Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
நெஞ்சுசளி பாடா படுத்துதா?... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...
நீண்ட நாள் குணமாக நெஞ்சு சளியைக் கூட போக்கிவிடும் பாட்டி வைத்தியம் பற்றி இப்போது பார்க்கலாம்.
சளி ஒரு பொதுவான நோய். அது பெரியவர்கள் இளைஞர்கள் குழந்தைகள் என அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது. நமது வீட்டிலுள்ள பெரியவர்கள் நமக்கு எப்போதும் மாடர்ன் மருந்தை சளிக்கு பரிந்துரைக்க மாட்டார்கள். நீங்கள் மருந்து எடுக்காவிடிலும் சளி ஒரு வாரத்தில் குணமாகிவிடும் என்றே பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம்.

ஆங்கில மருத்துவத்தை எடுத்துக்கொள்வதன் மூலம், சளி முழுவதுமாக சரியாவதில்லை. அது நமது உடலுக்குள்ளேயே இருக்குமே தவிர நமது உடலைவிட்டு வெளியேறுவதில்லை. அது நம் உடலை விட்டு வெளியேறுவதற்கான ஒரே வழி சித்த மருத்துவமே.
நமது வீட்டிலுள்ள பெரியவர்கள் குறிப்பாக நமது பாட்டிகள் இதற்காகவே நிறைய வீடு வைத்தியம் வைத்திருப்பார்கள். அவற்றில் சில உங்களுக்காக இந்த பதிவில் நம் பார்ப்போம்.

இஞ்சி
10ml இஞ்சி சாறு, 10ml ஆடாதொடை இல்லை சாறு மற்றும் 10ml தேன் ஆகியவற்றை கலந்து தினமும் மூன்று முறை காலை, பிற்பகல், மாலை என குடிக்க வேண்டும். இஞ்சி தொண்டைக்கு இதமளிப்பதுடன் நெஞ்சில் சளியை தேங்கவிடாமல் பாதுகாக்கும்.

திரிகடுகம் கசாயம்
30 கிராம் மிளகு, 50 கிராம் திப்பிளி, 50 கிராம் பானக்கற்கண்டு, 50 கிராம் கடுக்காய் தோல் ஆகியவற்றை போடி செய்து தினமும் மூன்று வேலை சாப்பிடவும். அவ்வாறு சாப்பிட்டு வர சளி குணமாகும். பெரியவர்கள் 1 ஸ்பூன் சாப்பிடலாம் குழந்தைகளுக்கு 1/2 ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

எலுமிச்சை
ஒரு எலுமிச்சை பழம் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து சிறு துளி தேன் சேர்த்து கலக்கி தினமும் இருவேளை சாப்பிடவும். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் C இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலுமிச்சை சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அது தவறு.

தேங்காய் எண்ணெய்
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதை கொதிக்க விடவும் பிறகு அதில் கற்பூரம் சேர்க்கவும். அது வெதுவெதுப்பாக வரும் வரை ஆறவிடவும். பின்பு அந்த எண்ணெயை உங்கள் உடம்பில் தேய்க்கவும் (மார்பு, மூக்கு, நெற்றியில், பின்புறம்). அதை ஒரு நாளைக்கு 5 முதல் 7 முறை பயன்படுத்துங்கள்; அவ்வாறு செய்துவர நீங்கள் ஒரு நல்ல நிவாரணத்தைக் காணலாம். இது விக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற வேஃரப்களுக்கு பதிலாக இயற்கையான ஒன்று.

துளசி
தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சிறுதளவு துளசி மற்றும் சிறிது கற்பூரவள்ளி சேர்க்கவும். 2 கப் தண்ணீர் அரை 1/2 கப் தண்ணீராக வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு அதை குடிக்கவும். இது இருமல் மூலம் உங்கள் சளியை வெளியே கொண்டு வரும்.

ஆடாதொடை
ஆடாதொடை இலை, மிளகு, துளசி, தூதுவளை ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும். இதை வைத்து டிகாஷன் போல ரெடி செய்து தினமும் காலை, மாலை என இரண்டு முறை பருகி வர சளி/ இருமல், வாந்தி மற்றும் மூச்சு திணறல் சரியாகும்.

கடுக்காய்
மிளகு, கடுக்காய், அதிமதுரம் ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்து அதை வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதை தினமும் சிறுதுளி எடுத்து தேனில் கலந்து சில நாட்களுக்கு சாப்பிடவும். இது கடுமையான இருமலையும் குறைக்கும். கடுக்காயை சளி இருக்கும்போது மட்டுமல்ல, இயல்பாகவே தினமும் சாப்பிட்டு வர உடல் வலிமை பெருகும்.



Click it and Unblock the Notifications