Latest Updates
-
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம்
நைட் டைம்-ல காலில் இந்த அறிகுறி தெரியுதா? அப்ப உடம்புல கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
High Cholesterol Symptoms In Tamil: உடலின் சீரான மற்றும் மென்மையான செயல்பாட்டிற்கு கொலஸ்ட்ரால் இன்றியமையாதது. ஏனெனில் கொலஸ்ட்ரால் புதிய செல்களை உருவாக்கவும், அத்தியாவசிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் மிகவும் அவசியம்.
ஆனால் இந்த கொலஸ்ட்ரால் உடலில் அளவுக்கு அதிகமானால், அது உடல் ஆரோக்கியத்தை குறிப்பாக இதய ஆரோக்கியத்தை மோசமாக பாதித்துவிடும். எப்படியெனில், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, அது இதயத்திற்கு செல்லும் தமனிகளில் படிந்து, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, மாரடைப்பு முதல் பல மோசமான இதய பிரச்சனைகளைத் தூண்டும்.

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், நமது உடல் ஒருசில அறிகுறிகளை நமக்கு தெரியப்படுத்தும். அந்த அறிகுறிகள் தெரியும் போது, சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, தேவையான மருந்துகளை உட்கொண்டு, கொலஸ்ட்ராலைக் குறைக்க முயசிக்க வேண்டும். இல்லாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும்.
முக்கியமாக கொலஸ்ட்ரால் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது உடலின் பல பகுதிகளில் அறிகுறிகளை வெளிக்காட்டும். குறிப்பாக கால்களில் ஒருசில அறிகுறிகளை, அதுவும் இரவு நேரத்தில் வெளிக்காட்டும். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
இரவு நேரத்தில் கால்களில் தசைப்பிடிப்புகள்
உங்களுக்கு தினமும் இரவு நேரத்தில் மட்டும் கால்களில் தசைப்பிடிப்புகள் ஏற்படுகிறதா?அப்படியானால் இதயத்திற்கு செல்லும் தமனிகளில் அதிகப்படியான கொழுப்புக்கள் படிந்து, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, போதுமான இரத்தத்தை வழங்கவிடாமல் தடுக்கிறது என்று அர்த்தம். எனவே உங்கள் கால்களில் தினமும் இரவு நேரத்தில் மட்டும் கடுமையான தசைப்பிடிப்புகள் ஏற்படுகிறது என்றால், உடனே மருத்துவரை அணுகி, இதுக்குறித்து அவரிடம் தெரிவியுங்கள்.
கால் எரிச்சல் அல்லது வலி
இரவு நேரத்தில் உங்கள் பாதங்கள் நெருப்பில் வைத்தது போன்று எரிகிறதா அல்லது எரிச்சலுடன் கடுமையான வலியையும் சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இப்படியான வலி போதுமான ஓய்வு எடுக்கும் போது சரியாகிவிடும். ஆனால் சிறிது நேரம் நடந்தால், நின்றால் மீண்டும் வலி ஆரம்பித்துவிடும். இப்படி வலி ஏற்படுவதற்கு காரணமாக, கொலஸ்ட்ரால் தேக்கத்தால், கால்களில் போதுமான இரத்த ஓட்டம் இல்லாதது தான். எனவே இந்த அறிகுறியை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
பாதங்கள் ஜில்லென்று இருப்பது
உங்கள் பாதங்கள் இரவு நேரத்தில் மிகவும் ஜில்லென்று இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆய்வுகளின் படி, உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால் வெளிப்படும் முக்கியமான மற்றும் ஆரம்ப கால அறிகுறி தான் பாதங்கள் ஜில்லென்று இருப்பது. எனவே இப்படி உங்கள் பாதங்கள் ஜில்லென்று இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
கால்களின் சரும நிறத்தில் மாற்றம்
உங்கள் கால்களின் நிறம் திடீரென்று வழக்கத்தை விட வித்தியாசமாக மாறிக் கொண்டிருக்கிறதா? அப்படியானால் உங்கள் உடலில் வழக்கத்தை விட அதிகளவில் கொலஸ்ட்ரால் உள்ளது என்று அர்த்தம். இப்படி சரும நிறம் மாற காரணம், கால்களில் இரத்த ஓட்டம் குறைவது தான். மேலும் கால்களில் உள்ள முடியின் வளர்ச்சியும் குறையக்கூடும். முக்கியமாக கால்களின் சரும பளபளவென்றும், கருமையாகவும் மாறுவதைக் கண்டால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
கால்களில் உள்ள காயங்கள் ஆறாமல் இருப்பது
அதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் இருந்தால் வெளிப்படும் ஒரு அசாதாரண அறிகுறி தான் கால்களில் காயங்கள் ஏற்பட்டால் அது விரைவில் ஆறாமல் இருப்பது. காயங்கள் ஏற்பட்ட இடத்தில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான், அந்த காயம் விரைவில் ஆறும். ஆனால் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அந்த கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தைக் குறைத்து, காயங்கள் ஆறுவதைத் தாமதப்படுத்தும். எனவே இந்த அறிகுறியை சந்தித்தாலும் உடனே கவனியுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications