உங்களுக்கு ஜிலேபி ரொம்ப பிடிக்குமா? அப்ப ஆயுர்வேத மருத்துவர்கள் என்ன சொல்றாங்க-ன்னு கொஞ்சம் பாருங்க..

எல்லாருக்கும் ஜிலேபி என்றால் மிகவும் பிடிக்கும். எதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என்றால் நம்மில் நிறைய பேர் இந்த ஜிலேபியைத் தான் தேடித் தேடி சாப்பிடுவோம். ஆனால் எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அளவுக்கு மீறி சாப்பிடுவது என்றைக்கும் உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

உண்மையில் ஜிலேபி ஒரு இனிப்பு மட்டுமல்ல நம் கலாச்சார சின்னமாக பார்க்கப்படுகிறது. இது நம் இந்தியாவில் தோன்றாவிட்டாலும் கூட பெர்சியா வரை மக்கள் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். எதாவது ஒரு விருந்து என்றால் கூட அங்கு ஜிலேபி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சரி வாங்க இந்த ஜிலேபி சாப்பிடுவது நல்லதா கெட்டதா, இதுகுறித்து ஆயுர்வேதம் என்ன கூறுகிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

Is Eating Jalebi Good For Health In Tamil

பாரசீகம் முதல் இந்தியா வரை

உணவு எல்லைகள் இந்த உலகம் முழுவதும் விரிந்து கிடக்கிறது எனலாம். ஏனெனில் எவ்வளவோ இந்திய உணவு வகைகள் நம் எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளிலும் பயன்பட்டு வருகிறது. ஜிலேபி நம் இந்திய மண்ணில் பிறக்கவில்லை என்றால் கூட இது நம் நேசத்துக்குரிய ஒரு பண்டமாகும். இந்தியாவின் எல்லா கடைகளிலும் சரி நம் இல்லங்களிலும் சரி ஜிலேபி ஒரு சிறந்த இனிப்பான ஒன்றாகும்.

ஜிலேபிக்கும் ஒற்றைத் தலைவலிக்கு என்ன சம்பந்தம்?

காலையில் எழுந்ததும் சிலருக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருக்கும் அல்லது சிலர் திடீரென ஒற்றைத் தலைவலி பிரச்சினையை சந்திப்பார்கள். இதற்கு ஒரு சரியான தீர்வாக ஜிலேபி மற்றும் சூடான பால் இருக்கிறது என்கிறது ஆயுர்வேதம். ஜிலேபி மற்றும் சூடான பால் உங்களுக்கு ஒற்றைத் தலைவலியை போக்கும்.

ஆயுர்வேத கருத்துப் படி சூரிய உதயத்திற்கு முன்பு இருக்கும் நேரம் நம் உடலில் வாத தோஷம் ஆதிக்கம் செலுத்தும். இந்த வாத தோஷத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது நமக்கு தலைவலி பிரச்சினைகள் உண்டாகின்றன. அதே நேரத்தில் ஜிலேபி மற்றும் பால் இரண்டுமே கபம் தோஷத்தை ஏற்படுத்த கூடியது.

எனவே இவையிரண்டுமே வாதம் மற்றும் பித்த தோஷத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது. எனவே காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு நீங்கள் ஜிலேபி மற்றும் சூடான பாலை அருந்தினால் உங்கள் ஒற்றைத் தலைவலி நீங்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

அதே நேரத்தில் பால் அழற்சி மற்றும் நீரிழிவு நோயாளிகள் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஜிலேபி மற்றும் பால் இரண்டுமே ஒற்றைத் தலைவலி தூண்டுதல்களுக்கான உணர்திறனை குறைக்கிறது. எனவே வாத நேரத்தில் இந்த ஜிலேபி மற்றும் சூடான பால் உங்கள் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த உதவி செய்யும்.

ஜிலேபியின் பக்க விளைவுகள்:

சர்க்கரை நிறைந்த இனிப்புகள்

சர்க்கரை இனிப்புகள் உங்களுக்கு உடனடி ஆற்றலை தந்தாலும் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பு என்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜிலேபி உங்களுக்கு பிடித்த உணவாக இருந்தால் கூட அதை சரியான அளவு எடுக்க வேண்டும். நீங்கள் அதிகமாக எடுக்கும் போது உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.

மைதா மாவு

ஜிலேபி போன்ற பண்டங்கள் சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவில் செய்வதால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை ஏற்படலாம். இதனால் உடல் பருமன், இதயம் மற்றும் நீரிழிவு நோய், கொழுப்பு அளவுகள் உயர்தல், உயர் இரத்த அழுத்த அளவுகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் குறைவாக இருக்கிறது. பசியை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

எண்ணெய் பலகாரம்

ஜிலேபி ஒரு எண்ணெய் பலகாரம் ஆகும். இந்த பலகாரம் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெயில் அதாவது டிரான்ஸ் கொழுப்பில் பொரித்து எடுக்கப்படுகிறது. இதனால் உங்களுக்கு டிரான்ஸ் கொழுப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது. இது நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion