Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஏன் கடினமான டூத் பிரஷை உபயோகப்படுத்தக் கூடாது தெரியுமா?
பற்களானது மேல்தாடை மற்றும் கீழ்தாடைகளில் உள்ளது.பற்களில் உள்ள 4 முக்கிய பகுதிகள் எனாமல்,பல் திசு ,பற்காரை ,பற்கூழ் ஆகியவை.
மனித உடம்பில் பற்கள் உணவுகளை அரைத்து,மென்று மற்றும் செரிமானம் செய்ய பயன்படுகிறது.மனித பற்கள் 4 வகையாக உள்ளது.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை செயல்பாட்டிற்கு உதவுகிறது.

முதல் வகை வெட்டுப்பற்கள் இது உணவை வெட்ட பயன்படுகிறது,2-வது வகை கோரைப்பல் இது உணவைக் கிழிக்க பயன்படுகிறது,3 மற்றும் 4-வது வகை முன்கடைவாய்ப்பற்கள் மற்றும் கடைவாய்ப்பற்கள் இது உணவை மெல்ல பயன்படுகிறது.
பற்களானது மேல்தாடை மற்றும் கீழ்தாடைகளில் உள்ளது.பற்களில் உள்ள 4 முக்கிய பகுதிகள் எனாமல்,பல் திசு ,பற்காரை ,பற்கூழ் ஆகியவை.
கடின பிரஷ் :
கடினமான முட்கள் போன்ற அமைப்புடைய பிரஷ்-ஆல் பற்களை சுத்தம் செய்வதால் பற்கள் பளிச்சென்று சுத்தமாகும் என்று ஒரு தவறான நம்பிக்கை உள்ளது.உண்மை என்னவென்றால் கடினமான அமைப்புடைய பிரஷ்உபயோகிப்பதால் பற்கள் மற்றும் ஈறுகளில் சேதம் ஏற்படுகிறது.
மென்மையான பிரஷ் :
ஈறுகளையும்,பற்களையும் எந்த விதமான சேதமுமின்றி சுத்தமாகவும்,பளிச்சென்றும் வைப்பதற்கு மென்மையான பிரஷ்-களே சிறந்தது. இதுவே ஆரோக்கியமான பற்களுக்கு உகந்தது.
கடினமான பிரஷ்-களில் உள்ள முட்கள் போன்ற அமைப்பு பற்களில் உள்ள கறைகளையும்,அழுக்குகளையும் நீக்குகிறது ஆனால் எதிர்பாராத ஒன்று என்ன என்றால் பற்களில் உள்ள எனாமல்-ஐயும் நீக்குகிறது.எனாமல் கடினத்தன்மை வாய்ந்த வெண்மையாக காணப்படும் பகுதி.
இது பற்களின் சில மென்மையான பகுதிகளை மூடி பாதுகாக்கிறது.அது மட்டுமின்றி எனாமல் பற்களை தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாவில் இருந்து பாதுகாக்கிறது.அதனால் முடிந்தவரை கடினமான முட்கள் போன்ற அமைப்புடைய பிரஷ் உபயோகிப்பதை நிறுத்தலாம்.
பல் கூச்சம் :
அளவுக்கதிகமாக எனாமல் நீக்கப்பட்டால் பற்களில் பற்க்கூச்சமும்,மஞ்சள் நிறமும்,பற்களின் முனைகளில் சீரற்ற கடினத்தன்மையையும்,பற்களில் அரிப்பும் ஏற்பட்டு பற்களின் உள் பகுதிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.
கடினத்தன்மை உடைய உபயோகிப்பதால் பற்களின் ஈறுகளிலும் பாதிப்பு ஏற்படும்.ஈறுகளில் அரிப்பு ஏற்படுவதால் பற்களின் வேர்கள் பலவீனமாகும்.இதனால் பற்களின் உணர்திறன் அதிகமாக உணரப்படும் மற்றும் பற்களின் துவாரங்களை அடைப்பதற்கு தடை ஏற்படும் .
பல் எனாமல் :
ஏனெனில் பற்களின் வேர்களில் பாதுகாப்பாக எனாமல் இல்லாதிருப்பதே காரணம்.பற்களின் ஈறுகள் அதிகமாக அரிக்கப்படுவதால் பற்களை தாங்கி இருக்கும் எலும்பு சேதப்பட்டு பல் நிரந்தரமாக விழும் அபாயம் உள்ளது.
எனவே மென்மையான அமைப்புடைய பிரஷ் உபயோகப்படுத்துவதே சிறந்தது மற்றும் பற்களை கூர்மையான கருவிகள் கொண்டு சுத்தம் செய்வதைத் தடுத்தாலே துவாரங்கள் ஏதும் இன்றி விரைவில் பற்கள் குணமாகிவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications




