Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
கழுத்தில் இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. அது சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்
Kidney Cancer Symptoms: உடலின் ஒவ்வொரு உறுப்புக்களும் ஒன்றோடொன்று ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டுள்ளன. அதனால் தான் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், அதன் அறிகுறிகள் பல பகுதிகளில் தெரிகின்றன. அதுவும் கழுத்தில் ஏதாவது ஒரு மாற்றத்தைக் கண்டால், அது சிறுநீரகங்களில் உள்ள தீவிர பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரகங்களில் உள்ள செல்கள் அசாதாரணமாக வளர்ந்து கட்டியை உருவாக்கும் போது தான் சிறுநீரக புற்றுநோய் ஏற்படுகிறது. இப்படி உடலில் வளரும் புற்றுநோய் செல்களானது ஒருகட்டத்தில் உடலின் பிற உறுப்புகளுக்கு பரவி, உடலின் பிற பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கும்.

உலகளவில் புற்றுநோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் சிறுநீரக புற்றுநோய் உலகளவில் 14 ஆவது இடத்தில் உள்ள பொதுவான புற்றுநோயாகும். பெரும்பாலும் இந்த வகை புற்றுநோய் வயதானவர்களுக்கு தான் ஏற்படும். அதுவும் இதுவரை இந்த புற்றுநோயால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் பெரும்பாலும் ஆரம்ப கட்டத்தில் வெளிப்படையாக தெரியாது. ஆனால் வேறு ஏதாவது பரிசோதனையை மேற்கொள்ளும் போது, இது பொதுவாக கண்டறியப்படுகிறது.
கழுத்துப் பகுதி சிறுநீரகங்களுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது?
கழுத்துப் பகுதியும், சிறுநீரகங்களும் மிகவும் தொலைவில் இருப்பதால், கழுத்தில் ஏதேனும் பிரச்சனையை சந்தித்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று யாரும் நினைக்கமாட்டோம். ஆனால் சிறுநீரக புற்றுநோய் இருந்தால், கழுத்தில் வீக்கம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் புற்றுநோய் செல்கள் கழுத்தில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு பரவும் போது, அவை கழுத்துப் பகுதியில் வீக்கத்தை உருவாக்கலாம். ஆனால் இது சிறுநீரக புற்றுநோய் தீவிர நிலையில் இருக்கும் போது மிகவும் அரிதாக நிகழலாம்.
எனவே கழுத்துப் பகுதியில் ஏதாவது கட்டி இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரக புற்றுநோயை குறிக்கலாம். அதுவும் இது மேம்பட்ட சிறுநீரக புற்றுநோய். இதற்கு உடனடி மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் புற்றுநோய் செல்களானது சிறுநீரகங்களில் இருந்து, கழுத்துப் பகுதிகளுக்கு பரவியுள்ளது. இதை அப்படியே விடும்போது, அதன் விளைவாக நிலைமை மோசமாகி, சிகிச்சை அளிப்பதே கடினமாகிவிடும்.
இருப்பினும் கழுத்தில் இருக்கும் கட்டிகள் அனைத்தும் சிறுநீரக புற்றுநோயைத் தான் குறிக்கும் என்று அர்த்தமல்ல. அது வேறுசில பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள்
சிறுநீரகங்களில் புற்றுநோய் கட்டிகள் வளர்ந்தால், ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் எதுவும் தெரியாது என்றாலும், கட்டியின் வளர்ச்சியைப் பொறுத்து ஒருசில அறிகுறிகள் தெரியக்கூடும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை:
* சிறுநீரில் இரத்தக்கசிவு
* சிறுநீரகங்களில் கட்டி
* பக்கவாட்டு பகுதியில் வலி
* உடல் சோர்வு
* உடல்நிலை சரியில்லாதது போன்ற உணர்வு
* பசியின்மை
* விவரிக்கமுடியாத எடை இழப்பு
* எந்நேரமும் லேசான காய்ச்சல்
* எலும்பு வலி
* உயர் இரத்த அழுத்தம்
* இரத்த சோகை
* உடலில் கால்சியம் அதிகம் இருப்பது
சிறுநீரக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?
சிறுநீரகங்கள் நமது உடலில் சுத்திகரிக்கும் முக்கியமான வேலையை செய்வதால், அதில் பல பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. இருப்பினும் சிறுநீரக புற்றுநோய்க்கான சரியான காரணம் தெரியவில்லை. இருந்தாலும், ஒருசில ஆபத்து காரணிகள் சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. அவையாவன:
* புகைப்பிடிப்பது
* உடல் பருமன்
* உயர் இரத்த அழுத்தம்
* குடும்ப வரலாறு
* கதிர்வீச்சு சிகிச்சை
* மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வு
* நீண்ட கால டயாலிசிஸ்
எனவே நண்பர்களே! உடலில் எந்த ஒரு மாற்றத்தை திடீரென்று கண்டாலும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி, என்னவென்று பரிசோதனை செய்து பாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications