Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் டாப் 10 பெரிய மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? இந்த மாவட்டம்தானா? -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா?
எச்சரிக்கை! இந்தியாவில் பரவும் புதிய வகை H9N2 பறவை காய்ச்சல்: அது எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்ன?
H9N2 Bird Flu: உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமான தொற்றுக்கள் நாள்தோறும் பரவிக் கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் 4 வயது குழந்தை புதிய வகை H9N2 பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக ருட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.
இந்த குழந்தையானது பிப்ரவரி மாதத்தில் கடுமையான சுவாச பிரச்சனை, அதிக காய்ச்சல் மற்றும் அடிவயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், உள்ளுர் மருத்துவமனையில் இருக்கும் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. மூன்று மாதம் கழித்து தற்போது அக்குழந்தை வீடு திரும்பியுள்ளது.

இதுக்குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், நோயாளியின் வீட்டில் கோழிப்பண்ணை இருந்துள்ளது. இது தான் இந்த பறவை காய்ச்சலுக்கு காரணம் என்றும், இந்த தொற்றின் அறிகுறி அக்குழந்தையைத் தவிர, அக்குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள எவருக்கும் இருந்ததாக தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அறிக்கைகளின் படி, 4 வயது குழந்தை கடுமையான சுவாச பிரச்சனையுடன், அதிக காய்ச்சல் மற்றும் அடிவயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருக்கும் போது உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்த போது, இன்ப்ளூயன்சா பி மற்றும் அடினோவைரஸ் தொற்று இருப்பது , அந்த உள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகத்தில் தெரிய வந்தது.
இருப்பினும், சுவாசக்கோளாறு மீண்டும் ஏற்பட்டதால், அக்குழந்தை மற்றொரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு குழந்தைகளுக்கான ஐசியூவில் மார்ச்-3 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டது. பல சோதனைகளுக்கு பின், மார்ச் 05 ஆம் தேதி குழந்தைக்கு இன்ப்ளூயன்சா ஏ மற்றும் ரினோவைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்பு அதே மாதிரியானது பூனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்தில் உள்ள இன்ப்ளூயன்சா மையத்திற்கு அனுப்பப்பட்டது. ஏப்ரல் 26 அன்று அந்த மாதிரியானது இன்ப்ளூயன்சா ஏ (H9N2) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் இந்த குழந்தை மே 1 ஆம் தேதி ஆக்ஸிஜன் ஆதரவுடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.
இந்தியாவில் இதுவரை இந்த H9N2 வகை பறவை காய்ச்சலால் ஒருவர் மட்டும் தான் பாதிக்கப்பட்டார். அதுவும் 2019-ல் ஒருவர் பாதிக்கப்பட்டார். அதன் பின், இந்த தொற்றால் இந்த 4 வயது குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது.
H9N2 தொற்று ஏற்பட எது காரணமாக இருக்கலாம்?
இந்த H9N2 வைரஸ் தொற்று ஏற்பட கோழிப்பண்ணை காரணமாக இருக்கலாம். ஏனெனில் இந்த குழந்தையின் வீட்டில் கோழிப்பண்ணை இருந்துள்ளது. எனவே கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் அல்லது கோழிப்பண்ணைக்கு அருகில் குடியிருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
H9N2 என்றால் என்ன?
H9N2 என்பது இன்ப்ளூயன்சா ஏ வைரஸின் துணை வகையாகும். இது பொதுவாக பறவைகளையே தாக்கும். ஆனால் மனிதர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்படலாம். இது அதிக வீரியமிக்க விகாரங்கள் அல்ல. இருப்பினும் இது லேசானது முதல் மிதமானது வரையிலான சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். என்ன தான் இந்த வைரஸ் அதிக வீரியமில்லாததாக இருந்தாலும், வைரஸ்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுசீரமைக்கும் திறன் கொண்டிருப்பதாலும், மனிதர்களையும் தாக்குவதாலும் குறிப்பிடத்தக்க கவலையை அளிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
