Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
4 சொட்டு நல்லெண்ணெய உங்க சிறுநீர்ல விடுங்க... என்ன நோய் இருக்குனு தெரிஞ்சிடும்...
சிறுநீரில் எண்ணெய் விட்டு பார்ப்பதின் மூலம் உடல் நோயை அறிந்து கொள்ளும் முறைகளைத் தான் உங்களுக்கு பகிர்ந்து கொள்கிறோம். அது பற்றிய விரிவான தொகுப்பு தான் இது.
பொதுவாக ஏதாவது பரிசோதனைக்குச் சென்றால் மருத்துவர்கள் பரிந்துரைப்பது ரத்தப் பரிசோதனையும் சிறுநீர் பரிசோதனையும் தான். அதே பரிசோதனையை நம்முடைய முன்னோர்கள் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்து பார்த்திருக்கிறார்கள்.

சிறுநீரில் நான்கு சொட்டுக்கள் நல்லெண்ணெய் விட்டு பார்த்தாலே போதும் நமக்கு என்ன மாதிரியான நோய்கள் இருக்கின்றன என்பது தெரிந்து விடும். அதை எப்படி சரி செய்ய வேண்டும். எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சிறுநீர் பரிசோதனை
பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சினை இருந்தாலும் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனையின் மூலமும் அதன் முடிவுகளை வைத்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் வைத்து நம்முடைய உடலின் நிலையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த மருத்துவர்களின் துணையும் இல்லாமல் தங்களுடைய சிறுநீரை வைத்து தாங்களாகவே பரிசோதனை செய்து என்ன நோய் இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள். அவர்கள் செய்யும் பரிசோதனை அவ்வளவு கடினமானதெல்லாம் கிடையாது. மிக எளிமையாக செய்யக்கூடிய பரிந்துரை தான். அந்த முறையை நாமும் எளிமையாக செய்ய முடியும்.

மூன்று விஷயங்கள்
நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று விஷயங்கள் தான் அடிப்படைக் காரணமாக அமைகின்றன. அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறதோ அதைத் தெரிந்து கொண்டாலே போதும் அதை எளிமையாக நாம் குணப்படுத்திவிட முடியாது.
அதைத் தான் சித்தர்கள் சிறுநீர் மூலம் எதில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறார்கள். அதை வைத்து நோயையும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

எப்படி செய்யலாம்?
முன்னோர்கள் செய்ததை நாமும் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். காலையில் நாம் தூங்கி எழுந்ததும் ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் உங்களுடைய சிறுநீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அப்படி எடுத்துக் கொள்ளப்பட்ட சிறுநீரில் நான்கு சொட்டுக்கள் நல்லெண்ணெயை விடுங்கள். அதை அப்படியே ஒரு ஓரமாக வைத்துவிடுங்கள்.

எப்படி கண்டுபிடிப்பது?
ஓரமாக வைக்கப்பட்டிருக்கும் சிறுநீரை எடுத்துப் பாருங்கள். அரை மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் போதுமானது. அந்த எண்ணெயில் வடிவம் எப்படி இருக்கிறதோ அதைப் பொருத்து நம்முடைய உடலில் உள்ள பிரச்சினையை சரிசெய்து விடலாம்.

வாதம் அதிகம்
ஓரமாக வைக்கப்பட்ட சிறுநீரின் மேல் நீங்கள் விட்ட நல்லெண்ணெய் கயிறு போல் நெளிந்து காணப்பட்டால் உங்களுடைய உடலில் வாதம் அதிக அளவில் இருக்கிறது என்று அர்த்தம்.

பித்தம் அதிகம்
கயிறு போல இல்லாமல் இதுவே நீங்கள் சிறுநீரில் விட்ட எண்ணெய் வட்ட வடிவில் மோதிரம் போன்று இருந்தால் உங்களுடைய உடலில் பித்த நோய் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

கபம் அதிகம்
இவை இரண்டும் இல்லாமல் சிறுநீரின் மீது நீங்கள் விட்ட எண்ணெய் முத்துப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று கொண்டிருந்தால் உங்களுடைய உடலில் கபம் அதிகமாகி இருக்கிறது என்று அர்த்தம்.

எண்ணெய் பரவினால்
இந்த மூன்றுமே இல்லாமல் சிறுநீரில் நீங்கள் விடும் எண்ணெய் சிறுநீருக்குள் வேகமாகப் பரவிச் சென்று விட்டால் எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமடைந்து விடும் தன்மை கொண்டிருக்கிறது என்று பொருள்.



Click it and Unblock the Notifications