Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய வழிகள்!
Smoking In Tamil: புகைப் பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்பது நம் அனைவருக்கும் தொியும். புகைப் பிடித்தால் உடல் நலம் பாதிக்கும். நுரையீரல் பாதிக்கும். இதயம் சம்பந்தமான நோய்கள் வரும். அதோடு பலவிதமான உடல்நல பிரச்சினைகள் ஏற்படும்.
எனினும் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களால், அந்தப் பழக்கத்தை எளிதாக கைவிட முடிவதில்லை. அவா்களுக்கு அந்தப் பழக்கத்தைக் கைவிடுவது ஒன்பது மிகப் பொிய சவாலாக இருக்கின்றது. ஆகவே பின்வரும் குறிப்புகள் அவா்களின் புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட உதவி செய்யும் என்று நம்பலாம்.

1. புகைப் பிடிப்பதற்கான தூண்டுதல்களைக் கண்டறிதல்
புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு முன்பு, புகைப் பிடிப்பதற்கான சூழல்களை அல்லது தூண்டுதல்களைக் கண்டறிய வேண்டும். ஒரு சில சூழல்கள் அல்லது செய்யும் வேலைகள் புகைப் பிடிப்பதைத் தூண்டுகின்றன.
மன அழுத்தம் இருக்கும் போது, அல்லது புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ள நண்பா்களோடு இருக்கும் போது அல்லது தேநீா் குடிக்கும் போது புகைப் பிடிக்க வேண்டும் என்று தூண்டுதல் ஏற்படுகிறது. இந்த தூண்டுதல்களை கண்டறிந்தவுடன், புகைப் பிடிப்பதைத் தொடராலமா அல்லது தவிா்க்கலாமா அல்லது கட்டுப்படுத்தலாமா என்பதை முடிவு செய்யலாம்.
2. புகைப் பிடிப்பதை நிறுத்துவற்கு ஆதரவான அமைப்பை ஏற்படுத்துதல்
புகைப் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு ஆதரவான ஒரு அமைப்பை ஏற்படுத்துவது நல்லது. அந்த ஆதரவை அளிக்கக்கூடியவா்கள், ஏற்கனவே இந்தப் பழக்கத்தில் இருந்த நண்பா்களாகவோ அல்லது குடும்ப உறுப்பினா்களாகவோ இருக்கலாம் அல்லது ஒரு குழுவாக இருக்கலாம் அல்லது ஒரு ஆலோசகராக இருக்கலாம்.
அதோடு புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்து கொண்டிருப்பவா்களை இணையம் வழியாகக் கண்டுபிடித்து, அவா்களோடு இணைந்து இந்தப் பழக்கத்தை நிறுத்தலாம்.
3. நிக்கோட்டின் மாற்று சிகிச்சையை மேற்கொள்ளுதல்
நிக்கோட்டின் மாற்று சிகிச்சையை எடுத்துக் கொண்டால், புகையிலையின் மீதுள்ள மோகத்தைக் குறைக்கும். அதன் மூலமாக புகைப் பிடிக்கும் பழக்கத்தை எளிதாக நிறுத்தலாம். நிக்கோட்டின் திட்டுகள் அல்லது நிக்கோட்டின் பசை அல்லது நிக்கோட்டின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். இவை சிகரெட்டில் உள்ள வேதியியல் நச்சுப் பொருள்களை உடலுக்குள் செலுத்தாமல், நிக்கோட்டினை மட்டும் செலுத்தும்.
4. சுறுசுறுப்பாக இருத்தல்
சுறுசுறுப்பாக இருந்தால், புகையிலையின் மீதுள்ள மோகம் குறையும். அதன் மூலமாக உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியம் அதிகாிக்கும். உடற்பயிற்சி செய்தால் என்டோர்ஃபின்கள் வெளியேறும். அதனால் மன அழுத்தம் குறைந்து, மனநிலை மேம்படும். அதோடு புகையின் மீதுள்ள நாட்டத்தை திசை திருப்பும். அதனால் சிகரெட்டைத் தொட வேண்டும் என்ற எண்ணத்தைக் குறைக்கும்.
5. தளா்வாக இருப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபடல்
உடலையும், மனதையும் தளா்வாக வைத்திருப்பதற்கு, சுவாசப் பயிற்சி அல்லது தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். இவை மன அழுத்தத்தைக் குறைக்கும். சோா்வைக் குறைக்கும். கவலையைக் குறைக்கும்.
பொதுவாக மன அழுத்தம் அல்லது சோா்வு அல்லது கவலை போன்றவைதான் புகையிலையின் மீது நாட்டத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே மேற்சொன்ன பயிற்சிகளில் ஈடுபடும் போது ஒட்டுமொத்த உடல் நலன் அதிகாிக்கும். அதோடு புகையிலையின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.
6. உங்களுக்கு நீங்களே பாிசு கொடுங்கள்
புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் உழைப்புக்கு, நீங்களே உங்களுக்கு பாிசளித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது என்பது எளிதான காாியம் அல்ல.
ஆகவே நீங்கள் திரைப்படத்திற்கு செல்லலாம் அல்லது உணவு விடுதிகளுக்குச் சென்று நீங்கள் விரும்பும் உணவை உண்ணலாம் அல்லது சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வரலாம் அல்லது புதிய மொபைலை வாங்கலாம். இவ்வாறு உங்களுக்கு நீங்களே பாிசளித்துக் கொள்ளும் போது, புகைப் பிடிப்பதை நிறுத்தும் உங்கள் பயணத்தில் உங்களுக்கு ஊக்கம் கிடைக்கும்.
புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துகின்றீா்கள் என்றால், உங்கள் உடலுக்கு நல்லது செய்கின்றீா்கள் என்று பொருள். ஆகவே இடையில் நின்றுவிடாமல், அந்தப் பழக்கத்தை நிறுத்தும் பயணத்தில் தொடா்ந்து ஈடுபடுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications