகுறிகளை சமீப காலமாக அதிகமாக சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. எலும்பு அடர்த்தி குறைவு அல்லது அடிக்கடி காயங்கள்
எலும்புகளில் வலிமைக்கு டெஸ்டோஸ்டிரோன் பங்களிக்கிறது. அதுவும் நீண்ட காலமாக டெஸ்டோஸ்டிரோன் அளவு உடலில் குறைவாக இருந்தால், அது எலும்புகளின் அடர்த்தி குறைய வழிவகுக்கும், எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும். அதுவும் நீண்ட காலத்திற்கு டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால் ஆண்களுக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அடிக்கடி எலும்பு முறிவு ஏற்பட்டால், அதை புறகணிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

