Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
சிலந்தி கடித்துவிட்டால் விஷம் ஏறுமா? உடனே என்ன செய்ய வேண்டும்?
சிலந்தி கடித்து விட்டால் வீட்டிலேயே உள்ள பொருள்களை வைத்து எப்படி சரிசெய்து கொள்ளலாம்.
எட்டுக்கால் பூச்சி கடிப்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. உங்களை தெரியாமல் கடித்து விட்டால் அதை அப்படியே அலட்சியமாக விட்டு விடாதீர்கள். சில நேரங்களில் உங்களை எட்டுக்கால் பூச்சி கடித்துள்ளது என்பதற்கு எந்த வித அறிகுறிகளும் தென்படாது.

போக போகத் தான் அதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். விஷமுள்ள எட்டுக்கால் பூச்சி என்றால் நிலைமை மோசமாகி விடும். எனவே கவனமாக உடனடியாக இந்த கடிக்கு சிகிச்சை செய்வது முக்கியம்.

கடிபட்ட இடம் எப்படி இருக்கும்?
இது மற்ற பூச்சி கடியை போன்றே இருக்கும். கடிபட்ட இடத்தில் சருமம் சற்று வீங்கி காணப்படும். அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் வீங்க ஆரம்பித்து விடும். அரிப்பு மற்றும் சிவத்தல் ஏற்படும். தேனீ கடிப்பதை போன்ற தீவிரமான பாதிப்பு இல்லாவிட்டால் சில நேரங்களில் இது பல சிக்கல்களை ஏற்படுத்தி விடவும் வாய்ப்புள்ளது.
சிவந்து போன சருமம் அப்படியே எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பிக்கும். கடித்த இடத்தை சுற்றி நிறமாற்றம் ஏற்பட்டு ஒரு நமநமப்பு ஏற்படும்.

விளைவுகள்
எட்டுக்கால் பூச்சி கடித்த சில மணி நேரங்களில் கடித்த இடத்தை சுற்றி சுறுக் சுறுக்கென்று வலி ஏற்பட ஆரம்பித்து விடும். கடித்த இடத்தில் லேசாக வலி இருக்கும். தசைகளில் வலி, பிடிப்பு போன்றவை ஏற்படும்.

வீட்டிலேயே சிகிச்சை
இந்த எட்டுக்கால் பூச்சி கடிக்கு வீட்டிலேயே எளிதாக சிகிச்சை அளிக்க முடியும். சாதாரண எட்டுக்கால் பூச்சி கடி என்றால் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. விஷமுள்ள எட்டுக்கால் பூச்சி என்றால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. இது விளைவு மோசமாகாமல் இருக்க உதவும்.

சிகிச்சை முறைகள்
முதலில் கடிபட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு நன்றாக சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். பிறகு அதன் மேல் ஆன்டி பயாடிக் க்ரீமை அப்ளே செய்யுங்கள். குளிர்ந்த நீரில் துணியை நனைத்து கடிபட்ட இடத்தில் வையுங்கள். உங்கள் கால் மற்றும் கைகளில் கடித்து இருந்தால் மேலே தூக்கி வைத்து கொள்ளுங்கள். ஆண்டிஹிச்டமின் கடிபட்ட இடத்தில் இருக்கும் வீக்கத்தை குறைக்கும். அசெட்டமினோபன் அல்லது ஐபியூபுரோஃபென் போன்ற மருந்துகளை வலியை குறைக்க எடுத்து கொள்ளலாம்.

ஐஸ் கட்டி ஒத்தடம்
வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பு கொண்டு கடிபட்ட இடத்தை சுத்தம் செய்யுங்கள். இப்பொழுது அந்த இடத்தில் ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுங்கள். இது வீக்கம் வருவதை தடுக்கும். இதை 10 நிமிடங்கள் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இதே முறையை பல முறை செய்யவும். இந்த இயற்கை முறை பூச்சி கடிக்கு சிறந்தது.

கரித்தூள்
இந்த கரித்தூளுக்கு நச்சை வெளியேற்றும் சக்தி உள்ளது. எனவே கடிபட்ட இடத்தில் இந்த கரித்தூள் பேஸ்ட்டை தடவி விடுங்கள். இன்னும் நிறைய இடங்களில் கடித்து விஷம் ஏறி இருந்தால் எல்லா இடங்களிலும் அப்ளே செய்து சில மணி நேரம் அப்படியே வைத்து இருங்கள். இதை தினமும் இரண்டு தடவை செய்து வந்தால் சீக்கிரமே விஷம் முறிந்து கடிபட்ட இடம் சரியாகி விடும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு அலற்சியை போக்க வல்லது. எனவே உருளைக்கிழங்கை துருவி ஒரு மெல்லிய துணியில் வைத்து ரப்பர் பேண்ட் கொண்டு கட்டிக் கொள்ளுங்கள். இதை கடிபட்ட இடத்தில் வையுங்கள். உருளைக்கிழங்கின் சாறு நன்றாக இறங்கும் வரை வைக்கவும்.

லாவண்டர் எண்ணெய்
இந்த எஸன்ஷியல் ஆயில் எட்டுக்கால் பூச்சி கடியால் ஏற்படும் அலற்சியை போக்குகிறது. லாவண்டர் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடிபட்ட இடத்தில் அப்ளே செய்ய வேண்டும்.

பேக்கிங் சோடா பேஸ்ட்
பேக்கிங் சோடா வும் பூச்சு கடிக்கு உதவுகிறது. பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து குழப்பி கடிபட்ட இடத்தில் அப்ளே செய்ய வேண்டும். பல தடவை இதை செய்து வந்தால் அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

உயரே தூக்கி வைத்தல்
எட்டுக்கால் பூச்சி உங்கள் கை மற்றும் கால் பகுதிகளில் கடித்து இருந்தால் மேலே தூக்கி வைத்து கொள்ளுங்கள். இது வீக்கம் வருவதை தடுக்கும்.

கற்றாழை ஜெல்
பூச்சி கடியால் ஏற்படும் அழற்சி மற்றும் அரிப்பு போன்றவற்றை குறைக்கிறது. கற்றாழை ஜெல்லை பல முறை அப்ளே செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

சூனிய வகை காட்டுச்செடி
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அஸ்ட்ரிஜெண்ட் பொருட்கள் சருமத்திலு ஏற்படும் அலற்சியை போக்குகிறது. எனவே இது எட்டுக்கால் பூச்சி கடிக்கு சிறந்த மருந்தாகும்.

எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்
எட்டுக்கால் பூச்சி கடித்த பிறகு தீவிரமான வலி, பிடிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மூச்சு விட சிரமம் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று விடுங்கள். இதைத் தவிர்த்து உடம்பு முழுவதும் சிவத்தாலோ அறிகுறிகள் மேலும் தீவிரமானால் விஷமுள்ள எட்டுக்கால் பூச்சிகளான கருப்பு எட்டுக்கால் பூச்சி, பழுப்பு எட்டுக்கால் பூச்சி மற்றும் டிராண்ட்டுலா போன்றவற்றின் கடியாக இருக்கலாம் . எனவே உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.



Click it and Unblock the Notifications











