Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
உங்க சமையலுக்கு சரியான எண்ணெயை எப்படி தேர்ந்தெடுக்கணும் தெரியுமா? இதுதான் ஆரோக்கியமான சமையல் எண்ணையாம்
நம் வீட்டு சமையலறையில் தேவைப்படும் மிகவும் அவசியமான மற்றும் அத்தியாவசியமான சமையல் பொருள் என்றால் அது சமையல் எண்ணெய்தான். தினசரி சாதாரண சமையலுக்கும், பொறிப்பது, வறுப்பது என உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகின்றன. நமது முன்னோர்கள் சில தலைமுறைகளுக்கு முன்னால் சுத்தமான எண்ணைகளை பயன்படுத்தினார்கள். நமக்கு முந்திய தலைமுறையும் நம் தலைமுறையும் பாக்கெட்களில் கிடைக்கும் எண்ணெய்களை பயன்படுத்துகிறோம்.

தற்போது ஏற்பட்டிருக்கும் சிறு தெளிவால், பெரும்பாலானோர் செக்கு எண்ணெய் எனப்படும் பாரம்பரிய எண்ணெய்க்கு மாறி வருகிறார்கள். இப்போது செக்கு எண்ணெய்களும் கடைகளில் கிடைக்கும் நிலைக்கு வந்துள்ளோம். இந்த எண்ணெய்களை தவறான முறைகளில் சமைப்பது சில ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க, இங்கு சுத்திகரிக்கப்பட்ட மற்றும் ஃகோல்ட்-ப்ரெஸ்டு எண்ணைய் எவ்வகை சமையலுக்கு சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர் விளக்கமளிக்கிறார்.
எதற்கு எது சிறந்த எண்ணெய்?
நாம் என்ன சமைக்க போகிறோம் என்பதை பொறுத்து நாம் உபயோகிக்கும் எண்ணெய் மாறுபடும். ஏதோ ஒரு எண்ணெய் என தீர்மானிக்காமல், எது சிறந்தது என்பதை அறிந்து சமைப்பது நல்ல பலனை தரும்.
தினசரி சமையல்
தினமும் நாம் செய்யும் குழம்புகள், பொரியல்கள், வதக்குதல், மற்றும் வறுத்தல் போன்றவற்றிற்கு ஃகோல்டு ப்ரெஸ்டு எண்ணெய்களைத் தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் அவை சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை விட பல மடங்கு ஆரோக்கியமானவை. இருந்தாலும் பஜ்ஜி, பூரி போன்ற எண்ணையில் பொரிக்கும் பதார்த்தங்களை ஃகோல்டு ஃப்ரெஸ்டு எண்ணையில் செய்ய வேண்டாம் என கூறுகிறார். ஏன்னென்றால் 180° C கொதிநிலை கொண்ட ஃகோல்டு ப்ரெஸ்டு எண்ணையில் பொரிக்கும் போது, அந்த உணவு பொருள் ஆரோக்கியமற்றதாக மாறி விடும்.
பொரிக்கும் உணவுகள்
மிதமான எண்ணையில் அல்லது நன்றாக எண்ணையில் அழுத்தி பொரிக்க விரும்பினால், நீங்கள் தேர்ந்தெடுக்க செய்ய வேண்டியது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைதான். ஆரோக்கியமற்றதாக கருதப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை தேர்தெடுக்க சொல்வதால் அதிர்ச்சி அடைந்தால், அதற்கான விளக்கத்தையும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கான காரணம் சுத்திகரிப்பட்ட எண்ணையின் கொதிநிலை அதிகமாக இருப்பதால், அதிக கொதிநிலையில் உணவு பொருட்களை பொரிப்பதற்கு ஏற்றதாகிறது.
ஒருமுறை பொரித்த எண்ணையை மீண்டும் பயன்படுத்தலாமா?
நாம் ஒருமுறை உணவு பொருட்களை பொரித்த எண்ணையை மீண்டும் பயன்படுத்தலாமா என்கிற சந்தேகமும் பரவலாக காணப்படுகிறது. பயன்படுத்தலாம் என்றால் எவ்வளவு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும் என பல கேள்விகள் நம்மிடம் இருந்து கொண்டே இருக்கின்றன.
பெரும்பாலும், ஒரு முறை பொரிக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும் உபயோகிக்காமல் இருப்பது சிறந்தது, அதிலும் சிறிதளவு சேர்த்து வதக்குவதற்கும் கூட பயன்படுத்த கூடாது. ஆனால், நமக்கு அவ்வளவு எண்ணையையும் கீழே கொட்ட மனம் வராது. அதற்கு முடிந்தவரை பொரிப்பதற்கு குறைவான எண்ணையை பயன்படுத்துங்கள். அதிகமான எண்ணையை பயன்படுத்தி இருந்தால் இந்த சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
இரண்டு பயன்பாடுகளுக்கு மட்டும்
இரண்டு முறைகளுக்கு மேல் பொரிக்க பயன்படுத்திய சமையல் எண்ணெயை கட்டாயமாக மீண்டும் பயன்படுத்த கூடாது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைக்கிறது. அதற்கு காரணம், அதில் இருக்கும் போலார் கலவைகள் 25 சதவீதத்தைத் தாண்டியவுடன் அது நுகர்வுக்குத் தகுதியற்றதாகிவிடும் என்பதால் தான்.
ஆறவைத்து வடிகட்டவும்
இது நாம் எப்போதும் செய்வது தான், பயன்படுத்திய பின் இருக்கும் மிதமான எண்ணையை ஆறவைத்து சேமிப்பது. எண்ணெய் நன்றாக ஆறியவுடன், சிறுதுகள்கள் கூட இல்லாதபடி நன்றாக வடித்து சேமிக்க வேண்டும். அப்படி மீதமிருக்கும் துகள்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
ஒரு மாத காலத்திற்குள்
காற்றுபுகாத பாத்திரத்தில் எண்ணையை சேமித்த உடன், அதை ஈரப்பதம் இல்லாத, குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். காற்று மற்றும் சூரிய ஒளி படாத இடமாக இருக்க வேண்டும். அதை ஒரு மாத காலத்திற்குள் உபயோகித்து விடுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.
இந்த கட்டுரையின் போட்டோ, முன்னுரை, tags மற்றும் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications

