Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
உங்க நகங்களில் இப்படி வெண்புள்ளிகள் இருக்கா? அதுனால பிரச்சினை வருமா? எப்படி சரிசெய்யலாம்?
நிறைய பேர்கள் நகங்களில் ஏற்படும் வெள்ளை புள்ளி யால் அவதியுறுகின்றனர். இதை சில இயற்கை பொருட்களை கொண்டு குணப்படுத்தலாம்.
நமது கைகளின் அழகுக்கு நகங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நகங்களின் நிறம் மங்கிப் போய் உடைந்து காணப்பட்டால் பார்ப்பதற்கு அசிங்கமாக தென்படுவதோடு நமது கைகளின் அழகையும் சேர்த்து கெடுத்து விடும்.

இது மற்றவர்கள் முன்னிலையில் நம்மை வெட்கப்பட செய்து விடும். நிறைய பேர்கள் நகங்களில் ஏற்படும் வெள்ளை புள்ளி யால் அவதியுறுகின்றனர். இந்த நிலைக்கு லுகோன்சியா என்று பெயர். இந்த பாதிப்பு பொதுவாக கால், மற்றும், கை நகங்களில் ஏற்படுகிறது.

வடிவம்
இந்த வெண் புள்ளிகளின் வடிவம், அளவு போன்றவை எல்லாருக்கும் வேறுபடும். இந்த பூஞ்சை அழற்சி வர முக்கியமான காரணம் கால்சியம் பற்றாக்குறை, நகங்களில் ஏற்படும் காயங்கள் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
இந்த நகங்களில் ஏற்படும் வெள்ளை புள்ளியை மருந்துகள் இல்லாமலேயே சில வீட்டு முறைகளைக் கொண்டு சரி செய்யலாம். இது உங்கள் நகங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

லெமன் மற்றும் ஆலிவ் ஆயில்
லெமன் ஜூஸில் உள்ள விட்டமின் சி நகங்களில் ஏற்பட்டுள்ள நிற மாற்றத்தை போக்குகிறது. அதே நேரத்தில் ஆலிவ் ஆயில் நகங்களுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது.
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்
2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
செய்முறை
ஒரு பெளலில் 2-3 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸூடனு ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை உங்கள் நகங்களில் தடவிக் கொள்ளுங்கள்.
பிறகு 25 - 30 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் நகங்களில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய்
பயன்படுத்தும் முறை
சில துளிகள் தேங்காய் எண்ணெய்யை எடுத்து விரல் நகங்களில் தடவிக் கொள்ளுங்கள்.
அதை நன்றாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து இரவு முழுவதும் விட்டு விடுங்கள். பிறகு காலையில் எழுந்ததும் சாதாரண நீரில் கழுவவும்.

ஒயிட் வினிகர்
வொயிட் வினிகரின் அமில பண்புகள் நகங்களில் ஏற்படும் வெண் புள்ளிகளை நீக்க பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்
1/2 கப் வொயிட் வினிகரை 1/4 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும்
பயன்படுத்தும் முறை
1/2 கப் வொயிட் வினிகரை 1/4 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும்.
இந்த கலவையில் உங்கள் கைகளை 15-20 நிமிடங்கள் மூழ்க வைக்க வேண்டும்.
இதை வாரத்திற்கு 3 முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா வில அல்கலைன் பண்புகள் அடங்கியுள்ளது. இது நகங்களில் உள்ள நிறக் கறைகளை போக்கி வெண்புள்ளிகளை குறைக்கிறது.
தேவையான பொருட்கள்
1/2 கப் பேக்கிங் சோடா
1/4 கப் வினிகர்
பயன்படுத்தும் முறை
ஒரு பெளலில் 1/2 கப் பேக்கிங் சோடா எடுத்து அதில் 1/4 கப் வினிகர் சேர்த்து கொள்ளுங்கள்.
அதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்
இந்த கலவையில் உங்கள் கைகளை 15-20 நிமிடங்கள் மூழ்க வைக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு முறை என ஒரு வாரத்திற்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

யோகார்ட்
யோகார்ட்டில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் நகங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றை குணப்படுத்துகிறது.
தேவையான பொருட்கள்
1 கப் யோகார்ட்
பயன்படுத்தும் முறை
உங்கள் நகங்களை சுத்தமான சுத்தமான யோகார்ட் கலவையில் மூழ்க வையுங்கள்.
இதை 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.
பிறகு சாதாரண நீர் கொண்டு அலசி விடுங்கள்
இதை தினமும் செய்து வந்தால் வெண்புள்ளிகள் நீங்க அழகான நகங்களை பெறலாம்.

டி ட்ரீ ஆயில்
இதில் உள்ள மைக்ரோபியல் பொருள் நகங்களில் ஏற்படும் கறைகள் மற்றும் வெண்புள்ளிகளை போக்குகிறது.
தேவையான பொருட்கள்
டி ட்ரீ ஆயில்
பயன்படுத்தும் முறை
டி ட்ரீ ஆயிலில் ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து அதை எல்லா நகரங்களிலும் நன்றாக தடவ வேண்டும். சில நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இதை சில மாதங்கள் என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.



Click it and Unblock the Notifications
