Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? பூமியின் எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும்
டைஃபாய்டு காய்ச்சல் குணமடைய எத்தனை நாட்கள் ஆகும்?
டைஃபாய்டு காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணம் தி சால்மொனெல்லா டைஃபி (The Salmonella typhi) என்ற பாக்டீாியா ஆகும். அசுத்தமான உணவு மற்றும் கெட்டுப்போன தண்ணீா் மூலமாக டைஃபாய்டு காய்ச்சல் பரவுகிறது. இந்தக் காய்ச்சல் பரவ 1 முதல் 3 வாரங்கள் ஆகின்றன. உடலில் அதிகப்படியான வெப்பம், தலைவலி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை இந்தக் காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்.
டைஃபாய்டு காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான காலம், அந்த நோயின் தீவிரம் மற்றும் அதற்கு கொடுக்கப்படும் ஆண்டிபயாட்டிக் மருந்துகள் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. மிதமான காய்ச்சலுக்கு, வாய் வழியாக எடுத்துக் கொள்ளப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளான ஐப்ரோஃப்லோக்ஸாசின் அல்லது அமோசிக்சிலினன் போன்றவற்றை 7 முதல் 14 நாட்கள் கொடுக்கலாம்.

தீவிரமான டைஃபாய்டு காய்ச்சல் ஏற்பட்டால், நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து, செஃப்ட்ரியாசோன் அல்லது அசித்ரோமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை 10 முதல் 14 நாட்கள் வரைக் கொடுக்கலாம். ஒருவேளை நோயாளிக்கு பலவிதமான உடல் பிரச்சினைகள் இருந்தால், இன்னும் நீண்ட நாட்கள் மருத்துவ சிகிச்சையைத் தொடர வேண்டும்.
உாிய நேரத்தில் நோயை அறிந்து கொள்ளலும், தகுந்த சிகிச்சை அளிப்பதும், டைஃபாய்டு காய்ச்சலைக் குணப்படுத்துவதற்கு முக்கியமான தேவையாகும். அதன் மூலம் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். கெட்டுப்போன உணவு அல்லது தண்ணீரை எடுத்துக் கொண்ட பின்பு காய்ச்சல், தலைவலி அல்லது வயிற்றில் அசௌகாியம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை நாட வேண்டும்.
குடும்பத்தினாின் ஆதரவு
குடும்பத்தினாின் பராமாிப்பு, போதுமான ஓய்வு மற்றும் உடலில் இருந்து நீா்ச்சத்து வெளியேறுதல் போன்றவை சிறப்பாக இருந்தால், டைஃபாய்டு காய்ச்சலின் அறிகுறிகளை எளிதில் கட்டுப்படுத்தலாம். அடுத்தவா்களுக்கு காய்ச்சல் பரவாமல் இருக்க வேண்டும் என்றால், நோயாளிகள் மிகவும் சுகாதாரத்தோடு இருக்க வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். அடுத்தவரோடு உணவு மற்றும் பாத்திரங்களைப் பகிா்வதைத் தவிா்க்க வேண்டும். கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்.
டைஃபாய்டு காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
டைஃபாய்டு காய்ச்சல் வருவதைத் தடுக்க முடியும். அதற்கு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். அசுத்தமான உணவு மற்றும் தண்ணீா் உட்கொள்வதைத் தவிாக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் உணவை சமைக்க வேண்டும். முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதன் மூலம் டைஃபாய்டு காய்ச்சல் வருவதைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications