Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் டாப் 10 பெரிய மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? இந்த மாவட்டம்தானா? -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா?
காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப அது சிறுநீரக நோயின் எச்சரிக்கை அறிகுறியாம்... உஷார்...
Kidney Disease Symptoms In Tamil: நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடலில் உள்ள பல உறுப்புக்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். உடலின் ஏதாவது ஒரு உறுப்பில் பிரச்சனை இருந்தாலும், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதித்துவிடும்.
அப்படி நமது உடலில் உள்ள மிகவும் முக்கியமான உறுப்புக்களில் ஒன்று தான் சிறுநீரகங்கள். இந்த சிறுநீரகங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வடிகட்டி சிறுநீரின் வழியே வெளியேற்றுகின்றன. இப்படி நச்சுக்களை வெளியேற்றும் சிறுநீரகங்களில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், அது உடலின் பல உறுப்புக்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே ஒவ்வொருவரும் தங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளால் மக்கள் அதிகம் அவதிப்படுகிறார்கள்.
பொதுவாக நமது உடலின் எந்த உறுப்புக்களில் பிரச்சனை இருந்தாலும், நமது உடல் அதை நமக்கு உணர்த்த முயற்சிக்கும். அப்படி தான் சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தாலும், அதை நமது உடல் நமக்கு ஒருசில அறிகுறிகளின் மூலம் தெரியப்படுத்தும். அந்த அறிகுறிகளைக் கவனித்து உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை அளித்தால் விரைவில் குணப்படுத்திவிடலாம். சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால் அது காலையில் ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. கைகள் மற்றும் கால்களில் வீக்கம்
சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால் தெரியக்கூடிய முதல் அறிகுறி கைகள் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும். அதுவும் காலையில் எழுந்தவுடன் கை மற்றும் கால்களில் வீக்கத்தை கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது சிறுநீரக செயலிழப்பின் முக்கிய அறிகுறியாகும். எனவே காரணமின்றி கால், கைகளில் வீக்கத்தைக் கண்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. நுரையுடன் சிறுநீர்
காலையில் எழுந்தவுடன் சிறுநீர் கழிக்கும் போது நுரையுடன் சிறுநீர் வெளியேறினால், சிறுநீரகங்களில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஏனெனில் எப்போது சிறுநீரகங்களால் சரியாக வேலை செய்ய முடியவில்லையோ, அப்போது புரோட்டீன் மற்றும் பிற கெமிக்கல்களை சரியாக வடிகட்ட முடியாமல், சிறுநீரில் நுரை உருவாகத் தொடங்குகிறது. ஆகவே நீங்கள் நுரையுடன் சிறுநீரைக் கழித்தால், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
3. வாந்தி
கர்ப்ப காலத்தில் மட்டும் தான் காலையில் வாந்தி வரும் என்பதில்லை. காலையில் எழுந்ததும் காரணமின்றி வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளை சந்தித்தால், அது சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாகும். சிறுநீரகங்களில் தீவிரமான பிரச்சனை இருந்தால், இதுப்போன்ற பிரச்சனைகளை தினமும் காலையில் சந்திக்க நேரிடும். இந்நிலையில் தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
4. காலையில் தசைப்பிடிப்பு
யாருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளதோ, அவர்கள் தசைப்பிடிப்பு, தசை வலி போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். அதுவும் ஒருவர் காலையிலேயே தசைப்பிடிப்பு பிரச்சனையால் அவதிப்பட்டால், அவரது சிறுநீரகங்களில் பெரிய பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. தசைப்பிடிப்பு ஏற்பட வேறுபல காரணங்கள் இருந்தாலும், அடிக்கடி சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. மிகுந்த உடல் சோர்வு
இரவு நல்ல ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும் காலையில் எழும் போது மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உடல் சோர்வு பல ஆரோக்கிய பிரச்சனைகளின் முக்கிய அறிகுறியாகும். அதில் ஒன்று சிறுநீரக பிரச்சனை. எனவே காலையில் சந்திக்கும் உடல் சோர்வை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
