Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
பக்கவாதம் வந்தவர்களுக்கு ஏன் குடிக்கும் ஆசை வருகிறது என உங்களுக்கு தெரியுமா?
பக்கவாதத்தால் மூளையில் ஏற்படும் மாற்றங்களை அதிகமாக ஆல்கஹால் பருக ஒருவரை தூண்டும் என்று ஒரு விலங்குகள் ஆய்வு தெரிவிக்கிறது. பக்கவாதம் மூளையில் உள்ள டோர்சல் லேட்ரல் ஸ்ட்ரியாடம் என்ற நரம்பணுக்களை அழித்துவிடுகிறது. இதனால் மூளையின் மத்தியில் உள்ள நரம்பணுக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.

மூளை மத்தியில் உள்ள நரம்பணுக்கள் உணர்வுகளை தூண்டக்கூடியவை. அதிலும், ஒரு குறிப்பிட்ட வகை டோபமைன் உடல் செலகளுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகின்றன, இது D1 என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவரை ஆல்கஹால் குடிப்பது போன்ற நிகழ்வுகளை கட்டாயப்படுத்துகிறது.
இந்த செயல் சற்று ஆர்வமான செயல் தான். ஏனென்றால், எப்பொழுது டோர்சல் லேட்ரல் ஸ்ட்ரியாடம் என்ற நரம்பணுக்கள் இறந்தால், D1 நரம்பணுக்களில் உற்சாகத்தை தூண்டுகிறது என்று ஜங் வாங் என்ற டெகாஸ் ஏ&எம் பல்கலைகழக உதவி பேராசிரியர் கூறுகிறார். இந்த அணுவின் அதிகப்படியான ஆற்றல் தான் ஆல்கஹால் பருக ஆர்வத்தை தூண்டுகிறது என்றும் தெரிவித்தார்.
பத்திரிக்கையில் வெளியிடபட்ட ஒரு அறிவியல் ஆய்வறிக்கையில்,பக்கவாதம் வந்த விலங்குகளின் மாதிரியை வைத்து ஆராய்ந்ததில், மனிதனுக்கு வரக்கூடிய சாதாரண பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. இந்த பக்கவாதத்தால் நீரின் அளவை போல் ஆல்கஹால் உட்கொள்ளும் அளவு இருந்ததாக கண்டறியப்பட்டதாக தெரிகிறது. மேலும்,இது தொடர்பாக வாங் கூறியதாவது, இந்த தூண்டலானது பக்கவாதம் ஏற்பட்டு 5வது நாளில் இருந்து ஒரு மாதத்திற்கு பின் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.
குறிப்பாக சொல்லப்போனால், தண்ணீர் அல்லது ஆல்கஹால் இரண்டையும் கொடுத்தார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும், ஆல்கஹாலையே தேர்ந்தெடுப்பர் என்று வாங் கூறுகிறார்.
அதுவே, D1 அணுக்கள் தடுக்கப்படும்போது, ஆல்கஹால் பருவதற்கான தூண்டல் குறைக்கப்படும். மேலும் வேறு எந்த மாற்றத்தையும் ஏற்படவிடாது. மூளை நன்கு செயல்பட ஒரு சிறந்த குறிப்பு என்றால், D1ன் அதிகப்படியான ஆற்றலுக்கு மருத்துவரின் ஆலோசனைப் படி ஏதாவது மருந்து எடுத்துக்கொண்டால் மூளைக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம் என்று வாங் கூறுகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


