Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சோம்பு விதைகள் இப்படி உபயோகிப்பது உங்கள் எடையை சர சரனு குறைக்க உதவுமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
எடை இழப்பு என்பது பல சிக்கலான செயல்முறைகளை உள்ளடக்கியது. உணவுமுறை மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முதல் உடற்பயிற்சி வரை, அனைத்தும் அவரவர் உடலமைப்பைப் பொறுத்து கண்டறியப்பட வேண்டும். சரியான உணவு மற்றும் பானங்களின் கலவை எடையை குறைக்க உதவுகிறது.
நமது சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்களில் பல நமக்கேத் தெரியாமல் நமது எடையைக் குறைக்க உதவுகிறது. சோம்பு அல்லது பெருஞ்சீரகம் விதைகள், வீட்டு மசாலாப் பொருட்களில் ஒரு முக்கிய பொருளாகும், இது பல மருத்துவ நன்மைகளை வழங்குகிறது. ஆயுர்வேதம் சோம்பு விதைகளை அதன் பல நன்மைகளுக்காக பரிந்துரைக்கிறது.

சோம்பு எப்படி எடையைக் குறைக்க உதவுகிறது?
சோம்பு அல்லது பெருஞ்சீரக விதைகள் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் தாதுக்களின் வளமான மூலமாகும். ஊட்டச்சத்துக்களின் சக்தியாக விளங்கும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கூடுதல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
கூடுதல் கொழுப்பைக் குறைக்கும்
சோம்பு அல்லது பெருஞ்சீரகம் பல ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இது உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், உடலில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது.
வயிற்றை நிறைவாக வைத்திருக்கிறது
பெருஞ்சீரகம் விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் பசியைக் குறைக்க உதவுகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது
நார்ச்சத்துள்ள நிறைந்த மசாலாப் பொருளாக இருப்பதால், இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் செரிமான நொதிகளின் உற்பத்திக்கு உதவுகிறது.
நச்சுக்களை நீக்குகிறது
பெருஞ்சீரகம் விதைகள் ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும், அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், அதனால் ஏற்படும் சேதத்தையும் குறைக்கிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
பெருஞ்சீரக விதைகள் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது ஆற்றலை விரைவாக செயலாக்க உதவுகிறது மற்றும் அதிகளவு கொழுப்பை எரிக்கிறது.
எடை இழப்புக்கு பெருஞ்சீரக விதைகளை எவ்வாறு உட்கொள்வது?
பெருஞ்சீரகம் தண்ணீர்
ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் ஒரு கைப்பிடி பெருஞ்சீரகம் விதைகளை இரவு முழுவதும் அதில் ஊற வைக்கவும். பின்னர் காலையில் விதைகளை வடிகட்டி விட்டு தண்ணீரை முதலில் குடிக்கவும்.
பெருஞ்சீரகம் தேநீர்
மூலிகை டீ மற்றும் க்ரீன் டீ போன்றவை எடை இழப்பில் முக்கியமானவை. இந்த தேநீரை தயாரிப்பது, சூடான நீரில் ஒரு தேக்கரண்டி அல்லது இரண்டு தேக்கரண்டி சோம்பு விதைகளைசேர்க்கலாம். இதனை நீண்ட நேரம் கொதிக்க வைக்க வேண்டாம், சுவைக்காக புதினா இலைகள், இஞ்சி மற்றும் தேன் சேர்க்கவும். இந்த தேநீருடன் சரியான உடற்பயிற்சிகளை செய்வது நல்ல பலன்களை அளிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

