Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
வந்த தும்மலை வேண்டுமென்று அடக்கியதால் தொண்டை வெடித்தது... எதுக்கு இந்த வேலை?
வந்த தும்மலை தடுத்து நிறுத்தியதால் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதைப் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பகிர்ந்து கொள்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உடலில் தானாக செயல்படும் சில செயல்களை நீங்கள் தடுக்கும் போது அதுவே நமது உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது. சும்மா வந்த தும்மலை தடுத்து நிறுத்தியதால் தொண்டையில் துளை ஏற்பட்ட அபாயம்.

அப்படி அந்த நாள் என்ன செய்தார் என்று தெரியுமா? தும்மலின் சக்தியை பரிசோதிக்க முயன்றதே இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு கொண்டு வந்து உள்ளது.

தும்மலை தடுக்க போய் ஏற்பட்ட நிலை
34 வயது ஒரு மனிதர் தன் தும்மலின் சக்தியை பார்க்க எண்ணி ரொம்ப நேரம் அடக்கி வைத்துள்ளார். இதனால் அவரது தொண்டையில் பெரும் சேதம் ஏற்பட்டு அதற்கு லெய்செஸ்டரில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தும்மலை கட்டுப்படுத்த போய் தொண்டையில் அதிக அழுத்தம் ஏற்பட்டு தொண்டையில் உள்ள மென்மையான திசுக்களை சிதைத்துள்ளது.
இப்படி அரிதாக நடந்த இந்த சம்பவம் மருத்துவர்களுக்கே ஆச்சர்யத்தை அளித்துள்ளது. மேலும் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தொண்டையில் அவருக்கு ஏற்பட்ட கடுமையான சேதம் மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து அந்த மனிதனின் கருத்து
வெளிப்படையாக அவர் இதை ஒரு மருத்துவ பத்திரிக்கையில் கூறியுள்ளார். தும்மலை நான் அடக்க முயன்று வாயை பொத்திக் கொண்டேன். இதனால் என் தொண்டை மற்றும் மூக்கில் அழுத்தம் அதிகமாகி கடுமையான வலி ஏற்பட்டது. அடக்கிய தும்மலின் சக்தி தொண்டையில் ஒரு ஓட்டையையே போட்டு விட்டது. இதற்கு பிறகு என்னால் பேசவோ, விழுங்கவோ முடியவில்லை.

தொண்டையில் அழுத்தம்
அது மட்டுமல்லாமல் தொண்டையில் ஏற்பட்ட துளை வழியாக நான் சுவாசிக்கும் காற்று செல்லும் போது ஒரு வெடிக்கும் சத்தமும் எனக்கு கேட்டது. மருத்துவர்கள் அவரை பரிசோதித்து இந்த வெட்டிக்கும் சத்தம் ஏர் பப்பிள்ஸ்களால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் அவரது தொண்டையில் ஏற்பட்டுள்ள துளைக்கும் சிகிச்சை அளிக்க முற்பட்டுள்ளனர்.

இது தேவையா?
இதற்காக ஒரு நீட்டமான குழாயை அவரது வாயின் வழியே விட்டு அதன் வழியாக உணவு, ஆன்டி பாயோடிக்ஸ் மருந்துகள் செலுத்தப்பட்டது. ஒரு வார காலமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இனி மேல் தும்மல் வந்தால் அடக்க கூடாது என்றும் அவருக்கு எச்சரிக்கை செய்து மருத்துவர்கள் அனுப்பி உள்ளனர்.
நம்ம மக்களும் இனிமேலாவது இப்படி தும்மல் கிம்மல் வந்தா அடக்காதிங்கோ. அது பாட்டுக்கு வந்துட்டு போகுது. இந்த நிகழ்வு நம்மளுக்கு ஒரு எச்சரிக்கை



Click it and Unblock the Notifications
