Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
முதுகுத் தண்டில் ஏற்படும் காயம் மனம் மற்றும் உடல்நலத்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா?
முதுகுத்தண்டு வலி என்பது இப்பொழுது எல்லாருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. முதுகுத்தண்டு வலி என்பது வெறும் முதுகுத் தண்டில் மட்டும் ஏற்படுவதில்லை. இந்த வலியின் வேதனையால் சிலருக்கு மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
முதுகுத்தண்டு வலியால் பலர் மனச்சோர்வு அடைகிறார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். முதுகுத்தண்டு வலியால் பலர் பயம், அனிஸிட்டி, தனிமை மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற மன ரீதியான பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

சரி வாங்க இந்த முதுகுத்தண்டு வலியால் மனம் மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகள் என்னென்ன ஏற்படும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் அறிந்து கொள்வோம்.
முதுகுத்தண்டு வலியால் ஏற்படும் மனரீதியான பிரச்சினைகள்:
அனிஸிட்டி பிரச்சினைகள்
முதுகுத்தண்டு வலியால் பாதிக்கப்பட்ட நபருக்கு அனிஸிட்டி பிரச்சினைகள் ஏற்படலாம். இது அவருக்கு மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. முதுகுத்தண்டு வலியால் பாதிக்கப்பட்ட நபர் வீட்டில் தனியாக இருக்க பயந்தாலோ, திறந்த அல்லது மூடிய இடங்களிலோ அல்லது கூட்டத்தில் பிஸியாக இருக்க பயந்தாலோ அதற்கு அகோராபோபியா என்று அழைக்கப்படுகிறது.
பயம்
முதுகுத்தண்டு வலி சிலருக்கு பயத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. முதுகுத்தண்டு வலி தீவிரமாக இருந்தால் அது நோயாளிகளுக்கு அச்சத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே முதுகுத்தண்டு வலி தீவிரம் ஆவதற்குள் அறுவை சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.
தனிமை
முதுகுத்தண்டு காயங்கள் ஆறுவதற்கு சில காலங்கள் எடுக்கும். எனவே நீங்கள் தனிமை இருப்பது உங்களுக்கு கவலைகளை அளிக்கலாம். எனவே முடிந்த வரை உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து இருக்க முயலுங்கள். உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பது நல்லது.
தாழ்வு மனப்பான்மை
முதுகுத்தண்டு காயங்கள் சிலருக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணலாம். எழுந்து நடக்க முடியாத சூழலில் இது போன்ற பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடலாம். எனவே இந்த மாதிரியான சூழலில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது மிகவும் அவசியம்.
துக்கம்
முதுகுத்தண்டு வலி சிலருக்கு துக்கத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் படுத்த படுக்கையாக இருக்கும் போது துக்க நிலைக்கு உள்ளாக நேரிடலாம்.
கோபம்
முதுகுத்தண்டு வலி வேதனையை தாங்க முடியாத போது சிலருக்கு அதிகமாக கோபங்கள் ஏற்படலாம். எனவே இந்த மாதிரியான நேரங்களில் உங்கள் மனநிலையை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடலாம்.
மனச்சோர்வு
முதுகுத்தண்டு காயங்கள் உங்களுக்கு மனச்சோர்வை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. காயமடைந்த நோயாளிகள் 18. 1% மனச்சோர்வை சந்திக்கின்றனர்.
குற்ற உணர்வு
எதாவது விபத்து காரணமாக முதுகுத்தண்டு பகுதியில் காயங்கள் ஏற்பட்டால் குற்ற உணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பலர் குற்ற உணர்ச்சி நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
விரக்தி
முதுகுத்தண்டு காயங்கள் சீக்கிரம் குணமடையாவிட்டால் விரக்தி ஏற்பட வாய்ப்புள்ளது. படுத்த படுக்கையாக இருக்கும் போது இந்த விரக்தி மேலும் அதிகரிக்கும். எனவே இந்த மாதிரியான சமயங்களில் உங்கள் மனநிலையை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
உடல் ரீதியாக உண்டாகும் பாதிப்புகள்:
முதுகுத்தண்டு அனிச்சை
முதுகுத் தண்டு சேதமடையும் போது, மூளையில் இருந்து வரும் செய்தியைப் பெற முடியாமல் போகலாம். காயத்தின் நிலைக்கு கீழே உள்ள முதுகெலும்பு நரம்புகள் சிக்னல்களைப் பெறுகின்றன. இதனால் ரிஃப்ளக்ஸ் இயக்கங்கள் நடக்கலாம்.
முதுகெலும்பு அதிர்ச்சி ஏற்படலாம்
காயத்தின் நிலைக்கு கீழே உள்ள முதுகெலும்பு அனிச்சைகளில் தற்காலிக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையால் வலி நாட்கள் முதல் வாரங்கள் வரை தொடர வாய்ப்பு உள்ளது. முதுகெலும்பு அதிர்ச்சியை தீர்க்க முடியாது. அது தானாகவே சரியாக வேண்டும்.
சுவாசம் மற்றும் இருமல்
முதுகுத்தண்டு காயத்திற்கு பிறகு உதரவிதானம், இண்டர்கோஸ்டல் மற்றும் வயிறு சம்பந்தமான தசைகள் பலவீனம் அடையலாம். இதனால் சுவாசப் பிரச்சினைகள் மற்றும் இருமல் ஏற்படலாம்.
இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் குறைதல்
மூளை தான் பொதுவாக நம் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை கட்டுப்படுத்துகிறது. மூளையில் இருந்து வரும் சிக்னல்கள் முதுகுத் தண்டு வழியாக இரத்த நாளங்களைச் சுருக்கி இதயத் துடிப்பை உயர்த்தி இரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் இயல்பாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க செய்திகளை அனுப்புகிறது. இந்த சமிக்ஞைகளை கடத்த முடியாதபோது, ஒரு நபருக்கு குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மெதுவான இதய துடிப்பு ஏற்படலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











