Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
நகங்கள் இப்படி மஞ்சளா மாறினா என்ன வியாதினு தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...
நம்முடைய நகங்களில் மஞ்சள் நிறத்தில் உண்டாகின்ற சில விஷயங்கள் நம்முடைய ஆரோக்கியத்தை எப்படி சிதைக்கிறது என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
அழகு என்றாலே நாம் முகத்தை பராமரிப்பதை மட்டும் தான் நினைக்கிறோம். ஆனால் நகங்கள் கூட நமக்கு அழகு சேர்ப்பவை தான். மற்றவர்கள் முன்னிலையில் நகழகு என்பது மிகவும் முக்கியம்.

வசீகரமான நகங்களின் அழகு மற்றவர்களது முன்னிலையில் உங்களை அழகாக காட்டும். ஆனால் சில பேருக்கு நகங்களில் மஞ்சள் கறை படிந்து காணப்படும். இதனால் மற்றவர்கள் முன்னிலையில் நம் கைகளைக் கூட காட்ட முடியாமல் வெட்கப்பட வேண்டியிருக்கும்.

நகங்கள்
நகங்களை சுத்தமாக வைக்காமல் இருத்தல், சரியான காலணிகளை அணியாமல் இருத்தல், பூஞ்சை தொற்று போன்றவை நகங்களில் மஞ்சள் நிறம் ஏற்பட காரணமாகிறது. இங்கே நகங்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளை போக்க சில வீட்டு முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

லெமன்
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் லெமன் ஜூஸை பிழிந்து கொள்ளுங்கள். இப்பொழுது பாதங்களை அந்த நீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதே மாதிரி லெமனைக் கொண்டு உங்கள் கால் நகங்களில் தேயுங்கள். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் விரைவில் உங்கள் நகங்களில் உள்ள மஞ்சள் கறை போய்விடும்.

ஆல்கஹால்
ஒரு பக்கெட் தண்ணீரில் 2 டேபிள் ஸ்பூன் ஆல்கஹால் சேர்த்து அதில் பாதங்களை ஊற வையுங்கள். இதை தினமும் இரண்டு முறை என 5-10 நிமிடங்கள் செய்து வந்தால் நகங்களில் உள்ள மஞ்சள் கறை விரைவில் மறைந்து விடும்.

பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு
2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை பாத நகங்களில் அப்ளே செய்து கொள்ளுங்கள். 5 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். உங்கள் சருமம் சென்ஸ்டிவ் ஆக இருந்தால் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.

லாவண்டர் எண்ணெய்
லாவண்டர் ஆயிலைக் கொண்டு கால் நகங்களை மசாஜ் செய்து வந்தால் நகங்களில் ஏற்பட்டுள்ள கறைகள் போகுவதோடு வளரவும் செய்யும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் டிட்ரீ ஆயில் சேர்த்து கொண்டால் இன்னும் சிறந்த பலன் கிடைக்கும்.

வெங்காயம்
வெங்காயத்தை வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நகங்களில் வைத்து தேயுங்கள். இது நகம் வளராமல் இருப்பதை சரி செய்யும், மஞ்சள் கறைகளை போக்கும்.

ஆர்கனோ ஆயில் மற்றும் ஆலிவ் ஆயில்
ஆர்கனோ மற்றும் ஆலிவ் ஆயிலை சம அளவு எடுத்து கலந்து கொள்ளவும். இதை நகங்களில் வைத்து வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு பழ தோல்
ஆரஞ்சு பழத்தில் உள்ள விட்டமின் சி மஞ்சள் கறைகளை போக்குகிறது. ஆரஞ்சு பழ தோலை காய வைத்து பொடியாக்கி கொள்ளுங்கள். தண்ணீர் கொண்டு ஆரஞ்சு பொடியை கலந்து பேஸ்ட்டாக்கி கை மற்றும் பாத நகங்களில் அப்ளே செய்யுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு டூத் பிரஷ் கொண்டு க்ளீன் செய்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். ஒரு நாளைக்கு இரு முறை என 1-2 வாரங்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சிடர் வினிகர்
உணவுப் பொருட்களை பதப்படுத்த ஆப்பிள் சிடார் வினிகர் பயன்படுத்துவார்கள். இதுவும் நகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க பயன்படுகிறது. ஒரு பாத்திரத்தில் 1/2 கப் ஆப்பிள் சிடார் வினிகர் 1/2 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் அதில் நகங்களை ஊற வைக்கவும். பிறகு மென்மையான துண்டை கொண்டு நகங்களை துடைத்து விடுங்கள். ஒரு நாளைக்கு மூன்று முறை என 3-4 வாரங்கள் செய்து வந்தால் ஆரோக்கியமான நகங்களை பெறலாம்.

ஜூனியர் பெர்ரி
சில ஜூனியர் பெர்ரிகளை நசுக்கி கொள்ளுங்கள். ஒரு பெளலில் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் 1 டீ ஸ்பூன் ஜூனியர் பெர்ரியை சேர்த்து கொள்ளுங்கள். அதில் 15 நிமிடங்கள் நகங்களை ஊற வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பிறகு நகங்களுக்கு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்து கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை என செய்து வந்தால் உங்கள் நகங்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி அழகு பெறும்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் எல்லா வித பிரச்சினைகளுக்கும் பயன்படும் சிறந்த ஆயிலாகும். இது பூஞ்சை அழற்சியை போக்க பெரிதும் பயன்படுகிறது. ஒரு பாட்டில் தேங்காய் எண்ணெய் மற்றும் சோப்பை எடுத்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட நகங்களில் தேங்காய் எண்ணெய்யை தடவி சிறுநீரக நேரம் ஊற விடுங்கள். பிறகு சோப்பை கொண்டு கழுவி விடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை என செய்து வாருங்கள்.

விட்டமின் ஈ மாத்திரைகள்
விட்டமின் ஈ ஆட்டு ஆக்ஸிடன்ட்கள் மாதிரி நமது உடலுக்கு செயல்படுகிறது. விட்டமின் ஈ மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அப்படியே மஞ்சள் நகங்களில் மாத்திரையை பிதுக்கி எண்ணெய்யை விடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வினிகர் குளியல்
வினிகர் சமையல்களில் பதப்படுத்தும் பொருளாக பயன்படுகிறது. ஒரு பெளலில் 3 பங்கு நீர் மற்றும் 1 பங்கு வினிகரை எடுத்து கொள்ளுங்கள். மஞ்சள் கறை படிந்த நகங்களை அதில் 4-5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு மென்மையான துணியைக் கொண்டு நகங்களை துடைத்து விடுங்கள். வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் மஞ்சள் கறை நீங்கிவிடும்.

பூண்டு
பூண்டு பூஞ்சை தொற்றை போக்க பெரிதும் பயன்படுகிறது. சில பூண்டுப் பற்களை எடுத்து மஞ்சள் நகங்களில் தேயுங்கள். பிறகு 15-20 நிமிடங்கள் அப்படியே காத்திருக்கவும். ஒரு க்ளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து கழுவுங்கள். இது நகங்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்கி இயல்பான நிறத்திற்கு மாற்றி விடும்.

மஞ்சள் நகங்கள் வருவதை தடுகக வழிகள்
உங்கள் பாதங்களை, கைகளை எப்பொழுதும் ஈரம் இல்லாமல் நன்றாக துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
சிந்தடிக் துணியால் ஆன ஷாக்ஸ்களை பயன்படுத்துவதை தவிர்த்து காட்டன் ஷாக்ஸ்களை பயன்படுத்துங்கள். ஏனெனில் இது மட்டுமே ஈரத்தை உறிஞ்சும்.
பாதங்களுக்கு பொருத்தமான நல்லா காற்றோட்டமான காலணிகளை தேர்ந்தெடுங்கள்.
புரோபயோடிக் உணவுகள், புரோட்டீன் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள்.
மேற்கண்ட இயற்கை முறைகள் கண்டிப்பாக உங்களுக்கு பலனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.



Click it and Unblock the Notifications