Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
சென்னையில் இந்தியாவின் முதல் நீரிழிவு பயோபேங்க் - இதன் நோக்கம் மற்றும் நன்மைகள் என்ன தெரியுமா?
India's First Diabetes Biobank: உலகளவில் சர்க்கரை நோயால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு நாளுக்கு நாள் இந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் 2023-க்குள் உலகம் முழுவதும் சர்க்கரை நோயால் 578 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி. அது என்னவெனில், இந்தியாவின் முதல் நீரிழிவு பயோபேங்க் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த பயோபேங்க்கானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டுள்ளது.

இந்த பயோபேக்கில் சர்க்கரை நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற கோளாறுகள் மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்விற்காக பயோபேங்க்கில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை சரியாக பதப்படுத்தி, சேமித்து, ஆய்வுக்கான பணி மேற்கொள்ளப்படும். பயோபேங்க்குகளில் மாதிரிகளான நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும். இந்த மாதிரிகளை ஆய்வு செய்து, சர்க்கரை நோய்க்கான காரணங்களை ஆராய்ந்து, அதன் தடுப்பு வழிகளை கண்டறியும் பணி இங்கு மேற்கொள்ளப்படும்.
நீரிழிவு பயோபேங்க்கின் நோக்கம்
சென்னையில் நிறுவப்பட்டுள்ள முதல் நீரிழிவு பயோபேங்க்கின் நோக்கமே, சர்க்கரை நோய்க்கான ஆரம்பகால சிகிச்சை மற்றும் புதிய உயிரிகளை அடையாளம் காண உதவுவதாகும். மேலும் இந்தியாவில் சர்க்கரை நோயின் தனித்துவமான வடிவங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆரோக்கிய பிரச்சனைகளை ஆய்வு செய்வதும் ஆகும். இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தடுக்கலாம்.
புள்ளிவிவரங்களின்படி, 10 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் மற்றும் 13.6 கோடி ப்ரீடியாபயாட்டீஸ் வழக்குகள் உள்ளன. இது உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையாகும். ஒருவரை பலவீனப்படுத்தும் நோயின் பரவலான தாக்கம் இருந்தபோதிலும், நீரிழிவு ஆய்வுக்கு உதவும் உயிரியல் மாதிரிகளின் பெரிய அளவிலான களஞ்சியங்கள் பற்றாக்குறை இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு பயோபேங்க்கில் எத்தனை இரத்த மாதிரிகள் உள்ளன?
நீரிழிவு பயோபேங்க்கில் சுமார் 75 ஆயிரம் இரத்த மாதிரிகள் மற்றும் 10 ஆயிரம் சீரம் மாதிரிகள் பாதுகாப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெறப்பட்ட 16 ஆயிரம் மரபணு மாதிரிகள் மற்றும் 5 ஆயிரம் சிறுநீர் மாதிரிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
பயோபேங்க்குகள் ஏன் முக்கியம்?
புற்றுநோய், கல்லீரல் நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான கொடிய நோய்களுக்கான பயோபேங்க்குகள் இந்தியாவில் றைய உள்ளன. இந்த பயோ பேங்க்குகளில் இந்த கொடிய நோய்கள் குறித்து விரிவாக அறியவும், அதற்கான சிகிச்சையை மேம்படுத்துவது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் சர்க்கரை நோய்க்கான பயோபேங்க்குகள் இல்லை.
எனவே இந்தியாவில் அதிகரித்து வரும் சர்க்கரை நோயாளிகளின் அளவை கருத்தில் கொண்டு இந்த நீரிழிவு பயோபேங்க் நிறுவப்பட்டுள்ளது. மருத்துவத்தில் முன்னேற்றத்தைத் தூண்டும் உயர்தர உயிரியல் பொருட்களை வழங்குவதன் மூலம் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் Biobanks முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் மொத்தம் எத்தனை சர்க்கரை நோயாளிகள் உள்ளனர்?
ICMR மற்றும் India Diabetes Study ஆகியவற்றின் ஆய்வின்படி, இந்தியாவில் 11 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் 13 கோடிக்கும் அதிகமாக சர்க்கரை நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த சர்க்கரை நோயால் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.
இந்தியாவிலேயே சர்க்கரை நோயாளிகள் எந்த மாநிலத்தில் அதிகம் உள்ளனர்?
ICMR அறிக்கையின் படி, இந்தியாவில் 31.5 கோடி பேர் உயர் இரத்தஅழுத்தத்தாகும், 53.1 கோடி பேர் உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே சர்க்கரை நோயாளிகள் கோவாவில் (26.4 சதவீதம்) அதிகம் உள்ளனர். அதன் பின் புதுச்சேரி 26.3 சதவீதம், கேரளா 25,5 சதவீதம் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். பின்னர் உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உள்ளனர். முக்கியமாக கிராமபுறங்களை விட நகர்புறங்களில் தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர்.
உலகில் சர்க்கரை நோயாளிகள் எந்த நாட்டில் அதிகம் உள்ளனர்?
சமீபத்தில் லான்செட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, உலகில் மொத்தம் 828 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். அதில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. அதன் பின் அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











