Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
இன்றைய பெண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள் என்னென்ன?
இன்று ஆண்கள் வாழ்வில் பல அசாதாரண சூழல் நிலவ...'அதில் நான் தான் முதன்மை...' என முந்திகொண்டு வந்து நிற்கிறது உடல் நலப்பிரச்சனைகள். ஆண்களுக்கு தான் இப்பேற்ப்பட்ட பிரச்சனைகள் என்றால்...பெண்களையும் இந்த பேரிடர் ஆபத்துகள் என்றுமே விட்டு வைப்பதில்லை. ஆனால், என்றுமே ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலமே அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதனால் சொல்கிறேன். பெண்களே!!! உஷாராக இருங்கள். நீங்கள் நோயற்ற வாழ்வினை வாழ...தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வீர்களாயின் கண்டிப்பாக ஆயுட்காலத்தின் அழகினை உங்கள் குடும்பத்துடன் இணைந்து குதூகலத்துடன் வாழ்ந்து மகிழலாம் என்பதே உண்மையானதொரு விசயமாகும்.

உலகம் முழுவதும் நோய்களின் உக்கிரதாண்டவ ஆட்டம் அரங்கேற... பல காரணிகள் பற்களை காட்டிகொண்டு, 'நான் தான் அதற்கு காரணம்...' என நிற்கிறது. அவற்றுள் பெண்களை சித்திரவதை செய்யும் சில உடல் நல குறைவுகள் என்ன என்பதனை நாம் இப்பொழுது கீழே பார்க்கலாமா?

புற்றுநோய்:
புகைப்பிடிக்கும் ஆண்கள் இங்கே பலர் இருக்க...பெண்களுக்கு அதிகம் புற்றுநோய் வருகிறது என்று சொன்னால்...உங்களால் நம்ப முடிகிறதா? புற்றுநோய்கள் பலவிதம். அவற்றுள் பெண்களை தாக்கும் புற்றுநோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறதாம்...என்ன செய்வது? அதனால் தான் சொல்கிறேன்... நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராயின்...தயவு செய்து அந்த எண்ணத்தை அடியோடு புதைத்து விடுங்கள். நீங்கள் மது அருந்துபவராயின்...அந்த பழக்கத்தை மறந்து வாழ பழகிகொள்ளுங்கள். நீங்கள் ஆரோக்கியமற்ற உணவினை தேடி அலைபவராயின்...அதனை விட்டு ஆயிரமாயிரம் மைல்கள் தள்ளி செல்லுங்கள். சரி, எத்தகைய உணவினை நான் எடுத்துகொள்வது? என நீங்கள் ஏங்குவது எனக்கு தெரிகிறது?
நீங்கள் உண்ணும் உணவில் அதிகம் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் இருக்குமாயின் புற்றுநோயை விட்டு நீங்கள் விலகுவது சுலபமாகும். ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் எவற்றிலெல்லாம் இருக்கிறது? சொல்கிறேன் கேளுங்கள்.
நீங்கள் அருந்தும் கீரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேனீர், பேரிக்காய், ஆப்பிள்கள், சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், இலை காய்கறிகள் ஆகியவற்றில் இந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் அதிகம் இருக்கிறதாம். தவிர்க்காமல் தான் இவற்றை எல்லாம் எடுத்துகொள்ளுங்களேன்...

நீரிழிவு நோய்:
நீரிழிவு நோயால் உங்கள் வாழ்க்கை சீரழிந்து விடும் என்னும் பயமா? வாருங்கள் சிறு பத்தியின் மூலம் சில பயனுள்ள தகவல்களை நாம் தெரிந்துகொள்ளலாம்.
நீரிழிவு நோய் ஒருவருக்கு ஏற்பட...'என்னை காப்பாற்றுங்கள்...' என கத்திகொண்டு முன்வருகிறது நரம்புகள், சிறு நீரகங்கள், ஏன்... கண்களை கூட இந்த நோய் பாதிக்கிறது என்றால் பாருங்களேன். அட ஆமாம்ங்க.
இந்த நோயினை நாம் கண்டுகொள்ளாமல் அலட்சியபடுத்துவோமாயின் கண்களையும் இது பாதிக்கிறதாம். பத்திரமா பார்த்துக்கோங்க..உங்கள் கண்களை. இன்று பெருமளவில் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது பெண்கள் தானாம்.
பாவம்...வந்த பின் கடவுளை வேண்டி என்ன பயன்? இருப்பினும் அவர்கள் சில பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதால் இந்த நோயிலிருந்து அவர்களை பாதுகாத்துகொள்ளவும் முடிகிறது.

பக்கவாதம்:
பெண்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு நோய் பக்கவாதம் என்று சொல்ல...அந்த நோயோ அவர்கள் வாழ்க்கையை செயழிலக்க செய்து செதுக்கிய பொம்மைபோல் அசைவற்று அவர்களை அமரவைக்கிறது.
இந்த பக்கவாதம் உங்களை தொட்டுபிடிக்க கூடாது என்றால்... நீங்கள் சிலவற்றினை செய்தாக வேண்டும். ஆம், ஆரோக்கியமான இரத்த அழுத்தம் தான் இந்த பக்கவாதத்தையே செயழிலக்க செய்து உங்களை காப்பாற்றுகிறதாம்.
அத்துடன் ஆரோக்கியமான எடையையும் பராமரித்து சோடியம் உட்கொள்ளலை குறைத்து வந்தால் பக்கவாதமே உங்கள் உடல் ஆரோக்கியத்தை கண்டு பயந்து ஓடுகிறது. உங்கள் வயதிற்கு ஏற்ப பொட்டாசியத்தினை உட்கொள்ளுதலும் பக்கவாதத்திலிருந்து உங்களை காப்பாற்றுகிறது.

உடல் பருமன்:
பெண்களின் உடை எடை அதிகரிக்குமென்றால் ஊராறும் வந்து உற்று பார்ப்பார் என்பதே உண்மை. ‘என்ன நீங்க இவ்வளவு குண்டா இருக்கிங்க?' என அவர்கள் கேட்கும் பொழுது... ஏக்கமுறும் பெண்கள் இங்கே பலர் இருக்க...அவர்கள் ஏங்கியபொழுதிலும் ‘நான் போகமாட்டேன்...' என்கிறது உடல்பருமன் பிரச்சனை. உங்கள் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக கருதப்படுவது பதப்படுத்தப்பட்ட பொருள்களை உண்ணுவதே.
பதப்படுத்தப்பட்ட உணவினை குற்றவாளி கூண்டில் நீங்கள் ஏற்ற...நான் மட்டுமா குற்றவாளி? என சோம்பேறித்தனத்தையும் அது சேர்த்து கூண்டில் ஏற்றுகிறது. ஆம், சோம்பலும் நம் உடல் பருமன் அதிகரிக்க முக்கியமானதொரு காரணமாகும். ஒரே இடத்தில் நடைப்பிணமாய் நாம் அமர...உடல் பருமன் அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.

இருதய சிக்கல்கள்:
இந்த இதய பிரச்சனைகள் உங்களை விட்டு செல்ல வேண்டுமா? அப்படி என்றால்...இரத்த கொழுப்புகளின் ஆரோக்கியத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
அத்துடன், இரத்த அழுத்தத்தினை நாம் குறைப்பதன் மூலமாகவும், புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்ப்பதின் மூலமாகவும் நம்மால் இந்த இதய நோயிலிருந்து விலகி இன்புற்று மகிழ முடிகிறது.
அத்துடன் நிறைவுற்ற கொழுப்பு பொருள்களை நாம் உட்கொள்வதும்... ஏங்கிய எமனுக்கு எண்ணிக்கை ஏற்றத்துக்கு உதவி உங்கள் ஆயுட்காலத்தை குறைக்கிறது. அதனால், கெட்ட கொழுப்பினை உங்கள் உடம்பில் சேகரிக்கும் உணவுகளை நீங்கள் தவிர்ப்பது... எமனிடமிருந்து எஸ்கேப் ஆக பெரிதும் உங்களுக்கு உதவுகிறது.

மார்பக புற்றுநோய்:
பெண்களின் வாழ்வில் பெரும் கல்லை பாரமின்றி இறக்கி உயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய் தான் இந்த மார்பக புற்றுநோயாகும். வல்லுனர்களின் வாக்குபடி இந்த நோயினை விரட்டமுடியும் என்கின்றனர்.
இந்த நோய் பாதிக்கும் ஆரம்ப காலத்திலே கவனமாக செயல்பட்டு சிகிச்சை மேற்கொண்டால்...நம்மால் இந்த மார்பக புற்று நோயிலிருந்து பாதுகாத்துகொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
வயது, பரம்பரை தொற்று, உடல்பருமன் அதிகரித்தல், இனம் சார்ந்த ஒன்று, குடிப்பழக்கம் என சில காரணிகளால் இந்த நோய் தொற்ற....வாழ்க்கையை வாழமுடியாமல் தோற்றுபோகிறோம் என்றே சொல்ல வேண்டும். அப்பேற்ப்பட்ட குடி போன்ற பழக்கவழக்கங்கள் உங்களுக்கு அவசியம் தானா?

எலும்புப்புரை:
இன்றைய நிலவரப்படி இந்த எலும்புப்புரையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் 60 சதவிகிதம் இருக்கிறதாம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முன்னெச்சறிக்கை நடவடிக்கைகளின் வாயிலாக இந்த நோயிலிருந்து உங்களை பாதுகாத்துகொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
எலும்புகளை வலுப்படுத்துதல், கால்ஷியத்தை அதிகம் உட்கொள்ளுதல், எடை தூக்கும் பழக்கம் என சில வழிகளால் இந்த எலும்புப்புரை வராமல் காக்க முடியும் என சொல்ல...வந்த பிறகும் காக்க முடியும் என்ற ஓசையும் காதுகளில் விழத்தான் செய்கிறது.

மன அழுத்தம்:
இந்த மன அழுத்தம் என்பது ஆண்களை அழுத்துவதனை காட்டிலும் பெண்களை ஒரு சதவிகிதம் அதிகமாகவே அழுத்துகிறதாம். சில சமயங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களின் மன அழுத்தம் அதிகரிக்க...பல காரணங்களினால் சொந்த வாழ்க்கையின் மீது அனைவரும் பழி போட்டு காய் நகர்த்துகின்றனர் என்பதே உண்மை.



Click it and Unblock the Notifications











