Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
இந்த 2 பொருளை வெச்சு தயாரிக்கும் டீயை 3 வேளை குடிச்சா... தொப்பை இருமடங்கு வேகத்தில் குறையுமாம்..
Belly Fat In Tamil: தற்போது தொப்பையால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகிறார்கள். தொப்பையானது ஒருவரது உடல் தோற்றத்தை அசிங்கமாக வெளிக்காட்டுவதைத் தவிர, உடலில் பலவிதமான பிரச்சனைகள் வருவதற்கும் காரணமாக இருக்கும்.
சொல்லப்போனால் தொப்பையைக் கொண்டவர்களுக்கு தான் பிபி, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், இதய நோய் போன்ற உலகில் உள்ள அனைத்துவிதமான பிரச்சனைகள் உள்ளன. எனவே தொப்பை இருந்தால், அதை குறைக்க முயற்சிக்க வேண்டியது அவசியம்.

ஒருவரது தொப்பையைக் குறைக்க ஏராளமான வழிகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் அனைவருக்குமே நல்ல பலனைத் தரும் என்று கூறிவிட முடியாது. ஒருசிலருக்கு சில வழிகள் நல்ல பலனைத் தரலாம்.
ஒருவருக்கு தொப்பை வர காரணம் உணவில் உள்ள கொழுப்புக்களும், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும் தான். உடலில் கொழுப்புக்கள் சரியாக கரைக்கப்படாமல் இருந்தால், அவை வயிற்றுப் பகுதியில் தேங்கி தொப்பையை உண்டாக்குகின்றன. நீங்கள் தொப்பையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிகம் சிரமப்படாமல் எளிதில் தொப்பையைக் குறைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.
ஏனெனில் கீழே தொப்பையை இருமடங்கு வேகத்தில் குறைக்க உதவும் ஒரு அற்புதமான டீ குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டீயானது மருத்துவ குணங்கள் நிறைந்த பிரியாணி இலை மற்றும் கிராம்பு கொண்டு தயாரிக்கப்படுகிறது. இப்போது இந்த டீயை எப்படி தயாரிப்பது, எப்போது குடிக்க வேண்டும் மற்றும் இது எப்படி தொப்பையைக் குறைக்க உதவுகின்றன என்பதைக் காண்போம்.
பிரியாணி இலை மற்றும் கிராம்பு
பிரியாணி இலை எடை இழப்பிற்கு பெரிதும் உதவுவதற்கு காரணம், இது உடலில் இருந்து அதிகப்படியான நீரை, சிறுநீரின் வழியே வெளியேற்ற உதவுகிறது. அதாவது இது ஒரு டையூரிக்காக செயல்படுகிறது. இதில் உள்ள பண்புகள் உடலை நன்கு செயல்பட வைத்து, சிறுநீரின் வழியே நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் இது உடலில் அதிகப்படியான நீர்த்தேக்கத்தால் ஏற்படும் அடிவயிற்று வீக்கம், செல்லுலைட் அல்லது உடல் பருமனைக் குறைக்கக உதவுகிறது.
மறுபுறம் கிராம்பை எடுத்துக் கொண்டால், அது இரைப்பை குடல் நொதிகளின் உற்பத்தியை மேம்படுத்தி செரிமானம் சிறப்பாக செயல்பட வைக்கிறது. மேலும் இது அஜீரண கோளாறு, நெஞ்செரிச்சல், குமட்டல் அல்லது வயிறு பொருமல் போன்றவற்றையும் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
கிராம்பு பிரியாணி இலை டீ தயாரிப்பது எப்படி?
* இந்த டீ தயாரிப்பதற்கு, ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் 2 கிராம்பு மற்றும் 1 பிரியாணி இலையைப் போட்டு 15 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* முக்கியமாக இந்த டீயை தினமும் 3 வேளை குடிக்க வேண்டும். அதுவும் காலை உணவிற்கு முன், மதிய உணவிற்கு முன் மற்றும் இரவு தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.
* இந்த டீயை குடித்து வந்தால், அது ஒரே வாரத்தில் தொப்பையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காட்டுவதாக நிபுணர்களும் கூறுகின்றனர்.
குறிப்பு
ஒரு டீ தொப்பையைக் குறைக்க உதவுகிறது என்றால், அதற்கு வெறும் அந்த டீயை மட்டும் குடித்தால் போதாது. அத்துடன் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றைப் பின்பற்றி வந்தால் மட்டுமே, தொப்பையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications